Sunday, December 07 2025 | 06:26:40 AM
Breaking News

Tag Archives: celebrations

விஜய் சதுக்கத்தில் 76 வது குடியரசு தின கொண்டாட்டங்கள் படைகள் பாசறை திரும்பும் மெல்லிசை நிகழ்வுடன் நிறைவு பெறுகின்றன

ரைசினா மலைகள் மீது சூரியன் மறையும் கம்பீரமான பின்னணியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விஜய் சதுக்கத்தில் 2025 ஜனவரி 29 அன்று 76 வது குடியரசு தின கொண்டாட்டங்களின் நிறைவைக் குறிக்கும் படைகள் பாசறை திரும்பும் மெல்லிசை நிகழ்வு நடைபெற உள்ளது. குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசு துணைத்தலைவர் திரு ஜகதீப் தன்கர், பிரதமர் திரு நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஏனைய மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் …

Read More »

15வது தேசிய வாக்காளர் தின கொண்டாட்டங்களில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார்

இன்று (ஜனவரி 25, 2025) புது தில்லியில் நடைபெற்ற 15-வது தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். தேர்தலை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதில் முன்னுதாரணமாக செயல்பட்ட மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு சிறந்த தேர்தல் நடைமுறைகள் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார். “இந்திய வாக்குகள் 2024: ஜனநாயகத்தின் சகாப்தம்’’ புத்தகத்தின் முதல் பிரதியையும் தலைமைத் தேர்தல் ஆணையர் …

Read More »

விஜயவாடாவில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 20-வது நிறுவன தின விழா – மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்பு

ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற தேசிய பேரிடர் மீட்புப் படையின் 20-வது நிறுவன தின விழா நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது, திரு அமித் ஷா, சுமார் ரூ. 220 கோடி மதிப்புள்ள பல திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம்மோகன் நாயுடு, மத்திய உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார், உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன், தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைமை இயக்குநர் திரு பியூஷ் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தமது உரையில், இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது, மீட்புக்கு தேசிய பேரிடர் மீட்பு படை வருகிறது என்று கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கடந்த பத்து ஆண்டுகளில் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (என்ஐடிஎம்) மூலம் பேரிடர் மேலாண்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் எடுத்துரைத்தார். களத்தில் திறம்பட பேரிடர் மேலாண்மையை உறுதி செய்ய, கிராம பஞ்சாயத்துகள், காவல் நிலையங்கள், தேசிய மாணவர் படை, சாரணர் இயக்கத்தினர் தொடங்கி மத்திய அரசு வரை பலரது தடையற்ற ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். பேரிடர் மேலாண்மையின் அணுகுமுறை, வழிமுறைகள், நோக்கங்களில் புரட்சிகரமான மாற்றத்தை அறிமுகப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு திரு அமித் ஷா நன்றி தெரிவித்தார்.  இழப்புகளைக் குறைப்பதுடன் பேரிடர்களின் போது பூஜ்ஜிய உயிரிழப்பு என்ற அடைவதற்கான தெளிவான இலக்குடன் அரசு செயல்படுவதாக அவர் கூறினார். தேசிய பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றுக்கு இடையேயான இணக்கமான ஒத்துழைப்பை திரு அமித் ஷா பாராட்டினார். தேசிய பேரிடர் மீட்புப் படை இந்தியாவிற்குள் மட்டுமின்றி, உலக அளவிலும் குறிப்பிடத்தக்க நம்பகமான அமைப்பாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். பேரிடர் காலங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வரும்போது, மக்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உறுதியாக உணர்கிறார்கள் என்று அவர் கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளில், இரண்டு பெரிய புயல்களின் போது பூஜ்ஜிய உயிரிழப்புகள் என்ற இலக்கை தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) வெற்றிகரமாக அடைந்துள்ளது என்று அவர் எடுத்துரைத்தார். நேபாளம், இந்தோனேசியா, துருக்கி, மியான்மர், வியட்நாம் போன்ற பிற நாடுகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் முயற்சிகள் அந்தந்த நாடுகளின் தலைவர்களால் பரவலாக அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளன என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார். இப்போது பேரிடர் மேலாண்மையில் இந்தியா உலகின் முன்னணி நாடாக உள்ளது என்று அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆட்சியில், 14-வது நிதி ஆணையத்தில் பேரிடர் மேலாண்மைக்கான நிதி ரூ .61,000 கோடியாக உயர்த்தப்பட்டதில் இருந்து பேரிடர் மேலாண்மைக்கான மத்திய அரசின் உறுதிப்பாடு தெளிவாகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தனர். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ், பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புத் துறையில் இந்தியா உலகளவில் முன்னிலை வகிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா சிடிஆர்ஐ எனப்படும் பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணியை நிறுவியது என்றும், இப்போது, சிடிஆர்ஐ-யின் கீழ் 48 நாடுகள் உறுப்பினர்களாக பணியாற்றி வருகின்றன என்றும் அவர் கூறினார். பேரிடர் மேலாண்மையில் அணுகுமுறை, செயல்முறை, குறிக்கோள் ஆகிய மூன்று அம்சங்களிலும் புரட்சிகரமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். பேரிடர் மேலாண்மைத் துறையில் மத்திய அரசு பல்வேறு செயலிகள், இணையதளங்களை உருவாக்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார்.

Read More »

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-வது நிறுவன தின கொண்டாட்டங்களில் நாளை (ஜனவரி 14) பிரதமர் பங்கேற்கிறார்

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை (ஜனவரி 14)  காலை 10.30 மணியளவில் நடைபெறும் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-வது நிறுவன தின கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். நமது நாட்டை ‘வானிலை சூழலுக்கு தயாராகும் மற்றும் பருவநிலைக்கு உகந்த’ நாடாக மாற்றும் நோக்கத்துடன் ‘மிஷன் மௌசம்’ திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதிநவீன வானிலை கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் அமைப்புகளை உருவாக்குதல், உயர் தெளிவுத்திறன் கொண்ட வளிமண்டல கணிப்புகள், அடுத்த தலைமுறை ரேடார்கள், செயற்கைக்கோள்கள், உயர் செயல்திறன் கணினிகள் ஆகியவற்றை செயல்படுத்துவதன் …

Read More »