தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள்/ குழுக்கள் ஏற்பாடு செய்திருந்த சுற்றுச்சூழல் குறித்த மண்டல மாநாடு 2025, சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நிறைவடைந்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டின் நிறைவு விழாவில், நிறுவன ஒருமைப்பாடு, கொள்கை முதல் செயல் வரையிலான அமலாக்கம் மற்றும் எதிர்வினையிலிருந்து தடுப்பு சுற்றுச்சூழல் நிர்வாகத்திற்கு மாறுதல் முதலியவற்றின் வலிமையான முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய உச்சநீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தொழில்நுட்ப நிர்பந்தம் மட்டுமல்ல, இது ஒரு அரசியலமைப்பு உத்தரவாதம் என்று கூறினார். ஒழுங்குமுறை கட்டமைப்புகள் அவ்வப்போது தோல்வியடைவதற்கு போதுமான சட்டங்கள் இல்லாதது காரணம் அல்ல, மாறாக நிறுவனங்கள் சட்டங்களை செயல்படுத்த தயங்குவது தான் காரணம் என்று அவர் வலியுறுத்தினார். நிறுவன வலிமைப்படுத்தல், ஒருங்கிணைந்த நிர்வாக கட்டமைப்பு, ஆதாரங்களின் அடிப்படையிலான அமலாக்கம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் குடிமக்களின் பங்கேற்பு/ நடத்தை மாற்றம் ஆகிய ஐந்து தூண்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் நம்பகமான முன்னோக்கிய பாதையை நீதிபதி மகாதேவன் சுட்டிக்காட்டினார். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திரு ஏ.ஆர்.எல். சுந்தரேசன் தனது உரையில், சுற்றுச்சூழல் நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் எந்த ஒத்திவைப்பும் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தி, இணக்கத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, மாநாட்டில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் அடிமட்ட அளவில் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே நேர்மறையான விளைவுகள் கிடைக்கும் என்று கூறினார். நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாஹூ, கொள்கையையும் செயலையும் ஒன்றாக இணைப்பதே இன்றைய பிரதான சவாலாக உள்ளது என்று கூறினார்.
Read More »குஜராத்தின் ஏக்தா நகரில் தேசிய பாதயாத்திரையின் நிறைவு விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (6.12.2025) குஜராத்தின் ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமை சிலையில் சர்தார் @150 ஒற்றுமை அணிவகுப்பு – தேசிய பாதயாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், இந்த வரலாற்று சிறப்புமிக்க தேசிய பாதயாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகுந்த கவுரமானது என்று கூறினார். நவம்பர் 26-ம் தேதி அரசியல் சாசன தினத்தன்று தொடங்கிய பாதயாத்திரையின் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார். 1,300- க்கும் மேற்பட்ட பாதயாத்திரைகளில் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பது சர்தார் வல்லபாய் படேல் ஏற்றிய நீடித்த ஒற்றுமையின் சுடரை நிரூபித்தது என்று அவர் குறிப்பிட்டார். 560-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைப்பதில் சர்தார் படேலின் வரலாற்று சாதனையை அவர் நினைவுகூர்ந்தார். “அகண்ட பாரதத்தின் வலுவான அடித்தளத்தை ஒன்றிணைத்து அமைத்ததற்காக இந்தியாவின் இரும்பு …
Read More »மகாபரிநிர்வாண தினத்தை முன்னிட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பிரதமர் மரியாதை
மகாபரிநிர்வாண தினத்தை முன்னிட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தியுள்ளார். நீதி, சமத்துவம் மற்றும் அரசியல் சாசனம் மீதான டாக்டர் அம்பேத்கரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இந்தியாவின் தேசியப் பயணத்தை தொடர்ந்து வழிநடத்துகிறது என்று பிரதமர் கூறியுள்ளார். மனிதத்தின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதிலும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துவதிலும் டாக்டர் அம்பேத்கரின் அர்ப்பணிப்பிலிருந்து நமது தலைமுறைகள் உத்வேகம் பெற்றுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வளர்ச்சியடைந்த பாரதத்தைக் கட்டியெழுப்ப நாடு பாடுபடும் போது டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்கள் நாட்டின் பாதையைத் தொடர்ந்து ஒளிரச் செய்யும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது; “மகாபரிநிர்வான் தினத்தன்று டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை நினைவு கூர்கிறேன். அவரது தொலைநோக்குத் தலைமைத்துவமும், நீதி, சமத்துவம் மற்றும் அரசியல் சாசனம் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் நமது தேசியப் பயணத்தைத் தொடர்ந்து வழிநடத்துகின்றன. மனிதத்தின் கண்ணியத்தை நிலைநிறுத்தவும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தவும் அவர் நமது தலைமுறைகளுக்கு ஊக்கமளித்துள்ளார். ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்ப நாம் பாடுபடும் போது அவரது லட்சியங்கள் நமது பாதையை ஒளிரச் செய்யட்டும்.”
Read More »வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தமிழ்நாட்டில் இதுவரை 99.86 சதவீத படிவங்கள் விநியோகம்
தேர்தல் ஆணையம் நடத்தி வரும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில், தமிழ்நாட்டில் இதுவரை 6,40,24,854 படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது 99.86 சதவீதம் ஆகும். தமிழ்நாட்டில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடப்பட்டு இன்று (06.12.2025) மாலை 3 மணி வரை 6,40,24,854 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 68,470 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களும் 2,46,069 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். …
Read More »ரத்தான விமானங்களின் கட்டணத்தை பயணிகள் திரும்பப் பெற ஏற்பாடு – இண்டிகோ நிறுவன நெருக்கடியைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை
விமானம் ரத்து காரணமாக நிலுவையில் உள்ள அனைத்து பயணச்சீட்டு கட்டணத்தையும் தாமதமின்றி திருப்பி வழங்குமாறு இண்டிகோ நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட அல்லது தடை ஏற்பட்ட அனைத்து விமானங்களுக்கான கட்டணத் தொகையை பயணிகளுக்கு திருப்பி வழங்கும் நடைமுறையை நாளை (டிசம்பர் 7, 2025) இரவு 8:00 மணிக்குள் முழுமையாக முடிக்க வேண்டும் என்றும் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கட்டணத்தை திருப்பி வழங்கும் நடைமுறையில் ஏதேனும் தாமதம் அல்லது …
Read More »திறமையை வளர்ப்பதில் பல்கலைக்கழகங்களின் பங்கை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் விளக்கினார்
நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் இன்று உரையாற்றிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், திறமையான மனங்களை ஊக்குவிப்பது, அவர்களின் திறன்களை வளர்ப்பது மற்றும் அவர்களின் திறனை அங்கீகரித்து மதிக்கும் ஒரு தளத்தை வழங்குவதை விட ஒரு பல்கலைக்கழகத்தால் பெரிய பங்களிப்பு எதுவும் அளிக்க முடியாது என்று கூறினார். கிட்டத்தட்ட 29,000 பட்டம் பெறும் மாணவர்களை வாழ்த்திய அமைச்சர், மாணவர்கள் மற்றும் விருது பெற்றவர்களின் சாதனைகள் விழாவின் உண்மையான கவனமாக அமைகிறது என்று கூறினார். மாணவர்களுக்கு வழங்கப்படும் பரந்த அளவிலான வாய்ப்புகளை திரு கோயல் எடுத்துரைத்தார். மாணவர்களில் பாதி பேர் இளம் பெண்கள் என்பதில் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார், மேலும் 450-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை மாணவர்கள் வைத்திருக்கும் பல்கலைக்கழகத்தின் வலுவான கண்டுபிடிப்பு கலாச்சாரத்தைப் பாராட்டினார். மகாபரிநிர்வான் தினத்தன்று டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கரின் பாரம்பரியத்தை நினைவுகூர்ந்த அமைச்சர், சமத்துவம், சமூக நல்லிணக்கம் மற்றும் அனைவருக்கும் வாய்ப்புகள் போன்ற அரசியலமைப்பு மதிப்புகளை மீண்டும் வலியுறுத்தினார். கல்வி என்பது பின்தங்கிய பிரிவுகளை மேம்படுத்துவதற்கான அடித்தளமாகவே உள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார். மேலும் சமூகம் மற்றும் தேசத்திற்கான அவர்களின் கடமைகளை மாணவர்களுக்கு நினைவூட்டினார்.
Read More »ரஷ்ய அதிபரைப் பிரதமர் வரவேற்றார்
இந்தியாவுக்கு வந்துள்ள ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடினை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார். இன்று மாலையும் நாளையும் அவருடன் நடைபெறும் உரையாடல்களை எதிர்நோக்கி இருப்பதாகப் பிரதமர் கூறியுள்ளார். இந்தியா – ரஷ்யா இடையேயான நட்பு காலத்தால் மாறாத ஒன்று எனவும், இது இருநாட்டு மக்களுக்கும் பெரிதும் பயனளித்துள்ளது என்றும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். ரஷ்ய மொழியில் வெளியிடப்பட்ட பகவத் கீதை நூலின் பிரதியை ரஷ்ய அதிபர் …
Read More »இந்தியா-ரஷ்யா இடையேயான வேளாண் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாட்டு வேளாண் அமைச்சர்கள் சந்திப்பு
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான், கிருஷி பவனில் ரஷ்ய கூட்டமைப்பின் வேளாண் அமைச்சர் திருமதி ஒக்ஸானா லூட்டுடன் இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டார். அங்கு இரு தரப்பினரும் தற்போதைய ஒத்துழைப்பைப் பற்றி விவாதித்ததுடன், எதிர்கால ஒத்துழைப்பு வழிவகைகள் குறித்து ஆலோசித்தனர். இந்தியா-ரஷ்யா உறவுகள் நம்பிக்கை, நட்பு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதை அமைச்சர்கள் குறிப்பிட்டனர். தற்போது சுமார் 3.5 பில்லியன் …
Read More »பொது கொள்முதல் குறித்து ஐடிஏஎஸ் பயிற்சி அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் அமர்வு – அரசு மின் சந்தை தளம் சார்பில் நடத்தப்பட்டது
மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அரசு மின் சந்தை தளம், பாதுகாப்புத் துறை கணக்கு சேவைகள் பிரிவு பயிற்சி அதிகாரிகளுக்கு, அரசு மின் சந்தை தளம் எனப்படும் ஜெம் மூலம் பொது கொள்முதலை அதிகரிப்பது தொடர்பான வழிகாட்டுதல் அமர்வைப் புதுதில்லியில் நடத்தியது. அரசு மின் சந்தை தளத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு மிஹிர் குமார் தமது உரையில், டிஜிட்டல் முறையிலான கொள்முதல் என்பது வெளிப்படையான, பொறுப்புணர்வுடன் கூடிய …
Read More »மண்டல சுற்றுச்சூழல் மாநாடு – டிசம்பர் 6, 7 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது
சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வின் சார்பில் 2025 டிசம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் மண்டல சுற்றுச்சூழல் மாநாடு – 2025 நடைபெறவுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி திரு பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் நீதிபதி திருமதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த இரண்டு நாள் மாநாட்டை உச்சநீதிமன்ற நீதிபதி திரு …
Read More »
Matribhumi Samachar Tamil