குடியரசுத் துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன், இன்று புதுதில்லியில் நடைபெற்ற ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் (ஏஇபிசி) ஆண்டு விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்று, இந்தியாவின் ஆடை ஏற்றுமதித் துறைக்குச் சிறந்த பங்களிப்புகளை வழங்கிய விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் துணைத்தலைவர், ஆடை மற்றும் ஜவுளித் துறை இந்தியாவின் பொருளாதாரத்தின் ஒரு முக்கியத் தூணாகத் திகழ்கிறது என்றும், இது 45 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குவதோடு, 100 மில்லியனுக்கு மேற்பட்டோரின் வாழ்வாதாரங்களுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறது என்றும் கூறினார். இந்தத் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2 சதவீதமும், உற்பத்தித் துறையின் மொத்த மதிப்பு கூட்டலில் கிட்டத்தட்ட 11 சதவீதமும் பங்களிக்கிறது என்று அவர் …
Read More »
Matribhumi Samachar Tamil