மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், மகாராஷ்டிராவின் புனே அருகே நாராயண்கோன் பகுதியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் (KVK) விவசாயிகளுடன் இன்று (03.06.2025) கலந்துரையாடினார். முன்னதாக, மத்திய அமைச்சர் நாராயண்கோன் வேளாண் விளைபொருள் சந்தைக் குழு, தக்காளி சந்தை, உள்ளூர் பண்ணை வயல்கள், குளிர்பதன கிடங்கு ஆகியவற்றை வேளாண் விஞ்ஞானிகளுடன் இணைந்து அவர் பார்வையிட்டார். அங்கு அவர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் திரு சௌகான், வேளாண் விஞ்ஞானிகள் வயல்களுக்குச் சென்று விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கத்தின் நோக்கங்களை எடுத்துரைத்த அவர், விவசாயத் துறையில் வளர்ச்சியும், விவசாயிகளின் செழிப்பும் இல்லாமல் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க முடியாது என்று கூறினார். …
Read More »இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தில் வேளாண் விஞ்ஞானிகளுக்கான நியமனத்தில் முறைகேடு நடப்பதாக வெளியான செய்திகள் அடிப்படை ஆதாரமற்றது: இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம்
27.12.2024 அன்று சில ஊடகங்களில் “இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தில் வேளாண் விஞ்ஞானிகளின் நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாகவும், அது குறித்து விசாரணை கோரியும்” வெளியான சில செய்திகளை மேற்கோள் காட்டி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் (ஐ.சி.ஏ.ஆர்) என்பது மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் வேளாண் ஆராய்ச்சி, கல்வித் துறையின் கீழ் வேளாண் ஆராய்ச்சி, கல்வி, விரிவாக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ஒரு …
Read More »
Matribhumi Samachar Tamil