மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா, இன்று (15.06.2025) உத்தரபிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உத்தரபிரதேச காவல்துறையில் பணிக்குத் தேர்வான 60,244 சிவில் காவலர்களுக்கு (கான்ஸ்டபிள்கள்) பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், உத்தரபிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, உத்தரப்பிரதேச காவல்துறை நாட்டில் மிகப்பெரிய காவல் படை என்றும், ஆனால் …
Read More »இந்திய மொழிகள் பிரிவை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார்
இந்திய மொழிகள் பிரிவை (பாரதிய பாஷா அனுபாக்) மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். உள்துறை அமைச்சக செயலாளர், ஆட்சி மொழிப்பிரிவு செயலாளர் உள்ளிட்ட பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்திய மொழிகள் பிரிவு உருவாக்கப்பட்டிருப்பதன் மூலம் ஆட்சி மொழித்துறை முழுமை அடைந்திருப்பதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார். வெளிநாட்டு மொழிகளின் செல்வாக்கிலிருந்து நிர்வாகத்தை விடுவிக்கும் …
Read More »மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, மகாராஷ்டிராவின் புனேவில் மேற்கு மண்டல கவுன்சிலின் 27-வது கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இன்று (22.02.2025) நடைபெற்ற மேற்கு மண்டல கவுன்சிலின் 27-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் மகாராஷ்டிரா, குஜராத், கோவா முதலமைச்சர்கள், தாத்ரா – நகர் ஹவேலி, டாமன் – டையூ நிர்வாகிகள், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மத்திய உள்துறை செயலாளர், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் செயலகம், கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர், மேற்கு மண்டல மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், மத்திய அமைச்சகங்கள், துறைகளின் …
Read More »ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு நிலை குறித்த உயர்மட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார்
ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு நிலை குறித்து புதுதில்லியில் இன்று நடைபெற்ற உயர்மட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும், கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, மத்திய உள்துறை செயலாளர், உளவுத்துறை இயக்குநர், ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர், உள்துறை அமைச்சகம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் கலந்து …
Read More »திரிபுராஅரசால் 2,800-க்கும் மேற்பட்ட பணிநியமனக் கடிதங்களை காணொலிக்காட்சியாக வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்
திரிபுரா அரசால் 2,800-க்கும் மேற்பட்ட பணிநியமனக் கடிதங்களை காணொலிக்காட்சியாக வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த காலங்களில் ஒரு கட்சியின் பணியாளர்களுக்கு மட்டுமே திரிபுராவில் பணிகள் கிடைத்தன என்றும், தற்போது திரிபுரா அரசு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன், எந்த பாகுபாடும், பரிந்துரையும் அல்லது ஊழலும் இல்லாமல் பணிகளை வழங்கி வருகிறது என்று தெரிவித்தார். தற்போதைய திரிபுரா முதலமைச்சர் பேராசிரியர் …
Read More »76வது குடியரசு தின கொண்டாட்டத்திற்காக தலைநகருக்கு வருகை தந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாடினார்
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா, 76வது குடியரசு தின விழாவிற்கு தலைநகருக்கு வருகை தந்த புது தில்லியில், எழுச்சிமிகு கிராமம் திட்டத்தின் கீழ் உள்ள கிராமங்களைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்களுடன் இன்று கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் திரு ஜுவல் ஓரம், மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு நித்யானந்த் ராய், மத்திய …
Read More »மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் கூட்டுறவு மாநாட்டில் உரையாற்றி, கூட்டுறவு தொடர்பான பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற கூட்டுறவு மாநாட்டில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். நிகழ்ச்சியின் போது, கூட்டுறவுத் துறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சர் திரு முரளிதர் மோஹல், மகாராஷ்டிர துணை முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய …
Read More »மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, அகமதாபாத்தில் ‘இந்து ஆன்மிக மற்றும் சேவை விழா’வைத் தொடங்கி வைத்தார்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்து ஆன்மிக மற்றும் சேவை விழாவை (அத்யாத்மிக் அவுர் சேவா மேளா) மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இன்று (23.01.2025) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு. பூபேந்திர படேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மத்திய உள்துறை அமைச்சர் தமது உரையில், ஒரே மேடையில் 200 க்கும் மேற்பட்ட சேவை அமைப்புகளை இந்த விழா ஒன்றிணைத்துள்ளது …
Read More »குஜராத் மாநிலம் சூரத்தில் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் நெஞ்சக நோய் மருத்துவமனையை மத்திய அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார்
குஜராத் மாநிலம் சூரத்தில் ஸ்ரீ பாபுலால் ரூப்சந்த் ஷா மகாவீர் புற்றுநோய் மருத்துவமனை, ஸ்ரீ பூல்சந்த்பாய் ஜெய்கிஷண்டாஸ் வகாரியா நெஞ்சகநோய் மருத்துவமனை ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, சூரத் ஒரு முக்கியமான நகரம் என்றும், கடந்த சில ஆண்டுகளில் நகரத்தில் பல தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன என்றும் திரு அமித் ஷா கூறினார். குஜராத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த மேற்கு இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளின் மையமாகவும் சூரத் …
Read More »விஜயவாடாவில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 20-வது நிறுவன தின விழா – மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்பு
ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற தேசிய பேரிடர் மீட்புப் படையின் 20-வது நிறுவன தின விழா நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது, திரு அமித் ஷா, சுமார் ரூ. 220 கோடி மதிப்புள்ள பல திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம்மோகன் நாயுடு, மத்திய உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார், உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன், தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைமை இயக்குநர் திரு பியூஷ் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தமது உரையில், இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது, மீட்புக்கு தேசிய பேரிடர் மீட்பு படை வருகிறது என்று கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கடந்த பத்து ஆண்டுகளில் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (என்ஐடிஎம்) மூலம் பேரிடர் மேலாண்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் எடுத்துரைத்தார். களத்தில் திறம்பட பேரிடர் மேலாண்மையை உறுதி செய்ய, கிராம பஞ்சாயத்துகள், காவல் நிலையங்கள், தேசிய மாணவர் படை, சாரணர் இயக்கத்தினர் தொடங்கி மத்திய அரசு வரை பலரது தடையற்ற ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். பேரிடர் மேலாண்மையின் அணுகுமுறை, வழிமுறைகள், நோக்கங்களில் புரட்சிகரமான மாற்றத்தை அறிமுகப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு திரு அமித் ஷா நன்றி தெரிவித்தார். இழப்புகளைக் குறைப்பதுடன் பேரிடர்களின் போது பூஜ்ஜிய உயிரிழப்பு என்ற அடைவதற்கான தெளிவான இலக்குடன் அரசு செயல்படுவதாக அவர் கூறினார். தேசிய பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றுக்கு இடையேயான இணக்கமான ஒத்துழைப்பை திரு அமித் ஷா பாராட்டினார். தேசிய பேரிடர் மீட்புப் படை இந்தியாவிற்குள் மட்டுமின்றி, உலக அளவிலும் குறிப்பிடத்தக்க நம்பகமான அமைப்பாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். பேரிடர் காலங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வரும்போது, மக்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உறுதியாக உணர்கிறார்கள் என்று அவர் கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளில், இரண்டு பெரிய புயல்களின் போது பூஜ்ஜிய உயிரிழப்புகள் என்ற இலக்கை தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) வெற்றிகரமாக அடைந்துள்ளது என்று அவர் எடுத்துரைத்தார். நேபாளம், இந்தோனேசியா, துருக்கி, மியான்மர், வியட்நாம் போன்ற பிற நாடுகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் முயற்சிகள் அந்தந்த நாடுகளின் தலைவர்களால் பரவலாக அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளன என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார். இப்போது பேரிடர் மேலாண்மையில் இந்தியா உலகின் முன்னணி நாடாக உள்ளது என்று அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆட்சியில், 14-வது நிதி ஆணையத்தில் பேரிடர் மேலாண்மைக்கான நிதி ரூ .61,000 கோடியாக உயர்த்தப்பட்டதில் இருந்து பேரிடர் மேலாண்மைக்கான மத்திய அரசின் உறுதிப்பாடு தெளிவாகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தனர். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ், பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புத் துறையில் இந்தியா உலகளவில் முன்னிலை வகிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா சிடிஆர்ஐ எனப்படும் பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணியை நிறுவியது என்றும், இப்போது, சிடிஆர்ஐ-யின் கீழ் 48 நாடுகள் உறுப்பினர்களாக பணியாற்றி வருகின்றன என்றும் அவர் கூறினார். பேரிடர் மேலாண்மையில் அணுகுமுறை, செயல்முறை, குறிக்கோள் ஆகிய மூன்று அம்சங்களிலும் புரட்சிகரமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். பேரிடர் மேலாண்மைத் துறையில் மத்திய அரசு பல்வேறு செயலிகள், இணையதளங்களை உருவாக்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார்.
Read More »
Matribhumi Samachar Tamil