2025-26-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் தயாரிப்புக்காக புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் குழுவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நித்தி ஆயோக்கில் கலந்துரையாடினார். “உலகின் நிச்சயமற்ற காலகட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை பராமரித்தல்” என்ற கருப்பொருளில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கலந்து கொண்ட நிபுணர்களின் ஆழமான கருத்துக்களுக்கு பிரதமர் தமது உரையில் நன்றி தெரிவித்தார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடையச் செய்வதில் கவனம் செலுத்தும் வகையில் மனப்பாங்கை முற்றாக …
Read More »வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான இலக்கை நோக்கிய பாதை
“வாழ்வது எளிதான இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. அதனை முன்னெடுத்து செல்வதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. ~ பிரதமர் நரேந்திர மோடி சிறந்த நிர்வாகம் என்பது, அனைவரையும் பங்கேற்கச் செய்து, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பொறுப்புணர்வுடன், வெளிப்படையான பயனுள்ள, திறன்வாய்ந்த, சமத்துவத்துடன், சட்டத்தின் ஆட்சியை பின்பற்றுவதாகும் என்று ஐநா சபை குறிப்பிடுகிறது. மக்களின் வாழ்க்கை முறையை எளிதாக்குவதே சிறப்பான நிர்வாகத்தின் நோக்கமாகும். வளர்ச்சியின் இலக்கு …
Read More »புலனாய்வு அலுவலகத்தின் (உளவுத்துறை -ஐ.பி.) நூற்றாண்டு அறக்கட்டளை சொற்பொழிவு- மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா புதுதில்லியில் இன்று 37 வது புலனாய்வு அலுவலக நூற்றாண்டு அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை செயலாளர், புலனாய்வு அலுவலகத்தின் இயக்குநர், புலனாய்வு அலுவலகத்தின் முன்னாள் இயக்குநர்கள், மத்திய காவல் படைகள், மத்திய ஆயுத காவல் படைகளின் தலைமை இயக்குநர்கள், உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் …
Read More »‘பொன்னான பாரதம்: பாரம்பரியம் மற்றும் வளர்ச்சி’ -2025 குடியரசு தின அணிவகுப்பின் போது கடமைப்பாதையில் அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்படவுள்ளது
ஆண்டு தோறும் குடியரசு தின கொண்டாட்டத்தின் (ஆர்.டி.சி) ஒரு பகுதியாக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசு அமைச்சகங்கள் / துறைகள் கடமைப் பாதையில் தங்கள் அலங்கார ஊர்திகளை காட்சிப்படுத்துகின்றன. இந்த ஆண்டு அலங்கார ஊர்திகளுக்கான கருப்பொருள் ‘பொன்னான பாரதம்: பாரம்பரியம் மற்றும் வளர்ச்சி’ என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து, இது தொடர்பான பல்வேறு அம்சங்களை முடிவு செய்ய ஒரு ஆலோசனை நடைமுறையை பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டது. அலங்கார ஊர்திகளின் தரத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க ஏப்ரல் மாதம் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் …
Read More »உலகின் உணவு உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும்: திரு சிவராஜ் சிங் சவுகான்
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறையின் பங்களிப்பு 18 சதவீதமாக உள்ளது. குறிப்பாக கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில், நாட்டின் வேளாண் துறை பிற நாடுகளைக் காட்டிலும் வலுவானதாக இருந்தது என்பதை உலக நாடுகள் அறிந்து கொண்டுள்ளன. இந்தத் துறையை வலுப்படுத்த மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவை உலகின் உணவு உற்பத்தி மையமாக உருவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் …
Read More »முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பிறந்த நாளையொட்டி பிரதமர் அவரை நினைவுகூர்ந்துள்ளார்
முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பிறந்த நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவரை நினைவுகூர்ந்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: “ஏழைகள் மற்றும் விவசாயிகளின் உண்மையான நலன் விரும்பியான முன்னாள் பிரதமர் பாரத ரத்னா சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்குத் தாழ்மையுடன் மரியாதை செலுத்துகிறேன். தேசத்திற்கான அவரது அர்ப்பணிப்பும் சேவையும் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.”
Read More »வேலைவாய்ப்புத் திருவிழாவின்கீழ் மத்திய அரசுத் துறைகள், நிறுவனங்களில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 71,000 -க் கும் மேற்பட்டோருக்கு நியமனக் கடிதங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார்
அரசுத் துறைகள், அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 71,000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலம் இன்று வழங்கினார். வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமரின் உறுதிப்பாட்டை இந்த வேலைவாய்ப்புத் திருவிழா எடுத்துக் காட்டுவதாக உள்ளது. நாட்டைக் கட்டமைப்பது, சுய அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்கு பங்களிப்பதற்கான அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும். வேலைவாய்ப்புத் திருவிழாவில் உரையாற்றிய பிரதமர் , குவைத் …
Read More »‘கடற்படை சிவிலியன்ஸ் ஆண்டு – 2024’ கொண்டாட்டம்
இந்திய கடற்படையின் செயல்பாட்டுத் தயார்நிலையில் கடற்படை சிவிலியன்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை கவுரவிப்பதற்கும் அங்கீகரிப்பதற்கும், 30 டிசம்பர் 2024 அன்று புதுதில்லியில் உள்ள டிஆர்டிஓ பவன் டாக்டர். டிஎஸ் கோத்தாரி ஆடிட்டோரியத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். இந்தியக் கடற்படையானது 2024ஆம் ஆண்டை ‘கடற்படை சிவிலியன்கள் ஆண்டாக’ அறிவித்தது, அதன் நிர்வாகம் மற்றும் அதன் சிவிலியன் பணியாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்துகிறது. இந்த அர்ப்பணிப்பு ஆண்டு, சிவிலியன் மனிதவள நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் சிவிலியன் பணியாளர்களின் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான கவனம் செலுத்தும் நடவடிக்கைகளைக் கண்டது. ஆண்டு முழுவதும், நிர்வாகத் திறனை அதிகரிக்கவும், டிஜிட்டல் மாற்றத்தை தழுவவும், புதுமையான பயிற்சி திட்டங்களை அறிமுகப்படுத்தவும், நலன்புரி செயல்பாடுகளை மேம்படுத்தவும் பல முயற்சிகள் செயல்படுத்தப்பட்டன. ‘கடற்படை சிவிலியன்ஸ் ஆண்டில்’ எட்டப்பட்ட முக்கிய மைல்கற்கள், சிவில் பணியாளர்கள் இயக்குநரகத்திற்கான குடிமக்கள் சாசனம், சிவிலியன் பணியாளர் மேலாண்மை குறித்த திருத்தப்பட்ட மனிதவள கையேடு மற்றும் கடற்படை சிவில் மனிதவள மேலாண்மைக்கான பார்வை ஆவணம் போன்ற முக்கிய கொள்கைகள் மற்றும் ஆவணங்களை வெளியிடுதல் ஆகியவை அடங்கும். கடலில் கப்பல்களில் பணிபுரியும் சிவிலியன் பணியாளர்களுக்கு காப்பீடு வழங்குதல் மற்றும் மும்பையில் உள்ள 21 தொழிற்துறை பிரிவுகளுக்கு சிஜிஎச்எஸ் வசதிகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட நலன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சிறப்புப் பயிலரங்குகள் மற்றும் பயிற்சித் திட்டங்களை நடத்துவதன் மூலம் சிவிலியன் பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் மேம்பாடு வலியுறுத்தப்பட்டது. கடற்படை சிவிலியன்களுக்கான iGOT தளத்தில் பயிற்சி தொகுதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நிதி நன்மைகளை வலுப்படுத்துவதை நோக்கி; பஜாஜ் லைஃப் இன்சூரன்ஸ் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் சிவிலியன் பணியாளர்களின் ஆயுள் காப்பீட்டுக்காக கையெழுத்திடப்பட்டுள்ளது. அனைத்து கடற்படை சிவிலியன்களுக்கும் பாதுகாப்பு சம்பள தொகுப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. ‘கடற்படை சிவிலியன்கள் ஆண்டு’, தேசத்தின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு சிறப்பை உறுதி செய்வதில் அதன் சிவிலியன் பணியாளர்களின் முக்கிய பங்கை அங்கீகரிப்பதில் இந்திய கடற்படையின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த முயற்சியானது அனைத்து பங்குதாரர்களுக்கும் வலுவான மற்றும் உள்ளடக்கிய சூழலை வளர்ப்பதற்கான ஒரு சான்றாக விளங்குகிறது.
Read More »வேலைவாய்ப்பு திருவிழா திட்டத்தின் கீழ், மத்திய அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிய நியமனங்களுக்கு 71,000 க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை பிரதமர் டிசம்பர் 23 அன்று விநியோகிக்கிறார்
71,000 க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 23 அன்று காலை 10:30 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் திரண்டிருப்பவர்களிடையே அவர் உரையாற்றுகிறார். வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வேலைவாய்ப்பு திருவிழா அமைந்துள்ளது. தேச கட்டமைப்பு மற்றும் சுய அதிகாரமளித்தல் ஆகியவற்றில் இளைஞர்களின் பங்கேற்புக்கு அர்த்தமுள்ள வாய்ப்புகளை இது வழங்கும். நாடு முழுவதும் 45 இடங்களில் வேலைவாய்ப்பு திருவிழா நடைபெற உள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கான பணி நியமனங்கள் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நியமனங்கள், உள்துறை அமைச்சகம், அஞ்சல் துறை, உயர் கல்வித் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நிதி சேவைகள் துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளில் அமையும்.
Read More »டிசம்பர் 23-ம் தேதி புதுதில்லியில் உள்ள சிபிசிஐ மையத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டில் நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்கிறார்
டிசம்பர் 23ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு புதுதில்லியில் உள்ள சிபிசிஐ மைய வளாகத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை நடத்தும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். கர்தினால்கள், பிஷப்கள் மற்றும் திருச்சபையின் முக்கிய தலைவர்கள் உட்பட கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுடன் பிரதமர் உரையாடுவார். இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியில் பிரதமர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே …
Read More »
Matribhumi Samachar Tamil