Wednesday, January 07 2026 | 07:39:00 PM
Breaking News

Sports

ಪ್ರಧಾನಮಂತ್ರಿ ಶ್ರೀ ನರೇಂದ್ರ ಮೋದಿ ಅವರು ವಾರಣಾಸಿಯಲ್ಲಿ ʻ72ನೇ ರಾಷ್ಟ್ರೀಯ ವಾಲಿಬಾಲ್ ಪಂದ್ಯಾವಳಿʼಯನ್ನು ವಿಡಿಯೋ ಕಾನ್ಫರೆನ್ಸ್‌ ಮೂಲಕ ಉದ್ಘಾಟಿಸಿದರು

ಪ್ರಧಾನಮಂತ್ರಿ ಶ್ರೀ ನರೇಂದ್ರ ಮೋದಿ ಅವರು ಇಂದು ಉತ್ತರ ಪ್ರದೇಶದ ವಾರಣಾಸಿಯಲ್ಲಿ 72ನೇ ರಾಷ್ಟ್ರೀಯ ವಾಲಿಬಾಲ್ ಪಂದ್ಯಾವಳಿಯನ್ನು ವಿಡಿಯೋ ಕಾನ್ಫರೆನ್ಸಿಂಗ್ ಮೂಲಕ ಉದ್ಘಾಟಿಸಿದರು. ಈ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ಸಭಿಕರನ್ನುದ್ದೇಶಿಸಿ ಮಾತನಾಡಿದ ಶ್ರೀ ಮೋದಿ, ವಾರಣಾಸಿಯ ಸಂಸತ್ ಸದಸ್ಯನಾಗಿ, ಎಲ್ಲಾ ಆಟಗಾರರನ್ನು ಸ್ವಾಗತಿಸಲು ಮತ್ತು ಅಭಿನಂದಿಸಲು ಸಂತಸವಾಗುತ್ತಿದೆ ಎಂದು ಹೇಳಿದರು. ರಾಷ್ಟ್ರೀಯ ವಾಲಿಬಾಲ್ ಚಾಂಪಿಯನ್‌ಶಿಪ್ ಇಂದಿನಿಂದ ವಾರಣಾಸಿಯಲ್ಲಿ ಪ್ರಾರಂಭವಾಗುತ್ತಿದೆ. ಆಟಗಾರರು ಅಪಾರ ಕಠಿಣ ಪರಿಶ್ರಮದ ಬಳಿಕ ಈ ರಾಷ್ಟ್ರೀಯ ಪಂದ್ಯಾವಳಿಯನ್ನು ತಲುಪಿದ್ದಾರೆ ಮತ್ತು …

Read More »

வாரணாசியில் 72-வது தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று தொடங்கிய (04.01.2025) 72-வது தேசிய வாலிபால் (கைப்பந்து) போட்டியை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, வாரணாசி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், அனைத்து வீரர்களையும் வரவேற்று வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார். தேசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் இன்று முதல் வாரணாசியில் தொடங்குகிறது என்று அவர் கூறினார். வீரர்கள் மிகுந்த கடின …

Read More »

விளையாட்டுகள் ஒழுக்கத்தை வளர்ப்பதுடன் தேசத்தை வலிமையாக்குகின்றன– குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன்

விளையாட்டுகள் ஒழுக்கத்தையும் நற்பண்புகளையும் வளர்ப்பதுடன் தேசத்தை வலிமையாக்குகின்றன என்று குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆக்ராவில் நடைபெற்ற நாடாளுமன்ற தொகுதி அளவிலான விளையாட்டு விழாவில் தலைமை விருந்தினராக இன்று (24.12.2025) அவர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது பழங்கால தத்துவங்கள், நல்லிணக்கத்தையும் உடல் நலத்தையும் முக்கியமாக போதிப்பதாக அவர் கூறினார். விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலம் நல்லிணக்கம் அதிகரிப்பதுடன் உடல்நலமும் மேம்படும் என்று அவர் குறிப்பிட்டார். விளையாட்டுகள் போட்டித்தன்மை உள்ளவை …

Read More »

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, பம்பாய் ஜிம்கானாவின் 150-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஒரு நினைவு தபால் தலையை வெளியிட்டார்

பாம்பே ஜிம்கானாவின் 150-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அதன் விளையாட்டு சிறப்புமிக்க பாரம்பரியம் மற்றும் தேசத்திற்கு அதன் நீடித்த கலாச்சார பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் அஞ்சல் துறை ஒரு நினைவு தபால் தலையை வெளியிட்டுள்ளது. இந்த நினைவு தபால் தலையை மும்பையில் உள்ள பம்பாய் ஜிம்கானாவில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய  சிந்தியா முறையாக வெளியிட்டார். பம்பாய் ஜிம்கானாவின் தலைவர் திரு சஞ்சீவ் சரண் மெஹ்ரா,  நவி மும்பை பிராந்தியத்தின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திருமிகு சுசிதா ஜோஷி மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய திரு ஜோதிராதித்ய  சிந்தியா, விளையாட்டைப் போலவே, இந்த அஞ்சல் முத்திரையும் கதைகளையும் மதிப்புகளையும் சுமந்து செல்கிறது. இளம் சிறுவர் சிறுமிகள் விளையாட்டுகளில் ஈடுபடவும், சுறுசுறுப்பாக இருக்கவும், வாழ்க்கையை நேர்மறையாக வடிவமைக்கும் நிறுவனங்களின் சக்தியை நம்பவும் தூண்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார். 1875 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பம்பாய் ஜிம்கானா, இந்தியாவின் விளையாட்டு மற்றும் சமூக பாரம்பரியத்தின் ஒரு தனித்துவமான தூணாக நிற்கிறது. பல தலைமுறை விளையாட்டு வீரர்களை வளர்த்து வருகிறது, அதே நேரத்தில் கலாச்சார மற்றும் விளையாட்டு நோக்கங்களுக்கான துடிப்பான மையமாகவும் செயல்படுகிறது. ஒன்றரை நூற்றாண்டு காலமாக, விளையாட்டுத்திறன், தோழமை மற்றும் வலுவான சமூக ஈடுபாட்டு உணர்வை வளர்ப்பதில் இந்த நிறுவனம் முக்கிய பங்கு வகித்துள்ளது.

Read More »

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2025-ல் சிறப்பான வெற்றியை பெற்ற இந்திய வில்வித்தை குழுவினருக்கு பிரதமர் வாழ்த்து

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2025-ல் இதுவரை இல்லாத வகையில் சிறப்பான வெற்றியை பெற்ற இந்திய வில்வித்தை குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்தியக் குழுவினர், இதுவரை இல்லாத வகையில் சிறப்பாக செயல்பட்டு, 6 தங்கம் உள்பட மொத்தம் 10 பதக்கங்களை வென்று தாயகத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக கூறினார். ரிகர்வ் ஆடவர் பிரிவில் 18 ஆண்டுகளுக்கு பிறகு தங்கப்பதக்கம் வென்ற வரலாற்று சிறப்புமிக்க …

Read More »

இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல பயிற்சி மையங்கள் சார்பாக பசுமை பராமரிப்பை அதிகரிக்கும் வகையில் இன்று 10.07.2025, புதுச்சேரியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. புதுச்சேரி, லாஸ்பேட், இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தின் துணை இயக்குநர் திருமதி சுவேதா விஸ்வநாதன், பளுதூக்கு பயிற்சியாளர் திரு ராஜேஷ், கையுந்து பந்து பயிற்சியாளர் திரு பழனி, கோகோ பயிற்சியாளர் திரு மனோகரா, அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.   भारत : …

Read More »

தூரந்த் கோப்பைப் போட்டித் தொடருக்கான கோப்பைகளை குடியரசுத்தலைவர் அறிமுகம் செய்தார்

தூரந்த் கோப்பைப் போட்டித் தொடர் 2025-க்கான கோப்பைகளை குடியரசுத்தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் இன்று (04.07.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், விளையாட்டுகள் ஒழுக்கத்தை, மன உறுதியை, அணி உணர்வை மேம்படுத்துகின்றன என்றார். மக்களை, பிராந்தியங்களை, நாடுகளை இணைக்கும் தனித்துவ ஆற்றலை  விளையாட்டுகள் கொண்டுள்ளன.  இந்தியாவில் தேசிய ஒருமைப்பாட்டுக்கு சக்தி மிக்க கருவியாக அது விளங்குகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் அல்லது இதர சர்வதேச போட்டிகளில் மூவண்ணக் கொடி பறக்கும் போது, இந்திய மக்கள் அனைவரும் உற்சாகம் அடைகின்றனர் என்று அவர் கூறினார். லட்சக்கணக்கானோரின் இதயங்களில் கால்பந்து விளையாட்டுக்கு சிறப்பிடம் இருப்பதாக குடியரசுத்தலைவர் கூறினார். இது வெறும் விளையாட்டு அல்ல; ஒரு பேரார்வம். கால்பந்து விளையாட்டு என்பது  பொதுவான நோக்கத்தை (கோல்) அடைவதற்கு ஒன்றுபட்ட உத்தி, விடாமுயற்சி, உழைப்பு ஆகியவற்றைக் குறிப்பதாகும். தூரந்த் கோப்பை போன்ற நிகழ்வுகள், விளையாட்டு உணர்வை வளர்ப்பது மட்டுமின்றி, அடுத்த தலைமுறை  கால்பந்து விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் அவர்கள் வளர்வதற்கான தளத்தை வழங்குவதற்கும் உதவுகின்றன என்று அவர் தெரிவித்தார். தூரந்த் கோப்பையின் உணர்வை மேம்படுத்துவதிலும் அதனை  உயிரோட்டமாக வைத்திருப்பதிலும் ஆயுதப்படைகளின் பங்களிப்பை குடியரசுத்தலைவர் பாராட்டினார்.

Read More »

பாலிதானாவில் நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சி- மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார் – நாடு முழுவதும் 6,000 இடங்களில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன

மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டுகள் அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா, குஜராத்தின் பாலிதானாவில் இன்று (29.06.2025) காலை நடைபெற்ற உடல் திறன் இந்தியா ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுதல் நிகழ்வுக்குத் தலைமை வகித்தார். பல்வேறு குழுக்கள், குறிப்பாக ‘ஸ்வச்தா சேனானிஸ்’ எனப்படும் தூய்மைக் காவலர்கள் பங்கேற்ற இந்த மிதிவண்டி ஓட்டும் நிகழ்வை அவர் வழிநடத்தினார். நாடு முழுவதும் 6,000 இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்த மிதிவண்டி ஓட்டுதல் நிகழ்வில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், நகராட்சி நிறுவனங்களின் பணியாளர்கள் பங்கேற்றனர். இது டிசம்பர் 2024-ல் நாடு தழுவிய அளவில் தொடங்கப்பட்டு தற்போது 29-வது வாரமாக இன்று நடைபெற்றது. ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ எனப்படும் உடல்திறன் இந்தியா ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுதல் நிகழ்வை பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் உரை நிகழ்ச்சியில் பாராட்டியுள்ளார். இது இந்தியாவின் முதன்மையான சுகாதார மற்றும் நல்வாழ்வு இயக்கங்களில் ஒன்றாகும். பாலிதானாவில் நடைபெற்ற நிகழ்வில், பாவ்நகர் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு சைக்கிள் ஓட்டுதல் சங்கங்கள் இணைந்தன. தமது சொந்த ஊரான பாலிதானாவில் இந்த இயக்கம் இப்போது பெரிய இயக்கமாக மாறியுள்ளது என்று திரு மன்சுக் மாண்டவியா கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியால் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட உடல் திறன் இயக்கத்தின் ஒரு பகுதியாக தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுதல் நிகழ்வு சிறந்த முறையில் நடத்தப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார். ஸ்வச்தா சேனானிகள் எனப்படும் தூய்மைப் பணியாளர்கள் இன்றைய நிகழ்வில் பெரிய அளவில் பங்கேற்றுள்ளதாகவும், உடல் திறனும் தூய்மையும் கைகோர்த்துச் செல்வதாகவும் அவர் கூறினார்.  தற்போதைய நவீன தலைமுறையினரிடையே சைக்கிள் ஓட்டுதலை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டும் என திரு மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டார். தேசிய தலைநகர் தில்லியில், ராஹ்கிரி அறக்கட்டளையும் புது தில்லி மாநகர கவுன்சிலும் (என்டிஎம்சி) இணைந்து நடத்திய இந்த நிகழ்வில், கிட்டத்தட்ட 1,000 மிதிவண்டி ஓட்டுநர்கள் பங்கேற்றனர். பத்மஸ்ரீ விருது பெற்றவரும், காமன்வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றவருமான பபிதா போகத் இதில் பங்கேற்று இந்த முயற்சியைப் பாராட்டினார். டிசம்பர் 2024-ல் தொடங்கப்பட்ட உடல்திறன் இந்தியா ஞாயிற்றுக் கிழமைகளில் சைக்கிள் ஓட்டுதல் இயக்கம் நாடு முழுவதும் 11,000 க்கும் மேற்பட்ட இடங்களில் இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தனிநபர்களின் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது. இந்த மிதிவண்டி ஓட்டுதல் பயணங்கள் நாடு முழுவதும் உள்ள பல கேலோ இந்தியா மையங்கள், கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்கள், இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையங்கள், கேலோ இந்தியா அங்கீகாரம் பெற்ற அகாடமிகள், பிராந்திய மையங்கள், பல்வேறு தேசிய சிறப்பு மையங்கள் போன்றவற்றால் நடத்தப்படுகின்றன.

Read More »

டாக்டர் மன்சுக் மாண்டவியா ‘நகர்ப்புறம் குறித்த கலந்துரையாடல் 2025-ஐ தொடங்கி வைத்து சைக்கிள் ஓட்டுதல் குறித்த சிறப்புப் புத்தகங்களை வெளியிட்டார்

மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று புதுதில்லியில் நகர்ப்புறம் குறித்த கலந்துரையாடல் 2025 மாநாட்டைத் தொடங்கி வைத்தார். நிலையான நகர்ப்புற எதிர்காலத்தை உருவாக்க இளையோர்கள், நிபுணர்கள் மற்றும் தலைவர்களை ஒன்றிணைப்பதை மூன்று நாள் மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. அப்போது பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, சைக்கிள் ஓட்டுதல் என்பது உடற்பயிற்சியின் சிறந்த வடிவம் என்றும் அது நம்மை ஆரோக்கியமாக்குவது …

Read More »

உடல் திறன் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக ‘மிதிவண்டியில் ஞாயிற்றுக் கிழமைகள்’ இயக்கம் – மும்பையில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா பங்கேற்பு

ஃபிட் இந்தியா எனப்படும் உடல்திறன் இந்தியா இயக்கத்தின் முதன்மை நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘சண்டே ஆன் சைக்கிள்’ (ஞாயிறுகளில் மிதிவண்டியில் பயணம்) என்ற இயக்கம் இன்று காலை (16.02.2025) மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியாவில் நடைபெற்றது. சைக்கிள் ஓட்டுதல் மூலம்  ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்படுத்திக் கொள்வது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், மாசுபாட்டிற்கான தீர்வையும் இது ஊக்குவிக்கிறது. நாடு முழுவதிலுமிருந்து ஆரோக்கிய நிபுணர்கள், பல்வேறு சைக்கிள் கிளப்புகள், தனிப்பட்ட உடற்பயிற்சி ஆர்வலர்கள் அடங்கிய 500-க்கும் மேற்பட்ட மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டுநர்கள் இதில் பங்கேற்றனர். மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு தலைமை வகித்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். உடல் பருமன் பிரச்சினையை, குறிப்பாக நகர்ப்புற இளைஞர்களிடையே உள்ள உடல் பருமன் பிரச்சினையை எதிர்த்துப் போராட பிரதமர் திரு நரேந்திர மோடி அண்மையில் விடுத்த அழைப்பிற்கு ஏற்ப ‘ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிள் ஓட்டும் இயக்கம்’ மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மாண்டவியா, நாட்டின் மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நமது பிரதமரின் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற பார்வையை அடைய முடியும் என்றார். ‘சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமைகள்’ என்ற இந்த முன்முயற்சி, பூஜ்ஜிய கார்பன் தடம் கொண்ட போக்குவரத்து முறையை ஏற்படுத்தி சுற்றுச்சூழலுக்கும் பங்களிப்பதாக அவர் தெரிவித்தார். ஒவ்வொருவரும், குறிப்பாக இளைஞர்கள், முடிந்தவரை சைக்கிள்களைப் பயன்படுத்துமாறு அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கேட்டுக்கொண்டார். கடந்த ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி தொடங்கப்பட்ட சண்டே ஆன் சைக்கிள் முன்முயற்சி ஏற்கனவே இந்தியா முழுவதும் 3500 க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. இன்று (பிப்ரவரி 16) இந்த நிகழ்வு 100 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது,

Read More »