குவைத் நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமத் அல்-முபாரக் அல்-சபாவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். 2024 செப்டம்பரில் ஐநா பொதுச்சபை அமர்வின்போது , பட்டத்து இளவரசரை சந்தித்ததை பிரதமர் அன்புடன் நினைவு கூர்ந்தார். குவைத் உடனான இருதரப்பு உறவுகளுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். இருதரப்பு உறவுகள் சிறப்பாக முன்னேறி வருவதை ஒப்புக் கொண்ட தலைவர்கள், ஒரு உத்திபூர்வ கூட்டாண்மைக்கு உயர்த்தப்பட்டதை வரவேற்றனர். ஐ.நா மற்றும் பிற பலதரப்பு மன்றங்களில் இரு தரப்புக்கும் இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பை அவர்கள் வலியுறுத்தினர். குவைத் தலைமைத்துவத்தின் கீழ் இந்தியா-ஜிசிசி உறவுகள் மேலும் வலுப்படும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். பரஸ்பரம் வசதியான தேதியில் இந்தியாவிற்கு வருகை தருமாறு குவைத்தின் பட்டத்து இளவரசருக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். குவைத்தின் பட்டத்து இளவரசர், பிரதமரைக் கௌரவித்து விருந்து அளித்தார்.
Read More »