மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அரசு மின் சந்தை தளம், பாதுகாப்புத் துறை கணக்கு சேவைகள் பிரிவு பயிற்சி அதிகாரிகளுக்கு, அரசு மின் சந்தை தளம் எனப்படும் ஜெம் மூலம் பொது கொள்முதலை அதிகரிப்பது தொடர்பான வழிகாட்டுதல் அமர்வைப் புதுதில்லியில் நடத்தியது. அரசு மின் சந்தை தளத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு மிஹிர் குமார் தமது உரையில், டிஜிட்டல் முறையிலான கொள்முதல் என்பது வெளிப்படையான, பொறுப்புணர்வுடன் கூடிய …
Read More »சர்வதேச சிறுத்தைகள் தினத்தையொட்டி வனவிலங்கு ஆர்வலர்களுக்குப் பிரதமர் வாழ்த்து
சர்வதேச சிறுத்தைகள் தினமான இன்று (04.12.2025), சிறுத்தைகளைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைத்து வனவிலங்கு ஆர்வலர்களுக்கும் வனவிலங்குப் பாதுகாவலர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்த அற்புதமான விலங்கைப் பாதுகாப்பதற்கும், அது செழித்து வளரக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் மத்திய அரசு சிறுத்தைகள் திட்டத்தைத் தொடங்கியதை அவர் குறிப்பிட்டுள்ளார். இழந்த சுற்றுச்சூழல் பாரம்பரியத்தை மீட்டெடுப்பதற்கும், நமது பல்லுயிர் சூழலை வலுப்படுத்துவதற்கும் இது ஒரு …
Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய விருது 2025-ஐ குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (2025, டிசம்பர் 03) புதுதில்லியில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், மாற்றுத்திறனாளிகள் சமமான தகுதியுடையவர்கள் என்று கூறினார். சமூகம் மற்றும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் அவர்களுடைய சமமான பங்களிப்பை உறுதி செய்வதை தொண்டு சார்ந்த அம்சமாக இன்றி, சம்பந்தப்பட்டவர்களின் கடமை என்று குறிப்பிட்டார். மாற்றுத்திறனாளிகளின் சமமான பங்கேற்புடன் மட்டுமே ஒரு சமூகம் உண்மையாக வளர்ச்சியடைந்ததாகக் கருத முடியும் என்று அவர் …
Read More »போர்க்கப்பல் தயாரிப்பு மற்றும் கையகப்படுத்தல் கட்டுப்பாட்டு அலுவலராக வைஸ் அட்மிரல் சஞ்சய் சாது பொறுப்பேற்பு
வைஸ் அட்மிரல் சஞ்சய் சாது போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் கையகப்படுத்துதல் பிரிவின் கட்டுப்பாட்டு அலுவலராக 2025 நவம்பர் 28 அன்று பொறுப்பேற்றார். பணி ஓய்வு பெறும் வைஸ் அட்மிரல் ராஜாராம் சுவாமிநாதனிடமிருந்து அவர் இப்பொறுப்பை ஏற்றுள்ளார். 1987-ம் ஆண்டு கடற்படையில் இணைந்த திரு சஞ்சய் சாது, இயந்திர பொறியியலில் முதுகலை பட்டமும், பாதுகாப்பு உத்தி தொடர்பாக எம்ஃபில் பட்டமும் பெற்றவர். 38 ஆண்டுகளுக்கும் மேலான தனது கடற்படை அனுபவத்தில், கொடி அதிகாரி பல முக்கிய பிரிவுகளின் செயல்பாடு உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராட்டில், போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா, ஐஎன்எஸ் துனகிரி ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார். கொடி அதிகாரியாக அவர் பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு, அவர் மும்பை கடற்படை கப்பல் உற்பத்தி பிரிவில் கூடுதல் பொது மேலாளர், கார்வார் கடற்படை கப்பல் பழுதுபார்க்கும் பிரிவின் கண்காணிப்பாளர், புதுதில்லி கடற்படை தலைமையகத்தில் கடல்சார் பொறியியல் முதன்மை இயக்குநர் உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். கொடி அதிகாரியாகப் பொறுப்பேற்ற பின்னர், அவர் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவின் கூடுதல் இயக்குநர் தலைவர், கிழக்கு கடற்படை கட்டளையின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி, விசாகப்பட்டினம் கப்பல்கட்டும் தளத்தின் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். மேற்கு, கிழக்கு கடற்படை பிரிவுகளில் உள்ள இரண்டு முக்கிய கப்பல் கட்டும் தளங்களுக்குத் தலைமை வகித்த பெருமையும், மேற்கு, கிழக்கு கடற்படை கட்டளைகளின் தலைமை தொழில்நுட்பப் பணி அதிகாரியாக பணியாற்றிய பெருமையும் கொடி அதிகாரிக்கு உண்டு. இவர் கோவாவின் கடற்படைப் போர் கல்லூரியின் முன்னாள் மாணவர். பல்வேறு நிலைகளில் சிறப்பாகச் சேவை செய்ததற்காக, குடியரசுத் தலைவரின் மதிப்புமிக்க அதி விஷிஷ்ட் சேவா பதக்கம், நௌசேனா பதக்கம் ஆகியவற்றை இவர் பெற்றுள்ளார்.
Read More »உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி நடைபெறும் தேசிய அளவிலான நிகழ்ச்சி – மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா தலைமை வகிக்கவுள்ளார்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா நாளை (2025 டிசம்பர் 01) புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறும் 2025-ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்கவுள்ளார். சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இதில் கலந்துகொள்வார்கள். இது ஹெச்ஐவி தடுப்பு, சிகிச்சை, பராமரிப்பு ஆகியவற்றுக்கான தேசிய அளவிலான நடவடிக்கைகளை விரைவுபடுத்துதலில் மத்திய அரசின் அசைக்க …
Read More »குருதேக் பகதூர்ஜியின் 350-வது தியாக தினம்: குருக்ஷேத்திரத்தில் பிரதமர் உரை
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இன்று ஹரியானாவின் குருக்ஷேத்திரத்தில் நடைபெற்ற ஸ்ரீ குருதேக் பகதூர்ஜியின் 350-வது ஷஹீதி திவஸ் (தியாக தினம்) நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றினார். காலையில் அயோத்தியிலும் மாலையில் குருக்ஷேத்திரத்திலும் இருப்பதன் மூலம் இந்தியாவின் பாரம்பரியம் சங்கமிப்பதாக அவர் குறிப்பிட்டார். சமீபத்தில் அயோத்தியில் தர்ம துவஜம் நிலைநாட்டப்பட்ட வேளையில், சீக்கிய சங்கத்திடமிருந்து ஆசிகளைப் பெறும் வாய்ப்பு கிடைத்ததாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். குருக்ஷேத்திரத்தின் புண்ணிய பூமியில் நீதியைக் …
Read More »பிரதமர் சாஃப்ரான் விமான எஞ்சின் சர்வீசஸ் இந்தியா தொழிற்சாலையை நவம்பர் 26 ஆம் தேதி திறந்து வைக்கிறார்
பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 26-ம் தேதி காலை 10 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஜிஎம்ஆர் விண்வெளி மற்றும் தொழில்துறை பூங்கா – சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள சாஃப்ரான் விமான எஞ்சின் சர்வீசஸ் இந்தியா (SAESI) தொழிற்சாலையை திறந்து வைப்பார். இது ஏர்பஸ் மற்றும் போயிங் 737 விமானங்களுக்கு சக்தி அளிக்கும் லீடிங் எட்ஜ் ஏவியேஷன் ப்ராபல்ஷன் எஞ்சின்களுக்கான சாஃப்ரானின் பிரத்யேக …
Read More »சஞ்சார் சாத்தி அக்டோபரில் 50,000-க்கும் மேற்பட்ட தொலைபேசிகளை மீட்டெடுக்க உதவியுள்ளது
மத்திய தொலைத்தொடர்புத் துறை, அதன் டிஜிட்டல் பாதுகாப்பு முயற்சியான சஞ்சார் சாத்தி மூலம் , இந்தியா முழுவதும் 50,000-க்கும் மேற்பட்ட தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட மொபைல் கைபேசிகளை அக்டோபர் மாதத்தில் மீட்டெடுக்க உதவியுள்ளது என்று அறிவித்துள்ளது. இந்த சாதனை குடிமக்களின் டிஜிட்டல் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. நாடு தழுவிய ஒட்டுமொத்த மீட்பு 7 லட்சம் என்ற …
Read More »தேசிய போர் நினைவுச்சின்னத்தில் என்சிசி-ன் 78-வது நிறுவன தின நிகழ்ச்சிகளை பாதுகாப்புத்துறை செயலாளர் தொடங்கிவைத்தார்
தேசிய மாணவர் படை (என்சிசி), அதன் 78-வது நிறுவன தினத்தை நவம்பர் 23, அன்று நாடு முழுவதும் கொண்டாடவுள்ளது. கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, நவம்பர் 22 அன்று புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் ஒரு புனிதமான மலர்வளையம் வைக்கும் விழா நடைபெற்றது, இதில் பாதுகாப்புத் துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் மற்றும் என்சிசி தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் ஆகியோர் முழு அமைப்பின் சார்பாகவும் வீரமரணம் அடைந்த …
Read More »புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் நடைபெற்ற ஆசிய- பசிபிக் பேரிடர் தகவல் மேலாண்மை மேம்பாட்டு மையத்தின் 10-வது அமர்வு
உள்ளடக்கிய பேரிடர் அபாய தரவு நிர்வாகம் குறித்த ஆசிய-பசிபிக் பேரிடர் தகவல் மேலாண்மை மேம்பாட்டு மையத்தின் 10-வது அமர்வு புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இந்தியக் குழுவிற்கு உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தலைமை தாங்கினார். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினரும் துறைத் தலைவருமான திரு ராஜேந்திர சிங் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயலாளர் திரு மணீஷ் பரத்வாஜ் ஆகியோரும் இந்தக் …
Read More »
Matribhumi Samachar Tamil