Monday, September 21 2026 | 07:28:05 PM
Breaking News

Regional

அறிவியல் ஆசிரியர்களுக்கு “தரநிலைகள் மூலம் அறிவியல் கற்றல்” குறித்த இரண்டு நாள் வழிகாட்டிப் பயிற்சித் திட்டம் – புதுச்சேரியில் இந்திய தரநிர்ணய அமைவனம் நடத்தியது

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னைக் கிளை அலுவலகம் அறிவியல் ஆசிரியர்களுக்கு, “தரநிலைகள் மூலம் அறிவியல் கற்றல்” என்ற தலைப்பில் இரண்டு நாள் வழிகாட்டி பயற்சித் திட்டத்தை புதுச்சேரியில் நடத்துகிறது. இது இன்றும் (03.07.2025)  நாளையும் (04.07.2025) நடத்தப்படுகிறது. இந்திய தர நிர்ணய அமைவனத்தின் இணை இயக்குநரும் விஞ்ஞானியுமான திரு ஸ்ரீஜித் மோகன், பங்கேற்பாளர்களை வரவேற்று, திட்டத்தின் நோக்கங்களை விளக்கினார். “தரநிலைகள் மூலம் அறிவியல் கற்றல்” என்பது, அடிப்படை அறிவியல் கருத்துக்களை தரப்படுத்தல் நடைமுறைகளுடன் இணைப்பதன் மூலம் மாணவர்களின் அறிவியல் புரிதலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட …

Read More »

தமிழ்நாட்டில் பரமக்குடி – ராமநாதபுரம் இடையே ரூ.1853 கோடி மதிப்பிலான 4-வழி தேசிய நெடுஞ்சாலை (NH-87) அமைக்கும் பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தமிழ்நாட்டில்  பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 46.7 கி.மீ தொலைவிற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் ரூ.1,853 கோடி செலவில் கலப்பின ஆண்டுத்தொகை மாதிரியில்  அமைக்கப்பட உள்ளது. தற்போது, மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி இடையிலான 2-வழி தேசிய நெடுஞ்சாலை எண் 87,  அதனுடன் தொடர்புடைய மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த நான்கு வழிச் சாலை …

Read More »

பீகார் சிறப்பு திருத்தம்: 2003 வாக்காளர் பட்டியல்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம்

இந்திய தேர்தல் ஆணையம் 4.96 கோடி வாக்காளர்களின் விவரங்களைக் கொண்ட 2003 பீகார் வாக்காளர் பட்டியலை, தேர்தல் ஆணைய இணையதளமான https://voters.eci.gov.in இல் பதிவேற்றம் செய்துள்ளது. 2025 ஜூன் 24 தேதியிட்ட தேர்தல் ஆணையத்தின்  அறிவுறுத்தல்படி, 01.01.2003 தேதியை தகுதித் தேதியாக கொண்ட வாக்காளர் பட்டியலை, அனைத்து வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகளுக்கு அச்சிடப்பட்ட நகலிலும், அவர்களின் இணையதளத்தில் ஆன்லைனிலும் இலவசமாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும், தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் பதிவு அதிகாரி ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தங்கள் கணக்கெடுப்புப் படிவத்தைச் சமர்ப்பிப்போர் அதை  ஆவணச் …

Read More »

அவசரநிலையின் 50 ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையிலும், ஜனநாயகத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தவும் ‘அரசியலமைப்பு படுகொலை தினத்தை’ கலாச்சார அமைச்சகம் மற்றும் தில்லி அரசு கடைப்பிடிக்கிறது

இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக நினைவுகூரப்படும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டு 50-ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், மத்திய கலாச்சார அமைச்சகம் தில்லி அரசுடன் இணைந்து ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு. அஸ்வினி …

Read More »

கோவா ஷிப்யார்ட் நிறுவனம் தயாரிக்கும் எட்டு விரைவு ரோந்து கப்பல்களில் முதலாவது கப்பலான ஆதம்யா கடலோரக் காவல் படையுடன் இணைக்கப்பட்டது

கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தில்  எட்டு விரைவு ரோந்து கப்பல்கள் கட்டும் திட்டத்தின் கீழ் முதலாவது விரைவு ரோந்து கப்பலான  ‘ஆதம்யா’ இன்று (ஜூன் 26ம் தேதி) கோவாவில் இந்திய கடலோர காவல்படையுடன் இணைக்கப்பட்டது. விரைவு ரோந்து கப்பல்கள் என்பவை கடலோரக் காவல் படையில் உள்ள கப்பல்களில் பிட்ச் ப்ரொப்பல்லர்கள் மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கியர்பாக்ஸ்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதலாவது வகை கப்பல்கள் ஆகும். இதன் சிறந்த சூழற்சித்திறன், செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மை ஆகியவை …

Read More »

அரசு இணைய சந்தையில் கொள்முதல் குறித்த பயிலரங்கை பத்திரிகை தகவல் அலுவலகம் இன்று சென்னையில் நடத்தியது

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், அரசு இணைய சந்தையில் (GeM) எவ்வாறு கொள்முதல் செய்வது என்பது குறித்த பயிலரங்கை தகவல் மாளிகையில் உள்ள அதன் அலுவலகத்தில் இன்று (25.06.2025) நடத்தியது. இந்தப் பயிலரங்கில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகம், டிடி தமிழ், ஆகாஷ்வாணி, வெளியீட்டுப் பிரிவு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டவர்களுக்கு மத்திய அரசின் கொள்முதல் தளமான https://gem.gov.in/ ஜெம்(GeM)-ல் …

Read More »

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் மத்திய மண்டல கவுன்சிலின் 25வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமை தாங்கினார்

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா, இன்று உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற மத்திய மண்டல கவுன்சிலின் 25வது கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதல்வர் திரு. புஷ்கர் சிங் தாமி, மத்தியப் பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவ், சத்தீஸ்கர் முதல்வர் திரு. விஷ்ணு தியோ சாய் ஆகியோர் கலந்து கொண்டனர். உறுப்பு மாநிலங்களின் மூத்த அமைச்சர்கள், மத்திய உள்துறை …

Read More »

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் மத்திய மண்டல கவுன்சிலின் 25வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்குகிறார்

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா, நாளை (ஜூன் 24, 2025 செவ்வாய்க்கிழமை) உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெறும் மத்திய மண்டல கவுன்சிலின் 25-வது கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்தில் உறுப்பு மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இரண்டு மூத்த அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள். மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகள், மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் இந்தக் …

Read More »

ராஷ்டிரபதி தபோவனம் திறப்பு விழா, பொதுமக்கள் பார்வையிடுவதற்கான ராஷ்டிரபதி நிகேதன் ஆகியவற்றில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் இன்று (20.6.2025) ராஷ்டிரபதி தபோவனம், ராஷ்டிரபதி நிகேதன் ஆகியவற்றின் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றார். ராஷ்டிரபதி நிகேதனில் அமைக்கப்பட உள்ள ராஷ்டிரபதி தோட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய அவர், பார்வையாளர் வசதி மையம், உணவகம், பத்திரிகை அங்காடி ஆகியவற்றை திறந்து வைத்தார். ராஷ்டிரபதி நிகேதனில் திறந்தவெளி அரங்கை நேற்று (19.06.2025) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ராஷ்டிரபதி தபோவனம், ராஷ்டிரபதி நிகேதன், ராஷ்டிரபதி உத்யான் ஆகியவை குறித்த கையேடு ஒன்று வெளியிடப்பட்டது. இந்த இடங்களில் …

Read More »

நாட்டின் வளத்தில் பீகார் செழிப்புறுவதோடு மிகப் பெரிய பங்களிப்பையும் வெளிப்படுத்தும்: பிரதமர்

பீகார் மாநிலம் சிவானில் இன்று ரூ. 5200 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த பிரதமர், பாபா மகேந்திரநாத், பாபா ஹன்ஸ்நாத் ஆகியோருக்கு மரியாதை செலுத்தினார். மா தாவே பவானி, மா அம்பிகா பவானி ஆகியோரையும் அவர் வணங்கினார். நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் …

Read More »