Saturday, December 13 2025 | 09:09:15 AM
Breaking News

Regional

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு நிலை குறித்த உயர்மட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார்

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு நிலை குறித்து புதுதில்லியில் இன்று நடைபெற்ற உயர்மட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும், கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, மத்திய உள்துறை செயலாளர், உளவுத்துறை இயக்குநர், ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர், உள்துறை அமைச்சகம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் கலந்து …

Read More »

திரிபுராஅரசால் 2,800-க்கும் மேற்பட்ட பணிநியமனக் கடிதங்களை காணொலிக்காட்சியாக வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்

திரிபுரா அரசால் 2,800-க்கும் மேற்பட்ட பணிநியமனக் கடிதங்களை காணொலிக்காட்சியாக வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த காலங்களில் ஒரு கட்சியின் பணியாளர்களுக்கு மட்டுமே திரிபுராவில் பணிகள் கிடைத்தன என்றும், தற்போது திரிபுரா அரசு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன், எந்த பாகுபாடும், பரிந்துரையும் அல்லது ஊழலும் இல்லாமல் பணிகளை வழங்கி வருகிறது என்று தெரிவித்தார். தற்போதைய திரிபுரா முதலமைச்சர் பேராசிரியர் …

Read More »

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதைப் பாக்கியமாக கருதுகிறேன்: பிரதமர்

பிரதமர் திரு நரேந்திர மோடி பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் இன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், “பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வது தனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுவதாக தெரிவித்துள்ளார். திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது தெய்வீக இணைப்பின் தருணமாக அமைந்துள்ளது. இதில் பங்கேற்ற கோடிக்கணக்கான மக்களைப் போலவே,எனது மனதில் பக்தி பரவசம் நிறைந்துள்ளது. …

Read More »

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு பிரதமர் பிப்ரவரி 5-ம் தேதி பயணம் மேற்கொள்கிறார்

பிரதமர் திரு நரேந்திர மோடி பிப்ரவரி 5-ம் தேதி பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா 2025-க்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11 மணியளவில், அவர் சங்கமத்தில் புனித நீராடி, கங்கை அன்னைக்கு பிரார்த்தனை செய்வார். பௌஷ் பூர்ணிமாவில் (ஜனவரி 13, 2025) தொடங்கிய மகா கும்பமேளா 2025, உலகின் மிகப்பெரிய ஆன்மீக மற்றும் கலாச்சார ஒன்று கூடலாகும். இது உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்களை ஈர்க்கிறது. மகா கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி மகா சிவராத்திரி வரை தொடரும். இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் தமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, புனித யாத்திரைத் தலங்களில் …

Read More »

மகாகும்பமேளாவில் மத்திய மக்கள் தொடர்பகத்தின் கண்காட்சியை தலைமை இயக்குநர் ஆய்வு செய்தார்

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள்  தொடர்பகத்தின் (சிபிசி) தலைமை இயக்குநர் திரு யோகேஷ் குமார் பவேஜா, பிரயாக்ராஜின் மஹாகும்பில் அமைக்கப்பட்டுள்ள ‘ஜன்பகிதாரி சே ஜன்கல்யான்’ எனும் மல்டிமீடியா கண்காட்சியைப் பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அரசின் திட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள் மற்றும் சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கண்காட்சியைப் பார்வையிட்ட பிறகு, தலைமை இயக்குநர் , இந்தக் கண்காட்சி இந்திய அரசின் திட்டங்கள் மற்றும் …

Read More »

பிஎஸ்என்எல்-லின் தடையில்லா தகவல் தொடர்பு சேவைகள், பிரயாக்ராஜில் மஹாகும்பமேளாவில் பக்தர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு நிவாரணம் வழங்குகின்றன

தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் கீழ், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நம்பகமான இணைப்பை உறுதி செய்வதற்காக, 2025 மகாகும்பமேளாவில் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிஎஸ்என்எல்  மேளா பகுதியில் பிரத்யேக வாடிக்கையாளர் சேவை மையத்தை அமைத்துள்ளது, அங்கு பக்தர்கள்  தடையில்லா தகவல் தொடர்பு சேவைகளைப் பெறுகின்றனர். கும்பமேளாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு அந்தந்த வட்டங்களில் இருந்து இலவச சிம் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. யாத்ரீகர் யாரேனும் தங்கள் சிம் கார்டை தொலைத்துவிட்டால். மேளா பகுதியிலேயே நாடு முழுவதும் உள்ள அனைத்து வட்டங்களில் இருந்தும் சிம் கார்டுகளை வழங்க பிஎஸ்என்எல் ஏற்பாடு செய்துள்ளது. இந்த சேவை முற்றிலும் இலவசம், யாத்ரீகர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் எளிதாக தொடர்பில் இருக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது.  பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு, பல்வேறு மாநிலங்களில் இருந்து சிம்கார்டுகள் வழங்கப்படுவதால், பக்தர்கள் மட்டுமின்றி, அங்கு நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படையினரும் பயனடைகின்றனர். மகர சங்கராந்தி மற்றும் மௌனி அமாவாசை அன்று அமிர்த நீராடல்களின்  போது, தகவல் தொடர்பு சேவைகளின் தரம் அப்படியே இருந்தது என்றும், அதிக கூட்டம் இருந்தபோதிலும், நெட்வொர்க் எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும், பிரயாக்ராஜ் வணிகப் பகுதிக்கான பிஎஸ்என்எல்- இன் முதன்மை பொது மேலாளர் திரு பி.கே.சிங் குறிப்பிட்டார்.

Read More »

அமிர்த பூந்தோட்டத் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார்

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 1, 2025) அமிர்த பூந்தோட்ட திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்தத் தோட்டம் பிப்ரவரி 2 முதல் மார்ச் 30 வரை பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்படும். பராமரிப்பு நாட்களாகக் கருதப்படும் திங்கட்கிழமைகளைத் தவிர, வாரத்தில் ஆறு நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்தப் பூந்தோட்டத்தைப் பார்வையிடலாம். பிப்ரவரி 5-ம் தேதி (தில்லி சட்டமன்றத்திற்கான வாக்குப்பதிவு …

Read More »

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உத்தரப்பிரதேச முதலமைச்சருடன் தாம் பேசியுள்ளதாகவும், இந்தத் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் திரு மோடி கூறியுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் திரு மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது; “பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவில் நிகழ்ந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. குடும்பத்தினரை …

Read More »

சென்னையில் 14-வது மாநில அளவிலான அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி

தமிழ்நாடு அஞ்சல் வட்டம், தென்னிந்திய அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கத்துடன் இணைந்து சென்னையில் 14-வது மாநில அளவிலான அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி “TANAPEX 2025” ஐ ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை, செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தின் சமுதாயக் கூடத்தில் நடத்துகிறது. “அணிவகுக்கும் அஞ்சல் தலைகள், அணைக்கும் நினைவலைகள்” என்பது இந்தக் கண்காட்சியின் கருப்பொருளாகும். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு என்.முருகானந்தம், 29-ம் தேதி,   தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் தலைமை அஞ்சல் அதிகாரி திருமதி மாரியம்மா தாமஸ் முன்னிலையில், “டான்பெக்ஸ் 2025” அஞ்சல் தலை கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். இக்கண்காட்சியின் …

Read More »

பாலகாட் சுரங்கத்தில் 76-வது குடியரசு தின விழா தேசபக்தியுடன் கொண்டாடப்பட்டது

ஒற்றுமை மற்றும் தேசபக்தி உணர்வுகளோடு மாங்கனீஸ் தாது (இந்தியா) லிமிடெட் அதன் பாலகாட் சுரங்கத்தில் நாட்டின் 76 வது குடியரசு தினத்தை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடியது. இந்நிறுவனத்தின் தலைவர் திரு அஜித் குமார் சக்சேனா தேசியக் கொடியை ஏற்றி வைத்ததுடன் கொண்டாட்டங்கள் தொடங்கின. அவருடன் நிதித்துறை இயக்குநர் திரு ராகேஷ் துமானே; திரு எம்.எம்.அப்துல்லா, இயக்குநர் (உற்பத்தி மற்றும் திட்டமிடல்); திருமதி ரஷ்மி சிங், இயக்குநர் (வர்த்தகம்), திருமதி சுஷ்மா …

Read More »