மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாயின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (21.12.2025) பங்கேற்றார். இந்த நிகழ்வை அடல் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. திருக்குறளில் இருந்து ஒரு குறளை நினைவுகூர்ந்து பேசிய குடியரசுத் துணைத்தலைவர், பிறப்பால் அனைத்து மனிதர்களும் சமமானவர்கள் என்றாலும், ஒருவரின் செயல்கள் மூலம் தனிச்சிறப்புகள் வெளிப்படுகின்றன என்று கூறினார். அடல் பிஹாரி வாஜ்பாய் சாதாரண மனிதர் அல்ல என்றும், லட்சியம், கொள்கைகள், மதிப்புகளில் உறுதியுடன் இருந்தார் என்றும் அவர் கூறினார். அரசியல்வாதி, நிர்வாகி, நாடாளுமன்றவாதி, கவிஞர், எல்லாவற்றிற்கும் மேலாக சிறந்த மனிதராக அவர் திகழ்ந்தார் என்று திரு சி.பி. ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார். அடல் பிகாரி வாஜ்பாய் பொது நிர்வாகத்தை திறம்பட மேற்கொண்டார் என்றும் அதனால்தான் வாஜ்பாயின் பிறந்தநாள் நல்லாட்சி தினமாக கடைபிடிப்படுகிறது என்றும் அவர் கூறினார். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், உத்தராகண்ட் மாநிலங்கள் உருவாக்கப்பட்டதைக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், அது நிர்வாகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தொலைநோக்குப் பார்வை என்று கூறினார். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், தங்க நாற்கர சாலைத் திட்டம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சிகளையும் அவர் சுட்டிக் காட்டினார். 1998-ம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனைகளைப் பற்றிக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், திரு வாஜ்பாயின் தலைமை இந்தியாவை ஒரு தன்னம்பிக்கையும் தன்னிறைவும் பெற்ற நாடாக உறுதியாக நிலைநிறுத்தியது என்று கூறினார். 2047-ம் ஆண்டு வளர்ச்சியடைந்த பாரதம் என்ற …
Read More »முன்னாள் பிரதமர் மறைந்த திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி புதுதில்லியில் உள்ள அவரது நினைவிடமான ஸ்மிருதி ஸ்தல் ‘சதைவ் அடல்’-லில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அஞ்சலி செலுத்தினார்
முன்னாள் பிரதமர் மறைந்த திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி புதுதில்லியில் உள்ள அவரது நினைவிடமான ஸ்மிருதி ஸ்தல் ‘சதைவ் அடல்‘-ல் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா அஞ்சலி செலுத்தினார் இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “நல்ல நிர்வாகம், பொது நலனுக்கான அடல் பிஹாரி வாஜ்பாயின் அர்ப்பணிப்பு எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து வழிகாட்டும். அடல் பிஹாரி வாஜ்பாய் …
Read More »பண்டிட் மதன் மோகன் மாளவியா, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் பிறந்த நாளையொட்டி சம்விதான் சதனின் மைய மண்டபத்தில் மக்களவைத் தலைவர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்
சம்விதான் சதன் மைய மண்டபத்தில் பண்டிட் மதன் மோகன் மாளவியா, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா இன்று மலர் அஞ்சலி செலுத்தினார். மத்திய சுகாதாரம் – குடும்ப நலத் துறை அமைச்சர் திரு. ஜகத் பிரகாஷ் நட்டா, மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மத்திய வர்த்தகம் அமைச்சர் திரு பியூஷ் கோயல், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு …
Read More »முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளையொட்டி, மத்தியப் பிரதேசத்தில் கென்-பேட்வா நதிகள் இணைப்புக்கான தேசிய திட்டத்திற்கு பிரதமர் டிசம்பர் 25 அன்று அடிக்கல் நாட்டுகிறார்
முன்னாள் பிரதமர் திரு.அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 25 அன்று மத்தியப் பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார். மதியம் 12:30 மணியளவில், கஜுராஹோவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கியும் வைக்கிறார். தேசிய தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், நாட்டின் முதலாவது நதிகள் இணைப்புத் திட்டமான கென்-பெட்வா நதிகளை இணைக்கும் தேசியத் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் …
Read More »
Matribhumi Samachar Tamil