நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் இந்திய தர நிர்ணய அமைவனமான பிஐஎஸ்-ஆல் சான்றளிக்கப்பட்ட தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்துமாறு மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறையும் தர நிர்ணய அமைவனமும் வேண்டுகோள் விடுத்துள்ளன. பிஐஎஸ்-சின் தரச் சான்றிதழ் இல்லாமல் தலைக் கவசங்களைத் தயாரிப்பது அல்லது விற்பனை செய்வதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சாலைகளில் 21 கோடிக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளதால், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. மோட்டார் வாகனச் சட்டம்-1988-ன் கீழ் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும். அந்த தலைக் கவசங்களுக்கு, செயல்திறன் தர மதிப்பீடும் உள்ளது. தரமற்ற தலைக்கவசங்கள் பாதுகாப்பு அம்சங்களை விட்டுக் கொடுத்து விடுவதால் சாலைப் பாதுகாப்பு என்ற நோக்கத்தை சிதைப்பதாக அவை இருக்கின்றன. இதை நிவர்த்தி செய்வதற்காக, 2021-ம் ஆண்டு முதல் தரக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலில் உள்ளது. இது அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகளும் பிஐஎஸ் தரநிலைகளின் கீழ் (ஐஎஸ் 4151:2015) சான்றளிக்கப்பட்ட, ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட தலைக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜூன் 2025 நிலவரப்படி, இந்தியா முழுவதும் 176 உற்பத்தியாளர்கள் தலைக்கவசங்களுக்கான பிஐஎஸ் உரிமங்களை வைத்திருக்கின்றனர். சாலையோரங்களில் விற்கப்படும் பல தலைக்கவசங்களுக்கு பிஐஎஸ் சான்றிதழ் இல்லை. இவை தரமற்றதாக இருக்க கூடும் என்பதால் நுகர்வோருக்கு சாலை விபத்துகள் ஏற்பட்டால் நுகர்வோருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாமல் போகும். எனவே, இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. தரநிலைகளைச் செயல்படுத்த, பிஐஎஸ் வழக்கமான தொழிற்சாலை மற்றும் சந்தை கண்காணிப்பை மேற்கொள்கிறது. இதன் மூலம் தரமற்ற தலைக் கவசங்கள் உற்பத்தி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தரமற்ற தலைக்கவசங்களை சந்தையில் இருந்து அகற்றுவதன் மூலம், சாலை விபத்தால் ஏற்படும் இறப்புகளைத் தடுப்பதையும், உயர்தர பாதுகாப்பு உபகரணங்களை ஊக்குவிப்பதையும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Read More »வேளாண் காடுகள் துறையில் வணிகம் செய்வதை எளிதாக்க மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மாதிரி விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது
மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள், வேளாண் காடுகள் தொடர்பான ஒழுங்குமுறை கட்டமைப்புகளை எளிமைப்படுத்துவதற்கும் வேளாண் காடுகள் வளர்ப்பை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரவளிக்கும் நோக்கத்துடன், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ‘விவசாய நிலங்களில் மரங்களை வெட்டுவதற்கான மாதிரி விதிகளை’ வெளியிட்டுள்ளது. கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், மண் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல், மரங்களின் பரப்பை அதிகரித்தல், நீர் பாதுகாப்பு, பருவநிலை மீள்தன்மைக்கு பங்களித்தல், இயற்கைக் காடுகள் மீதான அழுத்தத்தைக் குறைத்தல் உள்ளிட்ட பல நன்மைகளை வேளாண் காடுகள் வழங்குகின்றன. வேளாண் காடுகள் தொடர்பான நிலங்களைப் பதிவு செய்வதற்கும், மரங்களை வெட்டுதல், போக்குவரத்தை நிர்வகித்தல் ஆகியவற்றுக்கு எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகளை வழங்குவதன் மூலம் நெறிப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பை நிறுவுவதே மாதிரி விதிகளின் நோக்கமாகும். இந்த முயற்சி விவசாயிகள் மற்றும் பிற தரப்பினர் வேளாண் காடுகள் தொடர்பான நடைமுறைகளை பின்பற்றுவதை ஊக்குவிக்கும் என்றும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மரம் சார்ந்த விவசாய முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில் மாதிரி விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வேளாண் காடுகளின் மூலம் உள்நாட்டு மர உற்பத்தியை ஊக்குவிக்கும் அணுகுமுறை தேவை-விநியோக இடைவெளியை குறைக்கும். உள்ளூர் மூலப்பொருட்களைக் கொண்டு மர அடிப்படையிலான தொழில்களை மேம்படுத்துவதற்கும் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் இது உதவும். மரம் சார்ந்த தொழில்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள்- 2016-ன் கீழ் நிறுவப்பட்ட மாநில அளவிலான குழு இந்த மாதிரி விதிகளை செயல்படுத்துவதற்குப் பொறுப்பான அமைப்பாகும். மரம் வெட்டுதல் மற்றும் மர போக்குவரத்து தொடர்பான விதிமுறைகளை தளர்த்துவதன் மூலம், வணிக ரீதியாக மதிப்புமிக்க மர வகைகளின் உற்பத்தியை விவசாய நிலங்களில் மேம்படுத்துவதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டுவதே இதன் பங்காகும். மாதிரி விதிகளின்படி, விண்ணப்பதாரர்கள் தங்கள் தோட்டங்களை தேசிய மர மேலாண்மை அமைப்பான என்டிஎம்எஸ்-ன் (NTMS) போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். இந்த போர்ட்டல் உருவாக்கப்பட்டு வருகிறது. நில உரிமைத் தகவல், பண்ணையின் இருப்பிடம், இனங்கள், தோட்ட காலம் போன்ற அடிப்படை தோட்டத் தரவைச் சமர்ப்பிப்பது இதில் அடங்கும். விண்ணப்பதாரர்கள் தோட்டத் தகவலை அவ்வப்போது புதுப்பித்து அதன் தன்மையை உறுதிசெய்ய தோட்டத்தின் புவிசார் அம்சங்கள் கொண்ட புகைப்படங்களைப் பதிவேற்றலாம். பதிவுசெய்யப்பட்ட தோட்டங்களிலிருந்து மரங்களை வெட்ட விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேசிய மர மேலாண்மை அமைப்பு மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சரிபார்ப்பு நிறுவனங்கள் கள ஆய்வுகளை மேற்கொள்ளும். அவர்களின் சரிபார்ப்பு அறிக்கைகளின் அடிப்படையில், விவசாய நிலங்களில் மரம் வெட்ட அனுமதிகள் வழங்கப்படும். பிரதேச வன அதிகாரிகள் இந்த நிறுவனங்களின் செயல்திறனை அவ்வப்போது மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு மூலம் ஆய்வு செய்வார்கள். வேளாண் காடுகள் துறையில் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும், தேவையற்ற நடைமுறை தடைகளில் இருந்து விவசாயிகளைக் காக்கவும் இந்த மாதிரி விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மாதிரி விதிகளை ஆராய்ந்து அவற்றை ஏற்றுக்கொள்வதைப் பரிசீலிக்குமாறு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
Read More »இமாச்சலப்பிரதேசத்திற்கு மத்திய அரசின் நிதியுதவியாக ரூ. 2006 கோடி வழங்குவதற்கு உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா ஒப்புதல்
இமாச்சலப் பிரதேசத்தில் 2023-ம் ஆண்டு நிகழ்ந்த வெள்ளம், நிலச்சரிவு, பெருமழை சம்பவங்களுக்குப் பிறகு மீட்பு, மறுசீரமைப்புத் திட்டத்திற்காக மத்திய அரசின் உதவியாக ரூ. 2006.40 கோடி வழங்குவதற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. நிதியமைச்சர், வேளாண் அமைச்சர் மற்றும் நிதி ஆயோக் துணைத் தலைவர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு, தேசிய பேரிடர் மீட்பு நிதியின் கீழ் …
Read More »பயிற்சி மையங்களிலிருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதன் மூலம் கல்வித் துறையில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் மாணவர்களுக்கு ரூ 1.56 கோடி நிவாரணத்தை மத்திய அரசு வழங்குகிறது
மத்திய நுகர்வோர் விவகாரத் துறை , கல்வித் துறையில் 600க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களுக்காக ரூ 1.56 கோடியைத் திரும்பப் பெற்றுள்ளது. சிவில் சர்வீசஸ், இன்ஜினியரிங் படிப்பு மற்றும் பிற திட்டங்களுக்கான பயிற்சி மையங்களில் பதிவுசெய்யப்பட்ட இந்த மாணவர்களுக்கு, பயிற்சி நிறுவனங்களால் வகுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பின்பற்றிய போதிலும், முன்னர் பணத்தைத் திரும்பப் பெறுவது மறுக்கப்பட்டது. தேசிய நுகர்வோர் உதவி எண் வழியாக மாணவர்கள் தாக்கல் செய்த குறைகளின் மூலம் இந்த நிவாரணம் சாத்தியமானது, இது …
Read More »மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிலைநாட்ட மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது மத்திய சமூக நீதி, அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் திரு விரேந்திர குமார்
மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மண்டல மையத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று மையத்தை மத்திய சமூக நீதி, அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் திரு விரேந்திர குமார் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை இந்த நிகழ்ச்சி பிரதிபலிப்பதாக கூறினார். அது மட்டுமின்றி, உயர்தர சேவைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கான நமது முயற்சிகளை வலுப்படுத்துகிறது என …
Read More »விவசாயிகளின் நலனை மேம்படுத்த மத்திய அரசு உறுதியுடன் உள்ளது: பிரதமர்
2025-ம் ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவுகளின் அடிப்படையில், விவசாயிகளின் நலனை மேம்படுத்த மத்திய அரசு முனைப்புடன் உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது: “விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாய சகோதர, சகோதரிகள் அனைவரையும் நினைத்து நாடு பெருமிதம் கொள்கிறது. 2025-ம் ஆண்டின் முதலாவது …
Read More »ஜாரக்கண்ட் மாநிலத்தில் மத்திய அரசுத் திட்டங்கள் – மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆய்வு செய்தார்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வுப் பயணம் மேற்கொண்ட மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை, தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், இந்தியாவின் முன்மாதிரி மாவட்டமாக கட்டமைக்கப்பட்டு வரும் பலமு மாவட்டத்தில் இன்று மத்திய அரசுத் திட்டங்களை ஆய்வு செய்தார். இன்று (25.12.2024) அங்கு, மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அவருக்குத் திரு எல். முருகன் மரியாதை செலுத்தினார். பின்னர், பலமு மாவட்டத்தில் …
Read More »புள்ளியியல் நடைமுறைகளை வலுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவி – தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்கள் பணிகளை நிறைவு செய்துள்ளன
நம்பகமான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை சேகரித்தல், தொகுத்தல், வெளியிடுதல் ஆகியவற்றில் மாநிலங்களின் திறன்களையும் செயல்பாடுகளையும் வலுப்படுத்த ‘புள்ளியியல் வலுப்படுத்துதலுக்கான ஆதரவு நடைமுறை’ என்ற மத்திய அரசின் துணைத் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு புள்ளியியல் – திட்ட அமலாக்க அமைச்சகம் மானிய உதவி வழங்குகிறது. இந்த துணைத் திட்டத்தின் கீழ், உள்ளூர் அளவிலான புள்ளிவிவரங்களைத் தொகுத்தல், ஒருங்கிணைந்த மாநில தரவுத்தளங்களை உருவாக்குதல், தரவு இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கான ஆய்வுகள் …
Read More »மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்
தற்சார்பு இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா 2047 தொலைநோக்கு பார்வையுடன் இணைந்த உள்ளூர் உற்பத்தியை ஆதரிப்பதன் மூலம் இந்தியாவின் மின்சார வாகன சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் கனரக தொழில்துறை அமைச்சகம் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது: மின்சார வாகனப் போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கும் நாட்டில் புதைபடிம எரிபொருட்களை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கும் புதுமையான வாகன மேம்பாட்டில் பிரதமரின் மின்சார வாகனப் புரட்சித் திட்டம், 2024 செப்டம்பர் 29-ம் தேதி அறிவிக்கப்பட்டது. 01.04.2024 முதல் 31.03.2026 வரையிலான …
Read More »
Matribhumi Samachar Tamil