தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் மத்திய அரசு செயல்படுத்தி வரும் சமூக மேம்பாட்டுக்கான பல்வேறு நிதிசார் திட்டங்கள் குறித்த சிறப்பு குறைதீர் முகாம்கள் நடந்துவருகின்றன. ஜூலை 1 முதல் நடைபெற்று வரும் இந்த சிறப்பு முகாம்கள் செப்டம்பர் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இம்முகாம்களில் பிரதமரின் ஜன் தன் வங்கிக் கணக்குகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் திருத்தங்கள் செய்வது, பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா திட்டம், பிரதமரின் சுரக்ஷா பீமா திட்டம், …
Read More »ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 14 வரை அமிர்த உத்யான் பொதுமக்களுக்குத் திறக்கப்படும்
கோடை ஆண்டு விழாவையொட்டி, அமிர்த உத்யான் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 14, 2025 வரை பொதுமக்களுக்குத் திறந்திருக்கும். அந்தக் காலகட்டத்தில், உத்யான் தோட்டப்பூங்கா காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும். கடைசி நுழைவு மாலை 5:15 மணி ஆகும். பராமரிப்புக்காக அனைத்து திங்கட்கிழமைகளிலும் தோட்டம் மூடப்படும். தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, ஆகஸ்ட் 29 அன்று விளையாட்டு வீரர்கள் மற்றும் தடகள வீரர்களுக்கும், ஆசிரியர் தினத்தையொட்டி, …
Read More »மேற்கு வங்கத்தில் மத்திய மீன்வள அமைச்சக திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும் – மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங்
மீன்பிடித் திட்டங்களை செயல்படுத்துவதில் மேற்கு வங்கத்தின் இடைவெளிகளைக் குறைப்பதற்கான அவசியத்தை, குறிப்பாக தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தில் மீன் விவசாயிகளின் பதிவு குறைவாக இருப்பதை, மத்திய மீன்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் எடுத்துரைத்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற மீன்வளத் துறையின் பிராந்திய ஆய்வுக் கூட்டத்தில், மத்திய அமைச்சர் பங்கேற்றார். மாநிலத்தின் 32 லட்சம் மீன் விவசாயிகளில் ஒரு பகுதியினர் மட்டுமே தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும், இது பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் மத்திய அரசின் சலுகைகளைப் பெறுவதில் தடை ஏற்படுத்துகிறது என்றும் சுட்டிக்காட்டினார். மாநிலத்தில் உள்நாட்டு மீன்வளத்தின் பயன்படுத்தப்படாத திறனை அமைச்சர் குறிப்பிட்டதோடு, பாரம்பரிய நீர்நிலைகளை சிறப்பாகப் பயன்படுத்துதல், மீனவர்களுக்கான கூட்டுறவு கட்டமைப்புகளை உருவாக்குதல் வலுவான செயலாக்க சூழல் அமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்தார். உள்ளூர் வேலைவாய்ப்பையும் மீன் ஏற்றுமதியை அதிகரிக்க மேற்கு வங்கத்தில் ஒரு மேம்பட்ட உலர் மீன் அமைப்பை நிறுவுவதற்கான திட்டத்தையும் அவர் எடுத்துரைத்தார். புதிய தொழில்நுட்பங்களை பின்பற்ற வலியுறுத்திய அவர், சிறந்த பயிற்சி முறைகளை உருவாக்குதல் நிலையான வளர்ச்சிக்கு அவசியம் என்றார். மீன் உற்பத்தியில் 104% வளர்ச்சியைக் கண்டுள்ள இந்தியா தற்போது உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தியாளராக இருப்பதாக அவர் கூறினார். கடந்த பத்து ஆண்டுகளில் உள்நாட்டு மீன் உற்பத்தி 142% அதிகரித்துள்ளதாகவும், மீன் ஏற்றுமதியில் இந்த துறையின் பங்கை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன், மத்திய மீன்வளத் துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மீன்வளம் தொடர்பான திட்டங்களுக்கு நிறுவன ஆதரவு, மத்திய-மாநில ஒருங்கிணைப்பு, திறமையான விநியோக வழிமுறைகளின் முக்கியத்துவத்தை இருவரும் வலியுறுத்தினர். மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய நான்கு கிழக்கு மாநிலங்களில் முதன்மை மீன்வளத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிராந்திய ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசின் மீன்வளத் துறை அதிகாரிகள், பங்கேற்கும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் விளக்கங்களை வழங்கினர். பிரதமரின் மீன் வள மேம்பாட்டுத் திட்டம், மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம், கிசான் கடன் அட்டை உள்ளிட்ட திட்ட செயல்பாடுகளை மதிப்பிடுவதும், பிராந்தியத்தில் மேம்பட்ட விளைவுகளுக்கான திட்டத்தை வகுப்பதும் இக்கூட்டத்தின் நோக்கம் ஆகும்.
Read More »தமிழ்நாட்டின் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
தமிழ்நாட்டின் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் இன்று (27.07.2025) நடைபெற்ற ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ராஜ ராஜ சோழனின் புனித பூமியில் தெய்வீக சிவ தரிசனம் மூலம் அனுபவித்த ஆழ்ந்த ஆன்மீக ஆற்றலைப் பற்றி உணர்ந்து, சர்வவல்லமையுள்ள சிவபெருமானை வணங்கியதாக பிரதமர் கூறினார். திரு இளையராஜாவின் இசையுடனும், ஓதுவார்களின் புனித மந்திரங்களுடனும், ஆன்மீக சூழல் ஆன்மாவை ஆழமாக நெகிழச் செய்ததாகப் பிரதமர் குறிப்பிட்டார். புனித …
Read More »ஜம்மு & காஷ்மீர் ரயில் பாதைகள் மற்றும் ரயில் பெட்டிகள் விரைவாக மேம்படுத்தப்படுவதைக் காண்கின்றன
பிரதமர் திரு நரேந்திர மோடி, செனாப் மற்றும் அஞ்சி பாலங்களுடன் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்புத் திட்டத்தை ஜூன் 06, 2025 அன்று தொடங்கி வைத்தார். காஷ்மீர் பள்ளத்தாக்குக்கும் ஜம்முவுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்துவதில் இது ஒரு வரலாற்று மைல்கல். கத்ரா மற்றும் ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இந்த பாதையில் ஒரு முக்கியமான போக்குவரத்து அம்சமாக மாறியுள்ளது. தண்டவாள பராமரிப்பு: புதிய ரயில் சேவைகளுக்கு கூடுதல் வலு …
Read More »ஜார்க்கண்டின் சோஹ்ராய் கலை இந்தியாவின் ஆன்மாவைப் பிரதிபலிக்கிறது குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு
குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற கலை உத்சவ நிகழ்ச்சியில் ஜார்க்கண்டின் பாரம்பரியமான சோஹ்ராய் கலை முக்கிய இடத்தைப் பிடித்தது. இந்த பத்து நாள் நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்தியாவின் வளமான நாட்டுப்புற, பழங்குடி கலை மரபுகளைக் கொண்டாடுவதில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என அவர் குறிப்பிட்டார். இது தொடர்பான கண்காட்சியைப் பார்வையிட்ட குடியரசுத்தலைவர், கலைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், இந்த கலைப்படைப்புகள் இந்தியாவின் ஆன்மாவை பிரதிபலிக்கின்றன என்றார். இயற்கையுடனான நமது தொடர்பு ஆழமானது என அவர் கூறினார். இந்த விலைமதிப்பற்ற மரபுகளை நிலைநிறுத்தும் கலைஞர்களைப் பாராட்டுவதாக அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் (IGNCA-ஐஜிஎன்சிஏ) உறுப்பினர் செயலாளர் டாக்டர் சச்சிதானந்த ஜோஷி, பிராந்திய இயக்குநர் டாக்டர் குமார் சஞ்சய் ஜா, ராஞ்சியில் உள்ள ஐஜிஎன்சிஏ பிராந்திய மையத்தின் திட்ட உதவியாளர் திருமதி சுமேதா சென்குப்தா உள்ளிட்டோர் நிறுவனத்தின் சார்பாக கலந்து கொண்டனர். ராஞ்சியில் உள்ள ஐஜிஎன்சிஏ பிராந்திய மையத்தின் திட்ட உதவியாளர்களான திருமதி போலோ குமாரி ஓரான், திரு பிரபாத் லிண்டா, டாக்டர் …
Read More »தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க 1 கோடியே 53 லட்சம் மண்வள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன
வேளாண் உற்பத்தி மற்றும் மண்வள மேலாண்மையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையாக சமநிலையைப் பராமரிப்பது மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைக்கான செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து விவசாயிகளுக்கும் மண் ஆரோக்கியம் மற்றும் மண்வளம் பராமரிப்பு திட்டத்தின் கீழ், கடந்த 2014-15-ம் ஆண்டு முதல் மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக மத்திய வேளாண் அமைச்சக இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி. என். …
Read More »தமிழ்நாட்டில் சுற்றுலா மேம்பாட்டுக்கு சென்ற நிதியாண்டில் ரூ.242 கோடி நிதி ஒதுக்கீடு:மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்
தமிழ்நாட்டில் சுற்றுலா மேம்பாட்டுக்கு சென்ற நிதியாண்டில் ரூ.242 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுற்றுலா அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் திரு ஜி.செல்வம், திரு சி என் அண்ணாதுரை ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், ராமேஸ்வரம் தீவு, தஞ்சாவூர், தேவலா (நீலகிரி மாவட்டம்), மாமல்லபுரம், வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்த இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று …
Read More »இமாச்சலப் பிரதேசத்தில் இயற்கை பேரிடர்களின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பல்துறை மத்தியக் குழுவை அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உத்தரவு
இமாச்சலப் பிரதேசத்தில் இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நிகழ்வதையும் அவற்றின் தீவிரத்தையும் கருத்தில் கொண்டு, பல்துறை மத்தியக் குழுவை அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மேக வெடிப்புகள், திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள், அடைமழை ஆகிய பேரிடர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA), ரூர்க்கி மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (CBRI), …
Read More »காசி பிரகடன வெளியீட்டுடன் வாரணாசியில் நிறைவடைந்தது இளைஞர் ஆன்மீக உச்சி மாநாடு
“வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு போதைப் பொருள் இல்லாத பாரதம்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இரண்டு நாள் இளைஞர் ஆன்மீக உச்சி மாநாடு, காசி பிரகடனத்தை முறையாக ஏற்றுக்கொள்ளும் நிகழ்வுடன் இன்று வாரணாசியில் நிறைவடைந்தது. இளைஞர் நலன், விளையாட்டுகள் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த உச்சிமாநாடு, 600-க்கும் மேற்பட்ட இளைஞர் அமைப்புகளின் தலைவர்கள், 120-க்கும் மேற்பட்ட ஆன்மீக, சமூக-கலாச்சார அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், கள நிபுணர்களை ஒன்றிணைத்தது. 2047-ம் ஆண்டுக்குள் போதைப்பொருள் இல்லாத …
Read More »
Matribhumi Samachar Tamil