நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான நாட்டின் உறுதியான நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் வகையில், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தேசிய அளவில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு வசதியாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகள், ஐநா சபையின் முகமைகள் உள்ளிட்ட பல்வேறு பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து தேசிய அளவிலான குறியீடுகளை வழங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் – தேசிய குறியீடுகளுக்கான கட்டமைப்பு அடிப்படையில், ஆண்டு தோறும் புள்ளிவிவர தினத்தன்று (அதாவது ஜூன் 29-ம் தேதியன்று) …
Read More »மருத்துவ மின் வெப்பமானியின் உத்தேச விதிகள் குறித்து 2024 டிசம்பர் 30 வரை பொதுமக்களின் கருத்துக்களை மத்திய அரசு வரவேற்கிறது
இந்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறையின் கீழ் இயங்கும் சட்டமுறை எடையளவுத் துறை, எடையிடுதல், அளவிடும் சாதனங்களின் துல்லியத்தையுத் நம்பகத்தன்மையையும் உறுதி செய்வதன் மூலம் நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்கிறது. மனிதர்கள், விலங்குகளின் உடல் வெப்பநிலையை அளவிட வடிவமைக்கப்பட்ட மருத்துவ மின் வெப்பநிலைமானிகளின் (எலக்ட்ரிக்கல் தெர்மாமீட்டர்) தரப்படுத்தலையும் துல்லியத்தையும் மேம்படுத்த, வரைவு விதிகள் முன்மொழியப்பட்டுள்ளன. காய்ச்சல், தாழ்வெப்பநிலை போன்ற நிலைமைகளைக் கண்டறிவதில் முக்கிய பங்கு வகிக்கும் இத்தகைய சாதனங்களுக்கான தற்போதுள்ள விதிமுறைகளை திருத்துவதை இந்த விதிகள் நோக்கமாகக் கொண்டுள்ளன. …
Read More »