வடகிழக்கு பிராந்தியம் எதிர்கொள்ளும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் தொடர்பாக விவாதிக்க கள வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களாக இருந்த புகழ்பெற்ற குழு உறுப்பினர்களை ஒன்றிணைத்து முதலாவது அஷ்டலட்சுமி பெருவிழாவாவை வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் 2024 டிசம்பர் 7 & 8 தேதிகளில் நடத்தியது. இதில் எட்டு தொழில்நுட்ப அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்தப் பிராந்தியத்தில் நிலையான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், பெண் தலைமைத்துவம், தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது, சுகாதாரம், எரிசக்தி, கலாச்சாரம், கலை, விளையாட்டு போன்றவை குறித்து ஒவ்வொரு நாளும் …
Read More »ஜெவர் விமான நிலையத்தில் முதல் சோதனை விமானம் தரையிறங்குவதை மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு மேற்பார்வையிட்டார்
நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் முதல் சோதனை விமானம் இன்று வெற்றிகரமாக தரையிறங்கியது. இது செயல்பாட்டு தயார்நிலையை நோக்கிய பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு. ராம் மோகன் நாயுடு, கவுதம் புத்த நகர் மக்களவை உறுப்பினர் டாக்டர் மகேஷ் சர்மா மற்றும் ஜெவர் சட்டப்பேரவை உறுப்பினர் திரு. திரேந்திர சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இண்டிகோவால் இயக்கப்படும் இந்த விமானம் …
Read More »ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்ப்பூர் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று “எழுச்சி பெறும் ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாடு 2024” மற்றும் ராஜஸ்தான் உலகளாவிய வர்த்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், ராஜஸ்தானின் வெற்றிப் பயணத்தில் இன்று மற்றுமொரு சிறப்பான நாள் என்று குறிப்பிட்டதோடு ஜெய்ப்பூரில் உள்ள பிங்க் சிட்டியில் நடைபெறும் ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சி மாநாடு …
Read More »குஜராத்தில் ராமகிருஷ்ண மடம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
குஜராத்தில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தா ஜி மகராஜ், ராமகிருஷ்ண மடம் மற்றும் அந்த இயக்கத்தின் துறவிகள், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உள்ளிட்ட அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். சாரதா தேவி, குருதேவ் ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோருக்கு திரு மோடி மரியாதை …
Read More »ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற எல்லைப் பாதுகாப்புப் படையின் 60-வது நிறுவன தின அணிவகுப்பில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற எல்லைப் பாதுகாப்புப் படையின் 60-வது நிறுவன தின அணிவகுப்பில் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் திரு தல்ஜித் சிங் சவுத்ரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். உள்துறை அமைச்சர் தமது உரையில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நாட்டின் பாதுகாப்பு …
Read More »இந்திய விமானப் படையின் மேற்கு பிரிவின் சார்பாக தளபதிகள் மாநாடு-2024
இந்திய விமானப் படையின் மேற்கு பிரிவின் சார்ப்பாக தளபதிகள் மாநாடு 2024, டிசம்பர் 06 & 07 ஆகிய இரண்டு தேதிகளில் புதுதில்லியில் நடைபெற்றது. விமானப் படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். அவரை இந்திய விமானப் படையின் மேற்கு பிரிவின் ஏர் ஆஃபிசர் கமாண்டிங் இன் சீஃப் ஏர் மார்ஷல் பி.எம்.சின்ஹா வரவேற்றார். மாநாட்டின் போது, மேற்கு பிரிவின் தலைவர்களிடையே உரையாற்றிய விமானப் படைத் தலைவர், மேலும் பல …
Read More »டிசம்பர் 9 அன்று பிரதமர் ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்
பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 9 அன்று ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். ஜெய்ப்பூர் செல்லும் அவர், காலை 10:30 மணியளவில், ஜெய்ப்பூர் கண்காட்சி – மாநாட்டு மையத்தில் (ஜேஇசிசி) ரைசிங் ராஜஸ்தான் உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு 2024-ஐ தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, பானிபட் செல்லும் பிரதமர், பிற்பகல் 2 மணியளவில் எல்ஐசி-யின் பீமா சகி யோஜனா திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். மஹாராணா பிரதாப் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். …
Read More »தில்லியில் நடைபெறும் அஷ்டலட்சுமி மகோத்சவம் வடகிழக்குப் பகுதியின் துடிப்பான ஜவுளித் துறை, சுற்றுலா வாய்ப்புகள், பாரம்பரிய கைவினைத்திறன் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது: பிரதமர்
மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா எழுதிய கட்டுரையை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, தில்லியில் நடைபெறும் அஷ்டலட்சுமி மகோத்சவம் வடகிழக்குப் பகுதியின் துடிப்பான ஜவுளித் துறை, சுற்றுலா வாய்ப்புகள், பாரம்பரிய கைவினைத்திறன் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து இணைப்பு, டிஜிட்டல் உள்ளடக்கம், உள்கட்டமைப்பில் முதலீடு ஆகியவற்றின் மூலம் வடகிழக்கு இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது …
Read More »அகமதாபாத்தில் குஜராத் லோக் சேவா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த ‘லோக் சேவா உத்சவ்’ நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்
அகமதாபாத்தில் குஜராத் லோக் சேவா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த ‘லோக் சேவா உத்சவ்’ நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார். திரு அமித் ஷா தமது உரையில், குஜராத் லோக் சேவா அறக்கட்டளை 34 ஆண்டுகளை நிறைவு செய்து 35-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்றார். 35 ஆண்டுகளாக நல்ல நோக்கத்திற்காக தொடர்ந்து உறுதியுடன் பணியாற்றும் எந்தவொரு நிறுவனமும் பாராட்டுக்குரியது என்று அவர் கூறினார். அறிவு என்பது ஒரு சில …
Read More »ராய்ரங்கபூரில் வளர்ச்சித் திட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் அடிக்கல் நாட்டினார்
குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு ஒடிசாவில் பாங்கிரிபோசி-கொருமாஹிசானி, புராமரா-சாக்குலியா, பதம்பஹர்-கெந்துஜர்கர் ஆகிய மூன்று ரயில் பாதைத் திட்டங்களுக்கு இன்று (07.12.2024) அடிக்கல் நாட்டினார். அத்துடன் பழங்குடியினர் ஆராய்ச்சி – மேம்பாட்டு மையம், டான்ட்போஸ் விமான நிலையம், ஒடிசாவின் ராய்ரங்பூரில் உள்ள துணைப்பிரிவு மருத்துவமனையின் புதிய கட்டடம் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இந்த மண்ணின் மகள் என்பதில் தான் எப்போதும் பெருமை கொள்வதாகக் கூறினார். பொறுப்புகள், வேலை பளுமிக்க சூழல் போன்றவை தம்மை …
Read More »
Matribhumi Samachar Tamil