இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கான 3 நாள் பேச்சுவார்த்தை பயணம் 2024 டிசம்பர் 6 அன்று புதுதில்லியில் நிறைவடைந்தது. 2024 டிசம்பர் 4 முதல் 6 வரை நடைபெற்ற இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் உத்திப்பூர்வ கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் ஒரு முக்கியமான அம்சமாகும். இந்திய தூதுக்குழுவுக்கு வர்த்தகத் துறையின் கூடுதல் செயலாளரும் தலைமை பேச்சுவார்த்தையாளருமான திரு. ராஜேஷ் அகர்வால் தலைமை தாங்கினார். ஆஸ்திரேலிய தூதுக்குழுவுக்கு வெளியுறவு …
Read More »தில்லியில் நடைபெறும் அஷ்டலட்சுமி மகோத்சவம் வடகிழக்குப் பகுதியின் துடிப்பான ஜவுளித் துறை, சுற்றுலா வாய்ப்புகள், பாரம்பரிய கைவினைத்திறன் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது: பிரதமர்
மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா எழுதிய கட்டுரையை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, தில்லியில் நடைபெறும் அஷ்டலட்சுமி மகோத்சவம் வடகிழக்குப் பகுதியின் துடிப்பான ஜவுளித் துறை, சுற்றுலா வாய்ப்புகள், பாரம்பரிய கைவினைத்திறன் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து இணைப்பு, டிஜிட்டல் உள்ளடக்கம், உள்கட்டமைப்பில் முதலீடு ஆகியவற்றின் மூலம் வடகிழக்கு இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது …
Read More »