Thursday, January 01 2026 | 03:53:16 PM
Breaking News

Tag Archives: தகவல் தொழில்நுட்பம்

மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா இந்திய இணைய ஆளுகை மன்றத்தின் நான்காவது பதிப்பை தொடங்கி வைக்கிறார்

இந்திய இணைய ஆளுகை மன்றம் (IIGF-ஐஐஜிஎஃப்) – 2024 என்ற மாநாடு நாளையும், நாளை மறுநாளும் (2024 டிசம்பர் 9, 10) புது தில்லியின் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப மாநாட்டு மையத்தில் நடைபெறும். மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்தியாவின் தேசிய இணைய பரிமாற்ற அமைப்பு (NIXI) ஆகியவற்றின் ஆதரவுடன் இது நடத்தப்படுகிறது. இந்த முயற்சி இணைய நிர்வாகத்தின் முக்கியமான அம்சங்களை ஆராய்தல், அர்த்தமுள்ள உரையாடலை வளர்த்தல், உலகளாவிய டிஜிட்டல் சூழலில் இந்தியாவின் நிலையை முன்னிலைப்படுத்முதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டதாகும். மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார். …

Read More »