Tuesday, January 20 2026 | 11:50:08 PM
Breaking News

குஜராத்தின் பர்தா வனவிலங்கு சரணாலயத்தில் நடைபெறும் உலக சிங்க தினம் 2025 கொண்டாட்டங்களில் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் மற்றும் குஜராத் முதல்வர் திரு பூபேந்தர் படேல் கலந்து கொள்கின்றனர்

குஜராத் அரசின் வன மற்றும் சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், ஆகஸ்ட் 10, 2025 அன்று குஜராத்தின் தேவபூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள பர்தா வனவிலங்கு சரணாலயத்தில் உலக சிங்க தினம் – 2025 ஐ கொண்டாட உள்ளது. குஜராத் முதல்வர் திரு பூபேந்தர் படேல், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், குஜராத் வனத்துறை அமைச்சர் திரு முலுபாய் பெரா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற பொது பிரதிநிதிகள் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்வார்கள். ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி கொண்டாடப்படும் உலக சிங்க தினம், உலகளவில் சிங்கங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குஜராத்தில், சௌராஷ்டிரா பகுதியில் மட்டுமே காணப்படும் ஆசிய சிங்கம் ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார அதிசயமாகும். இந்த இனம் நீடித்திருப்பதையும் அதன் வளர்ச்சியையும் உறுதி செய்வதில் வனத்துறை அமைச்சகமும் குஜராத் மாநிலமும் புராஜெக்ட் லயன் மற்றும் மாநில அரசின் தலைமையின் தொடர்ச்சியான முயற்சிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளன. ‘காட்டின் ராஜா’ என்று அழைக்கப்படும் ஆசிய சிங்கத்தின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக, குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ‘உலக சிங்க தினம்’ என்ற பிரமாண்டமான கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும். இந்த கம்பீரமான விலங்குகள் சௌராஷ்டிராவின் 11 மாவட்டங்களில் சுமார் 35,000 சதுர கி.மீ பரப்பளவில் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. குஜராத்தில் சிங்கங்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டு முதல் 32% அதிகரித்துள்ளது, மே 2025 சிங்கங்களின் எண்ணிக்கை மதிப்பீட்டின்படி 891 ஆக உயர்ந்துள்ளது. போர்பந்தர் மற்றும் தேவபூமி துவாரகா மாவட்டங்களில் 192.31 சதுர கி.மீ பரப்பளவில் பர்தா வனவிலங்கு சரணாலயம் உள்ளது. ஆசிய …

Read More »

பிரதமர் திரு நரேந்திர மோடி எம் எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் உரையாற்றினார்

பிரதமர் திரு நரேந்திர மோடி எம் எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டை இன்று (07 ஆகஸ்ட், 2025) தொடங்கி வைத்து உரையாற்றினார். புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் வளாகத்தில் நடைபெற்று வரும் இம்மாநாட்டில் மறைந்த பேராசிரியர் எம் எஸ் சுவாமிநாதனுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார். தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய அவரது பங்களிப்பு ஒரே சகாப்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். புகழ்பெற்ற விஞ்ஞானியான எம் எஸ் …

Read More »

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் 2025

குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் சட்டம், 1952-ன் பிரிவு 4-ன் துணைப் பிரிவுகள் (4) மற்றும் (1) இன் கீழ், தேர்தல் ஆணையம் 07.08.2025 தேதியிட்ட அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் 2025 குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல், அதன் பரிசீலனை மற்றும் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான தேதிகள் மற்றும் வாக்களிப்பு தேதி (தேவைப்பட்டால்) ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. இந்த அறிவிக்கை இன்று இந்திய அரசிதழில் …

Read More »

அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து மாநிலங்களில் வடகிழக்கு மாநில உரிமம் பெற்ற சேவைப் பகுதியின் கீழ் உள்ள நெட்வொர்க் தரத்தை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மதிப்பிடுகிறது

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்), வடகிழக்கு உரிமம் பெற்ற சேவைப் பகுதிக்கான அதன் தனிப்பட்ட தரவு தர முடிவுகளை வெளியிட்டது, இது அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகர், நஹர்லகுன் மற்றும் நாகாலாந்தின் திமாபூர், கோஹிமா மற்றும் நெடுஞ்சாலை எண்-13 வழியாக இட்டாநகரில் இருந்து பும்லா பாஸ் (தவாங்) நெடுஞ்சாலை பாதையை உள்ளடக்கியது. கொல்கத்தாவின் ட்ராய் பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இந்த சோதனைகள், நகர்ப்புற மண்டலங்கள், நிறுவன முக்கிய …

Read More »

நாடு முழுவதும் சமையல் எண்ணெய்கள் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்வதற்கும் சில்லறை விலைகளை நிலைப்படுத்துவதற்கும் மத்திய அரசு நடவடிக்கை

சமையல் எண்ணெய் தரவு இணக்கத்தை அதிகரிக்க, தாவர எண்ணெய் பொருட்கள், உற்பத்தி மற்றும் கிடைக்கும் தன்மை (ஒழுங்குமுறை) ஆணை, 2011 ஐ மத்திய அரசு திருத்துகிறது. இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை, தாவர எண்ணெய் பொருட்கள், உற்பத்தி மற்றும் கிடைக்கும் தன்மை (ஒழுங்குமுறை) ஆணை, 2011 இல் ஒரு திருத்தத்தை அறிவித்துள்ளது. முதலில் 1955 ஆம் …

Read More »

சைபர்ஸ்பேஸ் செயல்பாடுகள் மற்றும் கடல் வழி தாக்குதல் நடவடிக்கைகளுக்கான கூட்டுக் கோட்பாடுகளின் வகைப்படுத்தப்படாத பதிப்புகளை பாதுகாப்புப் படைத் தலைமை அதிகாரி முறையாக வெளியிட்டார்

புதுதில்லியில் ஆகஸ்ட் 07, 2025 அன்று நடந்த தலைமைப் பணியாளர்கள் குழு கூட்டத்தின் போது, பாதுகாப்புப் படைத் தலைமை அதிகாரி (CDS) ஜெனரல் அனில் சவுகான் மற்றும் இராணுவ விவகாரத் துறை செயலாளர் ஆகிய இருவரும் சைபர்ஸ்பேஸ் (இணையவெளி) செயல்பாடுகள் மற்றும் கடற்படை மற்றும் தரையிறங்கும் படைகளால் கடலில் இருந்து தொடங்கப்படும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கான கூட்டுக் கோட்பாடுகள் பற்றிய பதிப்புகளை முறையாக வெளிப்படுத்தினர். இந்தக் கோட்பாடுகள் பற்றிய தகவல்களை வெளிப்படையாக …

Read More »

காசியாபாத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தியல் ஆணையத்தில் மூலிகை மருந்துகளுக்கான சர்வதேச ஒழுங்குமுறை ஒத்துழைப்பு பயிலரங்கு தொடங்கியது

ஆயுஷ் அமைச்சகத்தின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தியல் ஆணையம் (PCIM&H), “மூலிகை மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை” (பணிக்குழு-1) மற்றும் “மூலிகை மருந்துகளின் செயல்திறன் மற்றும் நோக்கம் கொண்ட பயன்பாடு” (பணிக்குழு-3) குறித்த உலக சுகாதார அமைப்பு – மூலிகை மருந்துகளுக்கான சர்வதேச ஒழுங்குமுறை ஒத்துழைப்பு அமைப்பின் பயிலரங்கின் தொடக்க அமர்வை இன்று காஜியாபாத்தில் உள்ள அதன் தலைமையகத்தில் நடத்தியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த பயிலரங்கை ஆயுஷ் …

Read More »

படைப்பு சுதந்திரத்திற்கான உறுதிப்பாட்டை அரசு மீண்டும் வலியுறுத்துகிறது, தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 மூலம் ஓடிடி மேற்பார்வையை அமல்படுத்துகிறது

அரசியலமைப்பு  பிரிவு 19 இன் கீழ் படைப்பு சுதந்திரம் உட்பட கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது. ஓடிடி தளங்களில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தின் எதிர்மறையான விளைவுகளை நிவர்த்தி செய்வதற்காக, தகவல் தொழில்நுட்ப சட்டம் , 2000-ன் கீழ், தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா, நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021 ஐ அரசும் 25.02.2021 அன்று அறிவித்திருந்தது. விதிகளின் பகுதி-III, டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் மற்றும் இணையவழி க்யூரேட்டட் உள்ளடக்கத்தின் …

Read More »

நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் செயல்பாடுகள்

நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் (என்.சி.ஜி.ஜி) முக்கிய குறிக்கோள்களும் செயல்பாடுகளும் கீழே தரப்படுகின்றன: 1.    ஆட்சி மற்றும் கொள்கை சீர்திருத்தங்களுக்கான சிந்தனை அமைப்பாகச் செயல்படுதல் 2.    நல்லாட்சியை மேம்படுத்தக்கூடிய சிறந்த நடைமுறைகள், முன்முயற்சிகள், முறையியல்கள் ஆகியவற்றின் தேசிய களஞ்சியமாகச் செயல்படுதல் 3.    தேசிய மற்றும் மாநில அளவில் நல்லாட்சி மற்றும் பொது நிர்வாகம், பொதுமக்கள் கொள்கைகள், நெறிமுறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி நிர்வாகம் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களில் ஆராய்ச்சி மற்றும் திறன் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல் 4.    ஆளுகை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆலோசனை …

Read More »

திருச்சிராப்பள்ளி, துறையூர் தலைமை அஞ்சல் அலுவலகங்களில் தேசிய கைத்தறி தினம் 2025 ஆகஸ்ட் 6 அன்று கொண்டாடப்பட்டது

1905 ஆகஸ்ட் 07 அன்று கொல்கத்தாவில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கம், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கிய தருணமாகும். இது உள்நாட்டு பொருட்கள் மற்றும் உற்பத்தி தொடர்பான மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இயக்கத்தை நினைவு கூறும் விதமாக, 2015-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி தேசிய கைத்தறி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய ஜவுளி அமைச்சகம் ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 07 வரை …

Read More »