சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி மெட்ராஸ்), இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவில் மாணவர்களால் நடத்தப்படும் வருடாந்திர கலாச்சார விழாவின் 51-வது ஆண்டு சாரங் கொண்டாட்டத்தை 2025 ஜனவரி 9 முதல் 13-ம் தேதி வரை நடத்த தயாராகி வருகிறது. இதில் 80,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘சாரங் 2025’ தென்னிந்தியாவின் கலாச்சார சிறப்புகளை மையப்படுத்தும் கொண்டாட்டமாக இருக்கும். பல்வேறு நிகழ்வுகளை கொண்டாதாக அமையும் இந்த விழாவில் ஒவ்வொரு நிகழ்வும் பன்முகத் தன்மைக்கு சான்றாக விளங்குவதுடன் ஒவ்வொரு பார்வையாளருக்கும் உற்சாகத்தை அள்ளித் தரும். …
Read More »