மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மண்டல மையத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று மையத்தை மத்திய சமூக நீதி, அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் திரு விரேந்திர குமார் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை இந்த நிகழ்ச்சி பிரதிபலிப்பதாக கூறினார். அது மட்டுமின்றி, உயர்தர சேவைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கான நமது முயற்சிகளை வலுப்படுத்துகிறது என …
Read More »மருத்துவ ஜவுளி தரக்கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவதற்கான காலக்கெடு நீட்டிப்பு
மத்திய அரசின் ஜவுளி அமைச்சகம், மருத்துவ ஜவுளிகளுக்கான தரக் கட்டுப்பாட்டு ஆணையை (QCO) வெளியிட்டுள்ளது. மருத்துவ ஜவுளி (தரக் கட்டுப்பாடு) ஆணை, 2024-ன் கீழ் வரும் முக்கியத்துவம் வாய்ந்த தயாரிப்புகளின் பாதுகாப்பு, செயல்திறனை உறுதி செய்வதற்காக அதற்கான சோதனை நெறிமுறைகள், முத்திரையிடல் தேவைகள் உள்ளிட்ட கடுமையான தரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. சிறு, நடுத்தர நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரத்யேகமான சவால்களை அங்கீகரிக்கும் வகையில், மத்திய அமைச்சகம் இந்த தரக்கட்டுப்பாடுகளுக்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. …
Read More »இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு பகுதியிலும் சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக முன்னேற விரும்பும் மாவட்டம் (ஆஸ்பைரேஷனல் மாவட்டம்) என்ற கருத்தியல் உருவானது : டாக்டர் ஜிதேந்திர சிங்
மோடி அரசின் முன்னேற விரும்பும் மாவட்டம் என்ற கருத்தியல், இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு பகுதியிலும் சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்ற உறுதிப்பாட்டால் உருவானதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். தமது மூன்று நாள் பயணத்தின் மூன்றாவது நாளில், அமைச்சர், கடப்பாவில் முன்னேற விரும்பும் மாவட்டத் திட்டம் குறித்த விரிவான ஆய்வை மேற்கொண்டார். மேலும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் உரையாடி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து விவாதித்தார். …
Read More »புத்தொழில்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், புத்தொழில் கொள்கை அமைப்புடன் டிபிஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) வியாழக்கிழமை அன்று இந்தியாவின் முன்னணி புத்தொழில் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புகழ்பெற்ற புத்தொழில் கொள்கை அமைப்புடன் (எஸ்பிஎஃப்) வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய புத்தொழில் வாரக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஜனவரி 15-16 தேதிகளில் பாரத் மண்டபத்தில் நிறுவனர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்து. இந்த நிகழ்வு டிபிஐஐடி, எஸ்பிஎஃப் இடையே …
Read More »சனாதனம் என்பதை இந்து என்று குறிப்பிடப்படுவது குழப்பமானதாகவும், முரண்பாடாகவும் வேதனையாகவும் உள்ளது: குடியரசு துணைத்தலைவர்
இந்து, சனாதனம் போன்றவை தொடர்பான குறிப்புகள் பாரதத்தில் குழப்பமானதாகவும், முரண்பாடாகவும் வேதனையாகவும் உள்ளது என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள மாநாட்டு மையத்தில் இன்று நடைபெற்ற வேதாந்தாவின் 27-வது சர்வதேச மாநாட்டில் தொடக்க உரையாற்றிய திரு தன்கர், “நம் பழமையான நாகரிகங்களில் ஒன்று, பல்வேறு வழிகளில் தனித்துவமான, இணையற்ற நாகரீகமாகும். இந்தியாவில் சனாதனம் என்று குறிப்பிடும்போது, இந்து என்ற குறிப்பு புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு குழப்பமானதாகவும், முரண்பாடாகவும், வேதனையாகவும் உள்ளது என்று தெரிவித்தார். இந்த வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்குப் பதிலாக, மக்கள் அதற்கு எதிரான மனநிலையில் உள்ளனர். இந்த ஆன்மீக பூமியில் இருக்கும் சிலர், வேதாந்தம், சனாதனம் தொடர்பான நூல்களை பிற்போக்குத்தனமானவை என்று நிராகரிக்கின்றனர். அவர்கள் அது குறித்து அறிந்து கொள்ளாமல் அதனை நிராகரிக்கின்றனர். இந்த நிராகரிப்பு பெரும்பாலும் வக்கிரமான காலனிய மனநிலைகளை கொண்டதாகவும், நமது அறிவுசார் பாரம்பரியத்தைப் பற்றிய புரிதல் இல்லாத தன்மையையும் எடுத்துரைக்கின்றன. மதச்சார்பின்மை என்ற கருத்தாக்கத்தை திரித்து கூறுவதன் பாதகமான சிந்தனைகளை கொண்டுள்ளனர். இது மிகவும் ஆபத்தானது. இதுபோன்ற செயல்களில் இருந்து பாதுகாத்து கொள்ள மதச்சார்பின்மை ஒரு கேடயமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த அடிப்படை கூறுகளை மக்களிடையே கொண்டு செல்வது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும்” என்று அவர் மேலும் கூறினார்.
Read More »கேஎல்இ புற்றுநோய் மருத்துவமனையை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்
கர்நாடக மாநிலம் பெலகாவியில் கேஎல்இ புற்றுநோய் மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜனவரி 3, 2025) திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் , உலகளாவிய ஆய்வின்படி, உலகில் இறப்புக்கு புற்றுநோய் ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்று கூறினார். 2022-ம் ஆண்டில், உலகளவில் 20 மில்லியன் புதிய புற்றுநோயாளிகள் இருந்ததாகவும் 9.7 மில்லியன் இறப்புகள் புற்றுநோயால் ஏற்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 100 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. ஐ.சி.எம்.ஆர் நடத்திய ஆய்வின்படி, 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025-ம் ஆண்டில் …
Read More »2025 ஜனவரி மாதத்தில் புள்ளியியல் அமைச்சகத்தின் ஆய்வுகள் தொடக்கம்
மத்திய அரசின் புள்ளியியல் – திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகம் 2025 ஜனவரி முதல் பின்வரும் ஆய்வுகள், கணக்கெடுப்புகளை நடத்துவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது:- *என்எஸ்எஸ் 80 வது சுற்று: சமூக நுகர்வு- சுகாதாரம் ஆய்வு (ஜனவரி முதல் டிசம்பர் 2025 வரை) *விரிவான தொலைத்தொடர்பு திறன் ஆய்வு(ஜனவரி முதல் மார்ச் 2025 வரை) *கல்வி (ஏப்ரல் முதல் ஜூன் 2025 வரை); *குறிப்பிட்ட கால …
Read More »டிஎன்டி சமூகங்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த கூட்டம் – மத்திய அமைச்சர் திரு வீரேந்திர குமார் தலைமை வகித்தார்
சீர்மரபு பிரிவினர், நாடோடி சமூகங்கள், பகுதி நாடோடி சமூகங்களின் (DNT – டிஎன்டி) நலன், மேம்பாடு குறித்து கவனம் செலுத்தும் முக்கிய கூட்டம் மத்திய சமூக நீதி – அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தலைமையில் புதுதில்லியில் இன்று (02.01.2025) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே, சமூக நீதி – அதிகாரமளித்தல் துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். டிஎன்டி …
Read More »மெலடோனின் ஹார்மோனின் நானோ-உருவாக்கம் பார்கின்சன் நோய்க்கு சிகிச்சைத் தீர்வாக அமையக் கூடும்
இருளுக்கான எதிர்வினையாக மூளை உற்பத்தி செய்யும் இருண்ட ஹார்மோன் என்று அழைக்கப்படும் மெலடோனின் ஹார்மோனின் நானோ-உருவாக்கம் மேம்பட்ட ஆக்ஸிஜனேற்ற, நரம்பு பாதுகாப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பார்கின்சன் நோய்க்கு (பிடி) சாத்தியமான சிகிச்சை தீர்வாக இருக்கலாம் என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். பார்கின்சன் நோய் (பிடி) என்பது மூளையில் டோபமைன் சுரக்கும் நியூரான்கள் இறப்பதால் ஏற்படும் பொதுவான நரம்பியல் கோளாறுகளில் ஒன்றாகும். மெலடோனின் ஹார்மோன் பார்கின்சன் நோய்க்கான எதிர் …
Read More »மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் ஒரே நாளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு
முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தின் கீழ், தனது மூன்று நாள் பயணத்தின் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று ஒய்.எஸ்.ஆர் கடப்பாவில் முற்பகல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மத்திய அமைச்சர்கள் முன்னேற விரும்பும் மாவட்டங்களில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும், எதிர்கால வளர்ச்சிக்கான உத்திகளை வழிநடத்துவதற்கும் அந்தந்த மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க நேரத்தைச் செலவிட வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலுக்கேற்ப இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.2018-ல் தொடங்கப்பட்ட முன்னேற …
Read More »
Matribhumi Samachar Tamil