Thursday, December 19 2024 | 12:25:39 PM
Breaking News

Tag Archives: வசதிகள்

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் புதிய தொழிற்சாலைகளை அமைப்பதற்கு ஊக்குவிப்பும் வசதியும் அளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை மற்றும் பிற மத்திய அமைச்சகங்கள் / துறைகள் மூலம், பொருத்தமான கொள்கை தலையீடுகளை செய்து நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறை வளர்ச்சிக்கான உகந்த சூழலை மத்திய அரசு ஏற்படுத்துகிறது. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் புதிய தொழில்களை தொடங்குவதற்கான  மேம்பாடு மற்றும் வசதி அளிக்க பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் தற்போது நடைபெற்று வரும் திட்டங்களுடன் கூடுதலாக,  இந்தியாவில் தயாரியுங்கள், ஸ்டார்ட் அப் இந்தியா, பிரதமரின் விரைவு சக்தி, தேசிய உள்கட்டமைப்பு திட்டம், தேசிய தொழில்துறை வழித்தடத் திட்டம், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை  திட்டம், எளிதாக வர்த்தகம் செய்வதை ஊக்குவித்தல், இணக்க சுமையைக் குறைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. மேலும் தேசிய ஒற்றைச் சாளர முறை , இந்திய தொழில்துறை நில வங்கி, திட்டக் கண்காணிப்புக் குழு, தாராளமயமாக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை, இந்திய காலணி மற்றும் தோல் மேம்பாட்டுத் திட்டம் போன்றவையும் செயல்படுத்தப்படுகின்றன. முதலீடுகளை விரைவுபடுத்துவதற்கான நிறுவன அமைப்பு, மத்திய அரசின் சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்கள் / துறைகளில் திட்ட மேம்பாட்டுக் குழுக்கள்  வடிவில் உருவாக்கப்பட்டுள்ளன. தேசிய தொழில்துறை பெருவழித்தட மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு பல்வேறு தொழில்துறை பெருவழித்தட திட்டங்களை உருவாக்கி வருகிறது, இது உலகின் சிறந்த உற்பத்தி மற்றும் முதலீட்டு இடங்களுடன் போட்டியிடக்கூடிய இந்தியாவில் பசுமை தொழில்துறை பகுதிகள் / பிராந்தியம் / முனையங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

Read More »