Wednesday, January 07 2026 | 07:40:05 PM
Breaking News

Tag Archives: Air Force

கொச்சியில் தீ விபத்துக்குள்ளான சிங்கப்பூர் கப்பலில் தீயைக் கட்டுபடுத்த கடலோரக் காவல்படை, கடற்படை, விமானப் படை ஆகியவை, அதிக ஆபத்துகளுக்கு இடையில் தீவிர நடவடிக்கை

சிங்கப்பூர் கப்பல் எம்.வி. வான் ஹாய் 503-ல் ஏற்பட்ட தீயை அணைக்கும் நடவடிக்கையிலும் மீட்பு நடவடிக்கையிலும் ஒரு பெரிய முன்னேற்றமாக, இந்திய கடலோர காவல்படை (ஐசிஜி), இந்திய கடற்படை, இந்திய விமானப்படை ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. இவை இணைந்து, நேற்று (ஜூன் 13, 2025) கடலில் தீ விபத்தில் சிக்கிய கொள்கலன் கப்பலை வெற்றிகரமாக இழுத்துச் சென்றன. வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம், பலத்த மேற்கு காற்று ஆகியவை காரணமாக அந்தக் கப்பல் கரையை நோக்கி ஆபத்தான முறையில் நகர்ந்தது. இந்த நிலையில், ஜூன் 13 அன்று கொச்சியில் இருந்து சென்ற கடற்படை ஹெலிகாப்டர், மிகவும் சவாலான சூழ்நிலையில் மீட்புக் குழு உறுப்பினர்களை கப்பலில் வெற்றிகரமாக இணைத்தது. பின்னர் அந்தக் குழு கொச்சி கடற்கரையிலிருந்து சுமார் 20 கடல் மைல்கள் தொலைவில் 600 மீட்டர் இழுவைக் கயிற்றை இணைத்தது. இந்தக் கப்பல் இப்போது 1.8 கடல் மைல் வேகத்தில் மேற்கு நோக்கி இழுத்துச் செல்லப்படுகிறது. இன்னும் 35 கடல் மைல்கள் தொலைவு உள்ளது. கடலோர காவல் படையின் 3 ரோந்துக் கப்பல்கள், அந்த தீ விபத்துக்கு உள்ளான கப்பலில் தீயை அணைக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. தற்போது, ​​அடர்ந்த புகை மட்டுமே கப்பலில் உள்ளது. சர்வதேச விதிமுறைகளின்படி, அதன் விதி உரிமையாளர்களால் தீர்மானிக்கப்படும் வரை, கப்பல் இந்திய கடற்கரையிலிருந்து குறைந்தது 50 கடல் மைல்கள் தொலைவில் இருப்பதை உறுதிசெய்ய கடலோர காவல் படை, கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்துடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுகிறது. கூடுதல் தீயணைப்பு இழுவைக் கப்பல்கள் வருவதால் நிலைமை மேலும் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More »

‘புதுமையே சிறந்த எதிர்காலத்திற்கான பாதை’ என்ற தலைப்பில் கருத்தரங்கு – ஏரோ இந்தியா கண்காட்சியின் ஒரு பகுதியாக பிப்ரவரி 11 அன்று விமானப்படை நடத்துகிறது

தற்சார்பை அடைய அரசு கொள்கைகள் அடிப்படையில் உள்நாட்டு பாதுகாப்புத் தொழில்துறையின் திறனைப் பயன்படுத்தும் நோக்கில் விமானப்படை (IAF) செயல்பட்டு வருகிறது. உதிரி பாகங்கள், உபகரணங்களின் நிலைத்தன்மையை புதுமைப்படுத்துவதில் கணிசமான வெற்றி எட்டப்பட்டுள்ளது. சிக்கலான எதிர்கால தொழில்நுட்பங்கள், ஆயுத அமைப்புகள், விண்வெளி களம் ஆகியவற்றை நோக்கி இப்போது  கவனம் செலுத்தப்படுகிறது. ஏரோ இந்தியா என்பது முதன்மையான விண்வெளி, பாதுகாப்பு கண்காட்சிகளில் ஒன்றாகும். இது விமானத் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள் தயாரிப்புகளை …

Read More »

மத்திய விமானப்படை தலைமையக தளபதிகள் கருத்தரங்கம்

மத்திய விமானப்படை தலைமையக தளபதிகள் கருத்தரங்கில்  பங்கேற்பதற்காக  மத்திய விமானப்படை தலைமையகத்திற்கு வருகை தந்த விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங்கை, ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் வரவேற்றார். அவருக்கு இந்திய விமானப்படையின் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.  இந்த கருத்தரங்கம் டிசம்பர் 18 இல் தொடங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில், இந்திய விமானப்படையின் செயல்பாட்டு திறனை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போதுள்ள பாதுகாப்பு சூழலை வலுப்படுத்துவதில்இந்திய விமானப்படையின் …

Read More »