Saturday, December 06 2025 | 03:22:06 AM
Breaking News

Tag Archives: BSNL

பிஎஸ்என்எல் சுதந்திர தின சலுகை – ரூ.1 ப்ளான்

இந்தியாவின் நம்பகமான பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ‘சுதந்திர தின திட்டத்தை’ ஆகஸ்ட் 1, 2025 அன்று அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் ஆகஸ்ட் மாதத்தில் பிஎஸ்என்எல்-ன் 4ஜி சேவைகளை ஒரு மாதத்திற்கு இலவசமாக சோதித்துப் பார்க்க, வரையறுக்கப்பட்ட காலத்திற்கு ரூ.1 விலையில் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்த முயற்சி, இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும், மேலும் இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட …

Read More »

பிஎஸ்என்எல்-ன் ஒருங்கிணைந்த நிதிசார் நடவடிக்கைகள் குறித்த புள்ளிவிவரம்

செயல் நடவடிக்கை மூலமான வருவாய்: 31.12.2024 இல் நிறைவடைந்த காலாண்டில்  வருவாய் ரூ.4,969 கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் (31.12.2023) ரூ.4546 கோடியுடன் ஒப்பிடும்போது அதிகரிப்பைக் காணமுடிகிறது. 31.12.2024 அன்று முடிவடைந்த 9 மாதங்கள்: வருவாய் ரூ.14,197 கோடியாகும்.  இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் (31.12.2023) ரூ.12,905 கோடியாக இருந்தது. 2024-25-ம் ஆண்டின் இறுதி காலாண்டில், இதே நிலை தொடரும். மற்ற வருவாய்: 31.12.2024 …

Read More »

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு பின் முதன் முறையாக இந்நிறுவனம் லாபம்  ஈட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.  இந்தச் சாதனை  புதிய கண்டுபிடிப்பு, தீவிரமாக வலைப்பின்னலை விரிவாக்குதல், செலவைக் குறைத்தல், பயன்பாட்டாளரை மையப்படுத்திய சேவை முன்னேற்றம் ஆகியவற்றில் நிறுவனம் கவனம் செலுத்தியதைப் பிரதிபலிக்கிறது. பிஎஸ்என்எல் வெற்றிகரமாக தனது நிதிச் செலவையும், ஒட்டுமொத்த செலவினத்தையும் குறைத்ததால் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு நஷ்டம் குறைந்தது என்று …

Read More »

பிஎஸ்என்எல்-லின் தடையில்லா தகவல் தொடர்பு சேவைகள், பிரயாக்ராஜில் மஹாகும்பமேளாவில் பக்தர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு நிவாரணம் வழங்குகின்றன

தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் கீழ், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நம்பகமான இணைப்பை உறுதி செய்வதற்காக, 2025 மகாகும்பமேளாவில் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிஎஸ்என்எல்  மேளா பகுதியில் பிரத்யேக வாடிக்கையாளர் சேவை மையத்தை அமைத்துள்ளது, அங்கு பக்தர்கள்  தடையில்லா தகவல் தொடர்பு சேவைகளைப் பெறுகின்றனர். கும்பமேளாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு அந்தந்த வட்டங்களில் இருந்து இலவச சிம் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. யாத்ரீகர் யாரேனும் தங்கள் சிம் கார்டை தொலைத்துவிட்டால். மேளா பகுதியிலேயே நாடு முழுவதும் உள்ள அனைத்து வட்டங்களில் இருந்தும் சிம் கார்டுகளை வழங்க பிஎஸ்என்எல் ஏற்பாடு செய்துள்ளது. இந்த சேவை முற்றிலும் இலவசம், யாத்ரீகர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் எளிதாக தொடர்பில் இருக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது.  பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு, பல்வேறு மாநிலங்களில் இருந்து சிம்கார்டுகள் வழங்கப்படுவதால், பக்தர்கள் மட்டுமின்றி, அங்கு நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படையினரும் பயனடைகின்றனர். மகர சங்கராந்தி மற்றும் மௌனி அமாவாசை அன்று அமிர்த நீராடல்களின்  போது, தகவல் தொடர்பு சேவைகளின் தரம் அப்படியே இருந்தது என்றும், அதிக கூட்டம் இருந்தபோதிலும், நெட்வொர்க் எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும், பிரயாக்ராஜ் வணிகப் பகுதிக்கான பிஎஸ்என்எல்- இன் முதன்மை பொது மேலாளர் திரு பி.கே.சிங் குறிப்பிட்டார்.

Read More »

பிஎஸ்என்எல், ஏஐஎம்ஓ இணைந்து ஸ்மார்ட்ஃபோன் சேவையில் முதல் திறன் பயிற்சித்திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் (பிஎஸ்என்எல்) நிறுவனமானது, அனைத்து இந்திய உற்பத்தியாளர்களின் அமைப்புடன்  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இளைஞர்களை சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வலுவூட்டுவதற்கும், தொலைத்தொடர்பு தொழில்நுட்ப தயாரிப்புகள் மற்றும் சேவைகள் துறையில் தொழில் முனைவு மற்றும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. சுமார் 20 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் சேவை பயிற்சி குறித்த 3 நாள் பயிற்சித் திட்டத்தின் தொடக்க விழாவை பிஎஸ்என்எல் …

Read More »

பாரத் சஞ்சார் நிகாம் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்

இணைய இணைப்பை மேம்படுத்த, டிஜிட்டல் பாரத் நிதி திட்டத்தின் கீழ், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அத்தகைய திட்டங்களில் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் சேவை இல்லாத கிராமங்களில் 4ஜி சேவைகளை வழங்குவதற்கான செறிவூட்டல் திட்டம், எல்லை புறக்காவல் நிலையங்கள் / எல்லை புலனாய்வு சாவடிகள் திட்டம் ஆகியவை இதில் அடங்கும். இத்திட்டங்களின் விவரங்கள் www.usof.gov.in. என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் அகண்ட அலைவரிசை இணைப்பை வழங்குவதற்காக டிஜிட்டல் பாரத் நிதியுதவியுடன் …

Read More »

மொபைல் வேனிட்டி எண்களை மின்-ஏலம் மூலம் விற்பனை செய்கிறது பி.எஸ்.என்.எல்

பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு வட்டம் 10.12.2024 முதல் 19.12.2024 வரை வேனிட்டி மொபைல் எண்களை மின்-ஏலம் மூலம் விற்பனை செய்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்களாக ஃபேன்சி எண்களைப் பெற www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். ஃபேன்சி எண்களின் ஆன்லைன் ஏலத்திற்கு. ஏலம் எடுப்பதற்கான கடைசி தேதி 19.12.2024 ஆகும். மொபைல் எண் என்பது ஒருவரது எளிதான அடையாளம், இதன் மூலம் நாம் மற்றவர்களையும், மற்றவர்கள் நம்மையும் தொடர்பு கொள்ளலாம். ஒரு தொழிலதிபருக்கு மொபைல் எண் என்பது அவரது வாடிக்கையாளர்களுக்கு எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய ஃபேன்ஸி எண்ணாக இருக்க வேண்டும். சில …

Read More »