Tuesday, December 16 2025 | 07:22:09 PM
Breaking News

Regional

தில்லி-டேராடூன் வழித்தடத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மரக்கன்றுகளை நடும் இயக்கத்தை நடத்தியது

உள்கட்டமைப்பு மேம்பாட்டுடன் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் வகையில், உத்தரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் தில்லி-டேராடூன் பொருளாதார வழித்தடத்தில் இன்று மரம் நடும் இயக்கத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஏற்பாடு செய்தது. அன்னையின் பெயரில் மரக் கன்று நடும் இரண்டாம் கட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக, தில்லி-டேராடூன் வழித்தடத்தில் சுமார் 40,000 மரக்கன்றுகளை நடுவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. சாலைப் போக்குவரத்து – நெடுஞ்சாலை அமைச்சகத்தின் செயலாளர் திரு வி. உமாசங்கர், மரக்கன்றுகளை நடும் இயக்கத்தில் முதல் மரக்கன்றை நட்டார். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவர் திரு சந்தோஷ் குமார் யாதவ்,  தேசிய நெடுஞ்சாலை ஆணைய மூத்த அதிகாரிகள் இந்த இயக்கத்தில் பங்கேற்று மரக் கன்றுகளை நட்டனர். பாக்பத் மாவட்ட ஆட்சியர் திருமதி அஸ்மிதா லால், காவல் கண்காணிப்பாளர் திரு சூரஜ் குமார் உள்ளிட்ட உள்ளூர் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளும் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர். பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று மரக் கன்றுகளை நட்டனர். தில்லி-டேராடூன் வழித்தடம் தில்லிக்கும் உத்தரகண்டிற்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்துகிறது. இந்த வழித்தடத்தில் சுமார் 40,000 மரக் கன்றுகளை நடுவது, காற்றின் தரத்தை மேம்படுத்தி, மண் அரிப்பைக் குறைத்து பல சுற்றுச்சூழல் நன்மைகளை இந்தப் பகுதிக்கு வழங்கும். அன்னையின் பெயரில் மரக்கன்று இடம் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இதுவரை 5,12,000-க்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நட்டுள்ளது.

Read More »

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

அகமதாபாத்தில் நடந்த துயரமான விமான விபத்தில் நேரிட்ட ஏராளமான உயிரிழப்புக்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பங்களுக்கு அவர் தமது இரங்கலைத் தெரிவித்தார், அவர்கள் தாங்கிக் கொண்டிருக்கும் மகத்தான வலி மற்றும் இழப்பை தான் உணர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவிதாதர். இன்று முன்னதாக, அகமதாபாத்தில்  விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட திரு மோடி, பேரழிவிற்குப் பிறகு அயராது உழைக்கும் அதிகாரிகள் மற்றும் அவசரகால …

Read More »

நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறந்த நடைமுறைகள் குறித்த முதல் மாநாட்டை மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜே பி நட்டா மெய்நிகர் மூலம் தொடங்கி வைத்தார்

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா இன்று நாக்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில், தனது அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “சிறந்த நடைமுறைகள்” குறித்த மாநாட்டின் முதல் பதிப்பில் மெய்நிகர் மூலம் உரையாற்றினார். இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாடு, பல்வேறு எய்ம்ஸ் நிறுவனங்கள் பின்பற்றும் முன்மாதிரியான நடைமுறைகளை எடுத்துரைக்கிறது. இதில் நோயாளிகளை மையமாகக் கொண்ட பராமரிப்பு, செயல்பாட்டுத் திறன், …

Read More »

மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா ஜோத்பூருக்கு பயணம் மேற்கொள்கிறார்

மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா ஜூன் 09 (திங்கட்கிழமை) அன்று ஜோத்பூரின் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திற்கு  ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார். இந்த நிகழ்வில், ஸ்ரீ பிர்லா நிறுவனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டாவது விரிவுரை மண்டப வளாகத்தைத் திறந்து வைக்கிறார். மாநிலங்களவை உறுப்பினர் திரு ராஜேந்திர கெலாட், சமூக சேவகர் திரு  நிம்பராம், புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானியும் ஐஐடி ஜோத்பூரின் ஆளுநர் குழுவின் தலைவருமான திரு  ஏ.எஸ். கிரண் குமார், ஐஐடி ஜோத்பூர் இயக்குநர் …

Read More »

இந்திய மொழிகள் பிரிவை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார்

இந்திய மொழிகள் பிரிவை (பாரதிய பாஷா அனுபாக்) மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். உள்துறை அமைச்சக செயலாளர், ஆட்சி மொழிப்பிரிவு செயலாளர் உள்ளிட்ட பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்திய மொழிகள் பிரிவு உருவாக்கப்பட்டிருப்பதன் மூலம் ஆட்சி மொழித்துறை முழுமை அடைந்திருப்பதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார். வெளிநாட்டு மொழிகளின் செல்வாக்கிலிருந்து நிர்வாகத்தை விடுவிக்கும் …

Read More »

பிரதமரின் வருகைக்கு முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் செனாப் பாலத்தில் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

ஜம்மு & காஷ்மீரில் மேம்படுத்தப்பட்ட இணைப்புக்கான ₹46,000 கோடி மதிப்பிலான தொலைநோக்குப் பார்வை கொண்ட முக்கிய திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி கோடிட்டுக் காட்டியுள்ளார், இவை பிராந்திய இணைப்பில் ஒரு வரலாற்று மைல்கல்லாகும். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் வருகைக்கு முன்னதாக, ஜம்மு & காஷ்மீரின் முதலமைச்சர், உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் பாலத்தில் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். செனாப் ரயில் பாலம், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் …

Read More »

வடகிழக்குப்பகுதியில் முதலாவது மண்டல வளாகத்தை நிறுவுகிறது இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனம்

உள்ளடக்கிய தேசிய வளர்ச்சியில் பிராந்திய திறன் மேம்பாட்டிற்கான ஒரு மைல்கல் நடவடிக்கையாக, கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனம் (IICA-ஐஐசிஏ), வடகிழக்குப்பகுதியில் முதல் முறையாக மேகாலயாவின் நியூ ஷில்லாங் டவுன்ஷிப்பில் பிராந்திய வளாகத்தை நிறுவ உள்ளது. இதற்காக  ஐந்து ஏக்கர் நிலத்தை முறையாக கையகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி வடகிழக்குப் பகுதியில் ஐஐசிஏ-வின் நிர்வாகத்தையும் அதன் வளர்ச்சியையும் வலுப்படுத்தும். நில கையகப்படுத்துதல் தொடர்பான விழாவிற்கு மேகாலயா அரசின் தலைமைச் செயலாளர் திரு டொனால்ட் பிலிப்ஸ் வஹ்லாங் மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சகத்தின் செயலாளர் திருமதி தீப்தி கவுர் முகர்ஜி ஆகியோர் …

Read More »

சண்டிகரில் தொழிலாளர் நலத்துறை அலுவலகம், இபிஎஃப்ஓ அலுவலகம், இஎஸ்ஐ மருத்துவமனை ஆகியவற்றின் செயல்பாடுகளை மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார்

மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று (22.02.2025) சண்டிகர் சென்று, மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள முக்கிய நிறுவனங்களை ஆய்வு செய்தார். தமது பயணத்தின் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர் தொழிலாளர் நலத்துறை அலுவலகம், சண்டிகரில் உள்ள இஎஸ்ஐசி (ESIC) மாதிரி மருத்துவமனைக்கு ஆகியவற்றுக்புச் சென்று, அவற்றின் தற்போதைய பணிகளை மதிப்பீடு செய்து, சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார். தொழிலாளர் நல அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகள் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சருக்கு …

Read More »

மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, மகாராஷ்டிராவின் புனேவில் மேற்கு மண்டல கவுன்சிலின் 27-வது கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இன்று (22.02.2025) நடைபெற்ற மேற்கு மண்டல கவுன்சிலின் 27-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் மகாராஷ்டிரா, குஜராத், கோவா முதலமைச்சர்கள், தாத்ரா – நகர் ஹவேலி, டாமன் – டையூ நிர்வாகிகள், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மத்திய உள்துறை செயலாளர், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் செயலகம், கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர், மேற்கு மண்டல மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், மத்திய அமைச்சகங்கள், துறைகளின் …

Read More »

பிரதமரின் உழவர் நலத்திட்டத்தின் 19-வது தவணையை பீகார் மாநிலம் பாகல்பூரில் பிப்ரவரி 24 அன்று பிரதமர் வெளியிடுகிறார்

பிரதமரின் உழவர் நலத்திட்டத்தின் கீழ் வரவிருக்கும் 19 வது தவணை வெளியீடு குறித்து மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார். பிரதமரின் உழவர் நலத்திட்டம், 2019 பிப்ரவரி 24 அன்று தொடங்கப்பட்டது.  மத்திய அரசின்  இத்திட்டத்தின் கீழ், , தகுதியுள்ள விவசாயி குடும்பத்திற்கு,  ஆண்டுக்கு ரூ. 6,000/-  வீதம் , இதுவரை, ரூ. 3.46 லட்சம் கோடி,  11 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு  வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் திரு சிவராஜ் …

Read More »