Sunday, December 28 2025 | 02:22:11 AM
Breaking News

Regional

பிரதமரின் கிசான் மான் தன் திட்டத்தின் பயனாளிகள் தமிழ்நாட்டில் 1,10,582 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்

பிரதமரின் கிசான் மான் தன்  திட்டம் (பி.எம்.கே.எம்.ஒய்), ஒரு மத்திய துறை திட்டமாகும், இது 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கான தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும், இது 60 வயதை எட்டும்போது குறைந்தபட்சம் மாதந்தோறும் ரூ .3000- உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஓய்வூதியத்தை வழங்குகிறது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வயதான காலத்தில் சமூகப் பாதுகாப்பு வளையத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தில் சேரும் வயதைப் பொறுத்து மாதந்தோறும் ரூ.55 …

Read More »

வடகிழக்கு பிராந்தியத்தில் கிராமிய வாழ்வாதாரத் திட்டம்

உலக வங்கி நிதியுதவியுடன் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் வடகிழக்கு ஊரக வாழ்வாதாரத் திட்டம் 30.09.2019 அன்று நிறைவடைந்தது. மிசோரம், நாகாலாந்து, சிக்கிம்,திரிபுரா ஆகிய 4 மாநிலங்களின் 11 மாவட்டங்களில் 58 வளர்ச்சி வட்டாரங்களின் கீழ் உள்ள 1,645 கிராமங்களில் வேலைவாய்ப்பு, சுய வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்காக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பிரிவில் 10462 மாணவ மாணவியருக்கு பல்வேறு வேலைவாய்ப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 28,154 சுய உதவிக் குழுக்கள் மற்றும் 1,212 கிராம கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டதன் மூலமும், 1599 சமூக வளர்ச்சிக் குழுக்கள் உருவாக்கப்பட்டதன் …

Read More »

செம்மொழிகளைப் பாதுகாத்தலும் மேம்படுத்துதலும் தமிழுக்கு 2024-25- ல் ரூ.14 கோடி ஒதுக்கீடு

கீழ்க்கண்ட 11 மொழிகளை செம்மொழிகளாக அரசு அங்கீகரித்துள்ளது. தமிழ் 2004,  சமஸ்கிருதம் 2005, தெலுங்கு 2008, கன்னடம், மலையாளம் 2013, ஒடியா 2014, மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி, பெங்காலி 2024. செம்மொழிகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும்  மத்திய அரசு கல்வி அமைச்சகத்தின் மூலம் நிதி வழங்குகிறது. ஆண்டு வாரியாக செம்மொழி தமிழுக்கு வழங்கப்பட்ட  நிதி (ரூ. லட்சத்தில்) 2020-21 – ரூ.1200.00, 2021-22 – ரூ. 1200.00, 2022-23 – ரூ. 1200.00,  …

Read More »

ஹார்ன்பில் திருவிழா தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாகாலாந்து மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

ஹார்ன்பில் திருவிழா தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாகாலாந்து மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கழிவு மேலாண்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் திருவிழா கவனம் செலுத்துவது குறித்து அவர் மகிழ்ச்சியையும், தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த விழாவிற்கு வருகை தந்தபோது ஏற்பட்ட இனிய நினைவுகளை நினைவுகூர்ந்த திரு மோடி, மற்றவர்களும் இங்கு வந்து நாகா கலாச்சாரத்தின் துடிப்பை அனுபவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நாகாலாந்து முதலமைச்சர் …

Read More »

ஒடிசா வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஒடிசா வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 5, 2024) கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், பட்டம் பெறும் நாளானது மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கான பாதைக்கு வழிவகுக்கிறது என்று கூறினார். உலக சூழலில் தங்கள் அறிவு மற்றும் திறன்களின் கடுமையான சோதனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் மாணவர்களிடம் கூறினார். அவர்கள் பெற்ற அறிவு …

Read More »

புவனேஸ்வரில் புதிய நீதிமன்ற வளாகத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் புதிய நீதிமன்ற வளாகத்தை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 5, 2024) திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், உரிய நேரத்தில் நீதி வழங்கப்படாவிட்டால், அது நீதி கிடைக்காமல் இருப்பதற்கு சமம் என்று கூறினார். வழக்கை ஒத்திவைக்கும் கலாச்சாரத்தால் நலிவடைந்த பிரிவினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அடிக்கடி நீதிமன்றத்திற்கு வருவதற்கு அவர்களிடம் போதிய நிதியோ, ஆள் பலமோ கிடையாது என்று …

Read More »

மகா கும்ப மேளா 2025

உலகின் மிகப்பெரிய ஆன்மீகக் கூடலாகக் கொண்டாடப்படும் மகா கும்பமேளா, நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் பண்டைய பாரம்பரியத்தின் சங்கமமாகும். இந்து புராணங்களில் வேரூன்றிய இந்தப் புனித திருவிழா பன்னிரண்டு ஆண்டுகளில் நான்கு முறை நடைபெறுகிறது . இது ஹரித்வார், உஜ்ஜைன், நாசிக், பிரயாக்ராஜ் என இந்தியாவின் நான்கு மதிப்பிற்குரிய நகரங்களுக்கு இடையே சுற்றிவருகிறது: இவை  கங்கை, ஷிப்ரா, கோதாவரி மற்றும் கங்கை, யமுனை, புராண சரஸ்வதி சங்கமம் ஆகியபுனிதமான நதிகளின் கரையில் …

Read More »

நடப்பாண்டு காரீப் சந்தைப் பருவத்தில், பஞ்சாப் விவசாயிகளிடமிருந்து சுமார் 172 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

பஞ்சாபில், நெல் மாநில அரசு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு ஆதாய விலை கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு, மத்திய அரசு நிர்ணயித்துள்ள சீரான தரவுகளின்படி குறைந்தபட்ச ஆதார விலையில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இருப்பினும், ஏதேனும் இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட உணவு தானியங்களுக்கு தரநிலையில் தளர்வு அளிக்கப்பட்டு சுமூகமாக கொள்முதல் செய்யப்படுகின்றன. 2024-25 காரீப் பருவ காலத்தில், பஞ்சாபில் உள்ள விவசாயிகளிடமிருந்து சுமார் 172 லட்சம் …

Read More »

பூரி கோபபந்து ஆயுர்வேத மகாவித்யாலயாவின் 75-வது ஆண்டு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு

ஒடிசா மாநிலம் பூரியில் இன்று (டிசம்பர் 4, 2024) நடைபெற்ற கோபபந்து ஆயுர்வேத மகாவித்யாலயாவின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் தருணம் இது என்று குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், முப்பரிமாண அச்சு போன்ற தொழில்நுட்பங்கள் ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு  உதவுகின்றன. நாம் தற்போதைய தேவைகளைக் கருத்தில் கொண்டு  எதிர்காலத்திற்குத் தேவையான நடைமுறைகளை …

Read More »