Thursday, December 19 2024 | 02:23:19 PM
Breaking News

Tag Archives: ஆட்டோமேஷன்

காவல்படையை நவீனமயமாக்கல்

மாநில காவல் படைகள் காவல் படைகளை நவீனமயமாக்குவது என்பது  நடைபெற்று வருகின்ற மற்றும் தொடர்ச்சியான செயல்முறையாகும். அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி ‘காவல்படை’ மற்றும் ‘பொது ஒழுங்கு’ ஆகியவை மாநில விவகாரங்கள் ஆகும் .காவல்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பாகும். எனினும், மாநிலங்கள் தங்கள் காவல் படைகளை நவீனப்படுத்தவும், தளவாடங்களை மேம்படுத்தவும் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மத்திய அரசு “காவல்துறை நவீனமயமாக்கலுக்கான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவி செய்தல்” என்ற திட்டத்தின் கீழ் உதவி புரிகிறது. தொடர்புடைய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் மாநில/யூனியன் பிரதேச காவல் படைகளை போதுமான அளவு ஆயத்தப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காவல் நிலையங்களை நிர்மாணிப்பதுடன், காவல் நிலையங்களுக்குத் தேவையான நவீன தொழில்நுட்பம், ஆயுதங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் போன்றவற்றை வழங்குவதன் மூலம் காவல்துறை உள்கட்டமைப்பை அதிநவீன அளவில் வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும், குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும், வீட்டுவசதி உள்ளிட்ட பிற காவல் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதும் இதில் அடங்கும். 2021-22-ம் ஆண்டு  முதல் 2025-26-ம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் காவல்துறை நவீனமயமாக்கலுக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவி புரியும் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.4846 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய காவல் படைகள் மத்திய ஆயுதக் காவல் படைகளுக்கு (அசாம் ரைபிள்ஸ், எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை), மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை, தேசிய பாதுகாப்புப் படை மற்றும் சஷஸ்திர  சீமா  பால்) 01.01.2022 முதல் 31.03.2026 வரையிலான காலத்திற்கு ரூ.1523 கோடி மொத்த நிதி ஒதுக்கீட்டில் நவீனமயமாக்கல் திட்டம்-4 க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  இந்த  திட்டத்தின் மூலம்  , எல்லைகளைப் பாதுகாத்தல் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பைப் பராமரித்தல் போன்ற முக்கியமான பணிகளைச் செய்ய உதவும் வகையில் மத்திய ஆயுதக் காவல் படையினருக்கு  நவீன   ஆயுதங்கள்,   கண்காணிப்பு   மற்றும்   தகவல் தொடர்பு  சாதனங்கள், சிறப்பு வாகனங்கள், பாதுகாப்பு கவசங்கள் போன்றவை அளிக்கப்பட்டுள்ளன. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.

Read More »