Monday, January 26 2026 | 06:33:42 AM
Breaking News

காசி தமிழ் சங்கமத்தின் 4-வது ஆண்டு நிகழ்வு – கலாச்சார தேரை இழுத்துச் செல்லும் இளைய தலைமுறை

டிசம்பர் 2-ம் தேதி தொடங்கும் காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது ஆண்டு நிகழ்வுக்கு காசி தயாராகி வரும் நிலையில், அதில் பங்கேற்க இளைய தலைமுறையினரிடையே அதிக உற்சாகம் காணப்படுகிறது. இந்த நிகழ்வு காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான கலாச்சார, மொழியியல் உறவுகளை இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நவம்பர் 29 அன்று கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு ரயிலில் பயணத்தைத் தொடங்கிய முதல் குழுவில் ஏராளமான மாணவர்கள் உள்ளனர். நீண்ட ரயில் பயணம், விளையாட்டுகள், குழு நடவடிக்கைகள், கலகலப்பான உரையாடல்கள், ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புகள் ஆகியவை நிறைந்த கலாச்சார மகிழ்ச்சிப் பயணமாக இது மாறியுள்ளது. இந்த அனுபவம் இளைஞர்களுக்கு மறக்க முடியாததாகவும் அர்த்தமுள்ளதாகவும் அமைந்துள்ளது. இந்த சிறப்பு ரயிலில் பயணிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அர்ச்சனா கூறுகையில், நான்காவது ஆண்டு காசி தமிழ் சங்கமத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். இந்த வாய்ப்பை ஒரு தெய்வீக ஆசீர்வாதமாகக் கருதுவதாகவும் அவர் கூறினார். காசியின் வளமான ஆன்மீக, கலாச்சார பாரம்பரியத்தை முதல் முறையாக அனுபவிக்க ஆவலுடன் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார். திருப்பூரைச் சேர்ந்த மாலதி என்ற மற்றொரு மாணவி கூறுகையில், தமிழ்நாடும் காசியும் ஆழமான ஆன்மீகப் பிணைப்பைக் கொண்டுள்ளதாக கூறினார். காசி தமிழ் சங்கமம், அந்த பிணைப்பை நவீன வடிவத்தில் வலுப்படுத்துகிறது என்றும், காசிக்குச் செல்வது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார். இதற்கிடையில், காசியில், இளைய தலைமுறையினரின் உற்சாகமான பங்கேற்புடன், காசி படித்துறைகளிலும் பல்கலைக்கழக வளாகங்களிலும் பல்வேறு நிகழ்வுகள் …

Read More »

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி நடைபெறும் தேசிய அளவிலான நிகழ்ச்சி – மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா தலைமை வகிக்கவுள்ளார்

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா நாளை (2025 டிசம்பர் 01) புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறும் 2025-ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்கவுள்ளார். சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இதில் கலந்துகொள்வார்கள். இது ஹெச்ஐவி தடுப்பு, சிகிச்சை, பராமரிப்பு ஆகியவற்றுக்கான தேசிய அளவிலான நடவடிக்கைகளை விரைவுபடுத்துதலில் மத்திய அரசின் அசைக்க …

Read More »

நாட்டில் 250 மில்லியன் பேர் ஏழ்மை நிலையிலிருந்து விடுபட்டுள்ளனர் – குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு

புதுதில்லியில்  நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெற்ற அரசியல் சாசன தினக் கொண்டாட்டத்தில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றார்.  இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், 2015-ம் ஆண்டு பாபா சாஹேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் 125-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்ட போது  நவம்பர் 26-ம் நாளை அரசியல் சாசன தினமாக கொண்டாடுவதென தீர்மானிக்கப்பட்டது என்று குறிப்பிட்டார். அந்த முடிவு உண்மையில் அர்த்தமுடையது என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்நாளில் நமது அரசியல் …

Read More »

டெல்லி சட்டமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சாசன தின கொண்டாட்டதில் குடியரசுத் துணைத்தலைவர் பங்கேற்றார்

குடியரசுத் துணைத்தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் , தில்லி சட்டமன்றத்தில் நடைபெற்ற ‘அரசியல் சாசன தின’ கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். திரு. வித்தல்பாய் படேல் இந்தியாவின் முதல் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் 100 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், இந்தியாவின் சட்டமன்றப் பயணம் குறித்த சித்திரங்கள் அடங்கிய புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். குடியரசுத் துணைத்தலைவர் உரையாற்றுகையில், இந்திய அரசியலமைப்பை ஒரு ‘உயிருள்ள ஆவணம்’ என்று கூறினார், இது நாட்டின் ஜனநாயகப் …

Read More »

ஐதராபாதில் உள்ள சஃப்ரான் விமான என்ஜின் சேவைகள் இந்தியா நிறுவனத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஜிஎம்ஆர் விண்வெளி மற்றும் தொழில்துறை பூங்கா – சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் சஃப்ரான் விமான என்ஜின் சேவைகள் இந்தியா நிறுவனத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், “இன்று முதல் இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை புதிய பாதையில் பயணிக்கிறது. சஃப்ரானின் புதிய நிறுவனம் இந்தியாவை உலகளாவிய …

Read More »

புனே மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (26 நவம்பர் 2025) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புனே மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டத்தின்கீழ், வழித்தடம் 4 (காரடி–ஹடப்சர்–ஸ்வர்கேட்–கடக்வாஸ்லா) மற்றும் பாதை 4ஏ  (நல் ஸ்டாப்–வர்ஜே–மாணிக் பாவ்) ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 31.636 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடம் கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு புனே முழுவதும் உள்ள ஐடி மையங்கள், வணிக மண்டலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் …

Read More »

மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் 4 மாவட்டங்களை உள்ளடக்கிய இரண்டு பல்தட ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ரூ.2,781 கோடி மதிப்பிலான ரயில்வே அமைச்சகத்தின் இரண்டு திட்டங்களுக்கு இன்று ஒப்புதல் அளித்தது. தேவ்பூமி துவாரகா (ஓகா) – கனாலஸ் இரட்டைவழிப்பாதை – 141 கிமீ பத்லபூர் – கர்ஜாத் 3-வது மற்றும் 4-வது வழித்தடம் – 32 கிமீ இதன் மூலம் அப்பகுதியில் போக்குவரத்து சேவை மேம்பட்டு அப்பகுதி மக்களின் வேலைவாய்ப்பும், சுயவேலைவாய்ப்புகளும் அதிகரிக்க வாய்ப்பு …

Read More »

குருதேக் பகதூர்ஜியின் 350-வது தியாக தினம்: குருக்ஷேத்திரத்தில் பிரதமர் உரை

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இன்று ஹரியானாவின் குருக்ஷேத்திரத்தில் நடைபெற்ற ஸ்ரீ குருதேக் பகதூர்ஜியின் 350-வது ஷஹீதி திவஸ் (தியாக தினம்) நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றினார். காலையில் அயோத்தியிலும் மாலையில் குருக்ஷேத்திரத்திலும் இருப்பதன் மூலம் இந்தியாவின் பாரம்பரியம் சங்கமிப்பதாக அவர் குறிப்பிட்டார். சமீபத்தில் அயோத்தியில் தர்ம துவஜம் நிலைநாட்டப்பட்ட வேளையில், சீக்கிய சங்கத்திடமிருந்து ஆசிகளைப் பெறும் வாய்ப்பு கிடைத்ததாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். குருக்ஷேத்திரத்தின் புண்ணிய பூமியில் நீதியைக் …

Read More »

பிரதமர் சாஃப்ரான் விமான எஞ்சின் சர்வீசஸ் இந்தியா தொழிற்சாலையை நவம்பர் 26 ஆம் தேதி திறந்து வைக்கிறார்

பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 26-ம் தேதி காலை 10 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஜிஎம்ஆர்  விண்வெளி மற்றும் தொழில்துறை பூங்கா – சிறப்பு பொருளாதார மண்டலத்தில்  அமைந்துள்ள சாஃப்ரான் விமான எஞ்சின் சர்வீசஸ் இந்தியா (SAESI) தொழிற்சாலையை திறந்து வைப்பார். இது ஏர்பஸ் மற்றும் போயிங் 737  விமானங்களுக்கு சக்தி அளிக்கும் லீடிங் எட்ஜ் ஏவியேஷன் ப்ராபல்ஷன் எஞ்சின்களுக்கான சாஃப்ரானின் பிரத்யேக …

Read More »

அயோத்தியில் ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் கொடி ஏற்றுதல் உத்சவத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

நாட்டின் சமூக-கலாச்சார மற்றும் ஆன்மீகத்தில் ஒரு முக்கியமான நிகழ்வைக் குறிக்கும் வகையில், உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புனித ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலின் கொடிக் கம்பத்தில்  இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி காவி கொடியை ஏற்றி வைத்தார்.  கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைவதையும், கலாச்சார கொண்டாட்டம் மற்றும் தேசிய ஒற்றுமையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதையும் இந்த விழா குறிக்கிறது. இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இன்று அயோத்தி …

Read More »