காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் துணைக் குழுக் கூட்டம் நேற்று (12.12.2025) புதுதில்லியில் நடைபெற்றது. தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் (ஜிஆர்ஏபி) கீழ் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தையும் செயல்திறனையும் இக்கூட்டம் ஆய்வு செய்தது. குறிப்பாக தில்லியில் காற்று மாசுபாடு அதிகம் ஏற்படும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. இந்த 23-வது துணைக் குழுக்கூட்டத்தில், தில்லி தேசிய தலைநகர் பகுதிக்குள் வரும், தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா நிர்வாகங்கள் …
Read More »குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Read More »தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மண்டல சுற்றுச்சூழல் மாநாடு 2025 நிறைவடைந்தது
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள்/ குழுக்கள் ஏற்பாடு செய்திருந்த சுற்றுச்சூழல் குறித்த மண்டல மாநாடு 2025, சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நிறைவடைந்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டின் நிறைவு விழாவில், நிறுவன ஒருமைப்பாடு, கொள்கை முதல் செயல் வரையிலான அமலாக்கம் மற்றும் எதிர்வினையிலிருந்து தடுப்பு சுற்றுச்சூழல் நிர்வாகத்திற்கு மாறுதல் முதலியவற்றின் வலிமையான முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய உச்சநீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தொழில்நுட்ப நிர்பந்தம் மட்டுமல்ல, இது ஒரு அரசியலமைப்பு உத்தரவாதம் என்று கூறினார். ஒழுங்குமுறை கட்டமைப்புகள் அவ்வப்போது தோல்வியடைவதற்கு போதுமான சட்டங்கள் இல்லாதது காரணம் அல்ல, மாறாக நிறுவனங்கள் சட்டங்களை செயல்படுத்த தயங்குவது தான் காரணம் என்று அவர் வலியுறுத்தினார். நிறுவன வலிமைப்படுத்தல், ஒருங்கிணைந்த நிர்வாக கட்டமைப்பு, ஆதாரங்களின் அடிப்படையிலான அமலாக்கம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் குடிமக்களின் பங்கேற்பு/ நடத்தை மாற்றம் ஆகிய ஐந்து தூண்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் நம்பகமான முன்னோக்கிய பாதையை நீதிபதி மகாதேவன் சுட்டிக்காட்டினார். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திரு ஏ.ஆர்.எல். சுந்தரேசன் தனது உரையில், சுற்றுச்சூழல் நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் எந்த ஒத்திவைப்பும் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தி, இணக்கத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, மாநாட்டில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் அடிமட்ட அளவில் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே நேர்மறையான விளைவுகள் கிடைக்கும் என்று கூறினார். நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாஹூ, கொள்கையையும் செயலையும் ஒன்றாக இணைப்பதே இன்றைய பிரதான சவாலாக உள்ளது என்று கூறினார்.
Read More »குஜராத்தின் ஏக்தா நகரில் தேசிய பாதயாத்திரையின் நிறைவு விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (6.12.2025) குஜராத்தின் ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமை சிலையில் சர்தார் @150 ஒற்றுமை அணிவகுப்பு – தேசிய பாதயாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், இந்த வரலாற்று சிறப்புமிக்க தேசிய பாதயாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகுந்த கவுரமானது என்று கூறினார். நவம்பர் 26-ம் தேதி அரசியல் சாசன தினத்தன்று தொடங்கிய பாதயாத்திரையின் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார். 1,300- க்கும் மேற்பட்ட பாதயாத்திரைகளில் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பது சர்தார் வல்லபாய் படேல் ஏற்றிய நீடித்த ஒற்றுமையின் சுடரை நிரூபித்தது என்று அவர் குறிப்பிட்டார். 560-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைப்பதில் சர்தார் படேலின் வரலாற்று சாதனையை அவர் நினைவுகூர்ந்தார். “அகண்ட பாரதத்தின் வலுவான அடித்தளத்தை ஒன்றிணைத்து அமைத்ததற்காக இந்தியாவின் இரும்பு …
Read More »மண்டல சுற்றுச்சூழல் மாநாடு – டிசம்பர் 6, 7 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது
சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வின் சார்பில் 2025 டிசம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் மண்டல சுற்றுச்சூழல் மாநாடு – 2025 நடைபெறவுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி திரு பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் நீதிபதி திருமதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த இரண்டு நாள் மாநாட்டை உச்சநீதிமன்ற நீதிபதி திரு …
Read More »காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்
தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையே உள்ள பழமையான கலாச்சார இணைப்பைக் கொண்டாடும் வகையில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நான்காவது ஆண்டு நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் காணொலிக் காட்சி வாயிலாக சிறப்பு செய்தியை வெளியிட்டார். கடந்த 2022- ம் ஆண்டு விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் போது தொடங்கப்பட்ட காசி தமிழ் சங்கமம் முன்முயற்சி, கங்கை மற்றும் காவேரியின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை ஒன்றிணைக்கும் முக்கியமான தேசிய தளமாக …
Read More »அசாம் தினத்தையொட்டி அசாம் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
அசாம் தினத்தையொட்டி அசாம் மாநில சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஸ்வர்கதேயோ சாவோலுங் சுகபா-வின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் நாள் இது என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அசாம் மாநில வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், மத்திய மற்றும் அசாம் மாநில தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகள் அயராது பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். …
Read More »தண்டக்ரம பாராயணத்தை நிறைவு செய்த வேதமூர்த்தி தேவவ்ரத் மகேஷ் ரேகேவுக்கு பிரதமர் வாழ்த்து
சுக்ல யஜுர்வேதத்தின் மத்யந்தினி பிரிவின் 2000 மந்திரங்களைக் கொண்ட தண்டக்ரம பாராயணத்தை 50 நாட்களில் எந்த இடைவேளையும் இல்லாமல் முடித்ததற்காக வேதமூர்த்தி தேவவ்ரத் மகேஷ் ரேகேவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 19 வயதான வேதமூர்த்தி தேவவ்ரத் மகேஷ் ரேகேவின் இந்த சாதனையை வருங்காலத் தலைமுறையினர் நினைவு கூர்வார்கள் என்று திரு. மோடி கூறியுள்ளார். “காசி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், இந்த அசாதாரணமான சாதனை இந்தப் …
Read More »தட்சிண கன்னட மாவட்டம் ஏற்றுமதி மையமாக அறிவிப்பு: மத்திய அமைச்சர் தகவல்
‘மாவட்டங்களை ஏற்றுமதி மையமாக’ (DEH) மாற்றும் மத்திய அரசின் முன்முயற்சியின் கீழ், தட்சிண கன்னட மாவட்டம் ஒரு ஏற்றுமதி மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் உணவுகள் மற்றும் முந்திரி ஆகியன இப்பகுதியின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாக அடையாளப்படுத்தப் பட்டுள்ளன. இது, உள்ளூர் தொழில்துறையை வலுப்படுத்தவும், உலக வர்த்தகத்தில் பங்கேற்பை அதிகரிக்கவும் உதவும். ஏற்றுமதிச் சவால்களைச் சமாளிக்க, மாவட்ட ஏற்றுமதி செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தளவாடப் போக்குவரத்து இடைவெளிகள், சேமிப்புக் …
Read More »குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், குருக்ஷேத்திரத்தில் அகில பாரதிய தேவஸ்தான சம்மேளனத்தில் உரையாற்றினார்
ஹரியானாவின் குருக்ஷேத்திரத்தில் இன்று (30 நவம்பர் 2025) நடைபெற்ற சர்வதேச கீதை மஹோத்சவம் 2025-ன் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட அகில பாரதிய தேவஸ்தான சம்மேளனத்தில் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். இந்த நிகழ்வில் பேசிய அவர், “வேதங்களின் பூமி” என்று கொண்டாடப்படும் குருக்ஷேத்திரத்தின் புனிதமான மண்ணில் நிற்பதில் மிகுந்த பெருமை அடைவதாகக் கூறினார். பகவத் கீதையின் தெய்வீக ஞானத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு வழங்கிய இடமாக இந்த புனித இடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக போற்றப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். அதர்மம் எவ்வளவு சக்திவாய்ந்ததாகத் தோன்றினாலும், தர்மம் இறுதியில் அதர்மத்தை வெல்லும் என்பதையே குருக்ஷேத்திரம் நினைவூட்டுவதாக அவர் கூறினார். பகவத் கீதை என்பது ஒரு மதத்துக்கான வேதம் அல்ல என்றும் நீதி தவறாத வாழ்க்கை, துணிச்சலான செயல்பாடு, ஞான உணர்வு ஆகியவற்றுக்கான உலகளாவிய வழிகாட்டி நூல் என்றும் தெரிவித்தார். செல்வம் அல்லது பிற உலக சாதனைகளை விட நல்ல குணம் மிக முக்கியமானது என்று அவர் கூறினார். மனிதகுலத்தை நல்லொழுக்கத்துடன் வழிநடத்தும் நூல் கீதை என்றும் நீதிக்கான அர்ப்பணிப்பை இது நமக்கு நினைவூட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். …
Read More »
Matribhumi Samachar Tamil