நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வு, 2022 மற்றும் 2023 ஆகியவற்றின் முடிவுகள் தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக, விஷன் ஐஏஎஸ் (அஜய்விஷன் எஜுகேஷன் பிரைவேட் லிமிடெட்) என்ற நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், 11 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அந்த நிறுவனம், “சிஎஸ்இ 2023-ல் முதல் 10 இடங்களில் 7 பேர் மற்றும் முதல் …
Read More »பாதுகாப்பு கணக்குகள் சேவைப் பிரிவு பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவருடன் சந்திப்பு
பாதுகாப்பு கணக்குகள் சேவைப் பிரிவின் 2024-ம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகள், குடியரசுத்தலைவர் மாளிகையில், குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை இன்று (24.12.2025) சந்தித்தனர். அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத்தலைவர், நாட்டின் ஆயுதப் படைகளின் கணக்குகளையும் நிதி மேலாண்மையையும் நிர்வகிக்கும் முக்கியப் பொறுப்பை இந்த அதிகாரிகள் கவனித்து வருவதாகக் குறிப்பிட்டார். நிதியை செலவிடுதல், கணக்கு தணிக்கை, ஆலோசனை போன்றவற்றில் இந்த அதிகாரிகளின் பணி முக்கியமானது என்று அவர் தெரிவித்தார். இந்தப் …
Read More »விளையாட்டுகள் ஒழுக்கத்தை வளர்ப்பதுடன் தேசத்தை வலிமையாக்குகின்றன– குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன்
விளையாட்டுகள் ஒழுக்கத்தையும் நற்பண்புகளையும் வளர்ப்பதுடன் தேசத்தை வலிமையாக்குகின்றன என்று குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆக்ராவில் நடைபெற்ற நாடாளுமன்ற தொகுதி அளவிலான விளையாட்டு விழாவில் தலைமை விருந்தினராக இன்று (24.12.2025) அவர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது பழங்கால தத்துவங்கள், நல்லிணக்கத்தையும் உடல் நலத்தையும் முக்கியமாக போதிப்பதாக அவர் கூறினார். விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலம் நல்லிணக்கம் அதிகரிப்பதுடன் உடல்நலமும் மேம்படும் என்று அவர் குறிப்பிட்டார். விளையாட்டுகள் போட்டித்தன்மை உள்ளவை …
Read More »வருமான ஆதரவையும் நீண்ட கால கிராமப்புற உற்பத்தித்திறனையும் விபி-ஜி ராம் ஜி சட்டம் எவ்வாறு மேற்கொள்கிறது என்பது குறித்த ஒரு கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று, வருமான ஆதரவு, சொத்து உருவாக்கம், விவசாய நிலைத்தன்மை மற்றும் நீண்ட கால கிராமப்புற உற்பத்தித்திறன் ஆகியவற்றை ஒரு சமரசமாக அல்லாமல், ஒரு தொடர்ச்சியாக, வளர்ச்சியடைந்த பாரதம் –ஜி ராம் ஜி சட்டம் எவ்வாறு மேற்கொள்கிறது என்பது குறித்து மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் எழுதிய ஒரு கட்டுரையைப் பகிர்ந்துள்ளார். “இந்த மசோதாவிற்கு முன்பு மாநில அரசுகளுடன் விரிவான ஆலோசனைகள், தொழில்நுட்பப் …
Read More »தில்லி மெட்ரோவின் ஐந்தாம் கட்ட (ஏ) திட்டத்தின் ஒரு பகுதியாக மூன்று புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், தில்லி மெட்ரோவின் 16.076 கி.மீ. நீளமுள்ள ஐந்தாம் கட்ட (ஏ) திட்டத்தின் ஒரு பகுதியாக மூன்று புதிய வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அவை: 1. ஆர்.கே. ஆசிரம மார்க் முதல் இந்திரபிரஸ்தா வரை (9.913 கி.மீ.), 2. ஏரோசிட்டி முதல் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் முனையம்-1 வரை (2.263 கி.மீ.) 3. துக்ளகாபாத் முதல் …
Read More »மிக அதிக எடையுள்ள செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியதன் மூலம் எல்விஎம்3 ராக்கெட் உலகத் தரம் வாய்ந்த நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
அதிக எடை கொண்ட அமெரிக்காவின் ப்ளூபேர்ட் பிளாக்-2 தகவல் தொடர்பு செயற்கைகோள், எல்விஎம்3-எம்6 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவிற்கு மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தலைமைத்துவத்தின் கீழ், இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வருவதாகவும், விண்வெளித் தொழில்நுட்பத்தில், வளர்ந்து வரும் வலிமை, நம்பகத்தன்மை, உலகின் முன்னணி நாடாக இந்தியாவை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது என்று கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து விண்ணில் செலுத்தியுள்ள செயற்கைகோள்களிலேயே மிகவும் அதிக எடை கொண்ட இந்த செயற்கைக்கோளை இந்திய ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, குறிப்பிட்ட சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்தத் திட்டம் இந்தியாவின் கனரக செயற்கைகோள் ஏவுதல் திறன்களில் இந்தியா அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்றும், உலகளவில் வர்த்தக ரீதியில் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான சந்தையில் அதன் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். எல்விஎம்3-எம்6 ராக்கெட் எவ்வித குறைபாடுமின்றி செயல்பட்டு, ப்ளூபேர்ட் பிளாக்-2 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை நிர்ணயிக்கப்பட்ட அதன் புவி சுற்றுவட்டப் பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தியுள்ளதாக மத்திய விண்வெளித் துறைச் செயலாளரும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான டாக்டர் வி. நாராயணன் அறிவித்தார். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ராக்கெட்டை பயன்படுத்தி இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் இது என்றும், எல்விஎம்3-எம்6 ராக்கெட்டின் மூன்றாவது முழுமையான …
Read More »உளவுத்துறை நூற்றாண்டு விழாவில் குடியரசுத்தலைவர் உரையாற்றினார்
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (டிசம்பர் 23, 2025) புதுதில்லியில் நடைபெற்ற ‘மக்களை மையமாகக் கொண்ட தேசியப் பாதுகாப்பு வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் சமூகப் பங்கேற்பு’ என்ற தலைப்பில் உளவுத்துறை நூற்றாண்டு அறக்கட்டளை சொற்பொழிவில் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதிலும், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை உறுதி செய்வதிலும் ஐபி எனப்படும் உளவுத்துறை ஒரு சிறந்த பங்கை வகித்து வருகிறது என்று கூறினார். இந்த சொற்பொழிவுக்கான கருப்பொருள் நமது நாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். …
Read More »இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், பொருளாதாரத்தை வலுப்படுத்துவது குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் இப்போது வரி குறைப்புக்கு மட்டுமல்லாமல் அதற்கு அப்பால், பொருளாதாரத்தை வலுப்படுத்தி, பல லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி ஒரு பரந்த நோக்கத்தைக் கொண்டதாக அமைந்துள்ளன என்பதை விளக்கும் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஒரு வரலாற்று மைல்கல் என்றும், இது பெண்கள் தலைமையிலான முதல் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்றும் …
Read More »ஸ்ரீ ராமரின் விலைமதிப்பற்ற தஞ்சாவூர் ஓவியம் கலை படைப்பை அஞ்சல் துறை, பெங்களூருவிலிருந்து அயோத்திக்குக் கொண்டு செல்கிறது
ஸ்ரீ ராமரின் விலைமதிப்பற்ற தஞ்சாவூர் ஓவிய கலை படைப்பை, அதன் பொருட்கள் அனுப்பும் அஞ்சல் சேவையைப் பயன்படுத்தி, அஞ்சல் துறை, பெங்களூருவிலிருந்து அயோத்திக்கு வெற்றிகரமாகக் கொண்டு சென்றது. பாரம்பரிய தஞ்சாவூர் ஓவியம் கலை பாணியில், விலைமதிப்பற்ற கற்களால் பதிக்கப்பட்ட தங்க அடித்தளத்துடன் உருவாக்கப்பட்ட இந்த ஓவியம், தனித்துவமான கலை மற்றும் பாரம்பரிய மதிப்பைக் கொண்ட ஒரு விலைமதிப்பற்ற கலாச்சார கலைப் பொருளாகும். இந்தப் புனித கலைப்படைப்பை, பெங்களூருவைச் சேர்ந்த திருமதி ஜெயஸ்ரீ ஃபனீஷ், அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி …
Read More »வளர்ச்சியடைந்த இந்தியா மற்றும் பாதுகாப்புத் தயார் நிலைக்கான அரியவகை கனிமங்களின் முக்கியத்துவம்
புவிசார் அரசியல், நாட்டின் இறையாண்மை மற்றும் மதிப்புச் சங்கிலி போன்ற அம்சங்களில் அரியவகை கனிமங்களின் பங்களிப்புக் குறித்து உயர்நிலை குழுக் கூட்டம் புதுதில்லியில் இம்மாதம் 17-ம் தேதி நடைபெற்றது. கூட்டுப் போர்த்திறனாய்வு மையத்தின சார்பில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷ்ல் அசுதோஷ் தீட்சித் கலந்து கொண்டு முக்கிய உரையாற்றினார். நாட்டின் பாதுகாப்பு, பாதுகாப்புப் படையின் திறன் மேம்பாடு, தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கான உத்திசார் நடவடிக்கைகளுக்கு …
Read More »
Matribhumi Samachar Tamil