குஜராத் அரசின் வன மற்றும் சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், ஆகஸ்ட் 10, 2025 அன்று குஜராத்தின் தேவபூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள பர்தா வனவிலங்கு சரணாலயத்தில் உலக சிங்க தினம் – 2025 ஐ கொண்டாட உள்ளது. குஜராத் முதல்வர் திரு பூபேந்தர் படேல், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், குஜராத் வனத்துறை அமைச்சர் திரு முலுபாய் பெரா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற பொது பிரதிநிதிகள் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்வார்கள். ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி கொண்டாடப்படும் உலக சிங்க தினம், உலகளவில் சிங்கங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குஜராத்தில், சௌராஷ்டிரா பகுதியில் மட்டுமே காணப்படும் ஆசிய சிங்கம் ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார அதிசயமாகும். இந்த இனம் நீடித்திருப்பதையும் அதன் வளர்ச்சியையும் உறுதி செய்வதில் வனத்துறை அமைச்சகமும் குஜராத் மாநிலமும் புராஜெக்ட் லயன் மற்றும் மாநில அரசின் தலைமையின் தொடர்ச்சியான முயற்சிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளன. ‘காட்டின் ராஜா’ என்று அழைக்கப்படும் ஆசிய சிங்கத்தின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக, குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ‘உலக சிங்க தினம்’ என்ற பிரமாண்டமான கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும். இந்த கம்பீரமான விலங்குகள் சௌராஷ்டிராவின் 11 மாவட்டங்களில் சுமார் 35,000 சதுர கி.மீ பரப்பளவில் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. குஜராத்தில் சிங்கங்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டு முதல் 32% அதிகரித்துள்ளது, மே 2025 சிங்கங்களின் எண்ணிக்கை மதிப்பீட்டின்படி 891 ஆக உயர்ந்துள்ளது. போர்பந்தர் மற்றும் தேவபூமி துவாரகா மாவட்டங்களில் 192.31 சதுர கி.மீ பரப்பளவில் பர்தா வனவிலங்கு சரணாலயம் உள்ளது. ஆசிய …
Read More »யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் 21-வது வழிகாட்டுதல் குழுக் கூட்டம் – மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமை வகித்தார்
யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் 21-வது வழிகாட்டுதல் குழு கூட்டம் இன்று (26.06.2025) டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன அகாடமியில் மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றங்கள் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் நடைபெற்றது. யானைகள் அதிகம் வாழும் மாநிலங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள், கள வல்லுநர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர். சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளுடன், யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யவும், நாட்டில் யானைகளின் …
Read More »இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தி்ன் 3-வது சர்வதேச மாநாட்டில் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் உரை
புதுதில்லியில் நடைபெற்ற இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நீடித்த சுற்றுவரிசை குறித்த 3-வது சர்வதேச மாநாட்டில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் உரையாற்றினார். ‘இயற்கை முறையில் மறுசுழற்சி’ என்ற கருபொருளில் நடைபெற்ற இந்த மாநாடு, வாகன உற்பத்தித் துறையைச் சேர்ந்த முக்கிய நிறுவனங்களை ஒன்றிணைத்து நிலையான வளர்ச்சி, சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த அம்சங்களை விரிவாக விவாதித்தது. பயணியர் வாகன …
Read More »இந்திய வனங்களின் நிலை அறிக்கை 2023-ஐ, டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் நாளை வெளியிடுவார்
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றங்கள் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், துறையின் செயலாளர் திருமதி லீனா நந்தன் முன்னிலையில் இந்திய வனங்களின் நிலை அறிக்கை 2023-ஐ நாளை வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ஐசிஎஃப்ஆர்இ, எஃப்ஆர்ஐ, ஐஆர்ஓ, பிஎஸ்ஐ போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். 1987 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய வனநில அளவை நிறுவனத்தால் “இந்திய வனங்களின் நிலை அறிக்கை” வெளியிடப்படுகிறது. வன அடர்த்தி வரைபடம், வனநில அளவை நிறுவனத்தின் தேசிய வனப்பட்டியல் ஆகிய இரண்டு முக்கிய செயல்பாடுகளின் அடிப்படையில் நாட்டின் வனம் மற்றும் மர வளங்கள் குறித்த முக்கிய தகவல்களை இந்த அறிக்கை வழங்குகிறது. இந்த அறிக்கைத் தொடரில் இது 18-வது அறிக்கையாகும்.
Read More »
Matribhumi Samachar Tamil