இந்தியா-மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சியான நோமாடிக் எலிபெண்ட்டின் 17வது பதிப்பு இன்று மங்கோலியாவின் உலான்பாதரில் நிறைவடைந்தது. பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், செயல்பாட்டு தளவாடங்கள் மற்றும் உத்திசார் செயல்பாடுகளின் இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் புஷ்பேந்திர சிங் ஆகியோர் நிறைவு விழாவில் பங்கேற்றனர். அருணாச்சல ஸ்கவுட்ஸ் பட்டாலியனின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களுடன் மொத்தம் 45 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய ராணுவக் குழு, இரண்டு வார காலப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு …
Read More »ராஷ்ட்ரபர்வ் இணையதளம், கைபேசி செயலி- பாதுகாப்புத் துறை செயலாளர் தொடங்கி வைத்தார்
முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளை நினைவுகூரும் ‘நல்லாட்சி தினத்தை’ முன்னிட்டு 2024 டிசம்பர் 25 அன்று பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், மொபைல் செயலியுடன் ராஷ்டிரபர்வ் (Rashtraparv)/என்ற இணையதளத்தைத் தொடங்கி வைத்தார். குடியரசு தினம், படைகள் பாசறை திரும்பும் விழா, சுதந்திர தினம் போன்ற தேசிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், நேரடி ஒளிபரப்பு, அனுமதிச் சீட்டு வாங்குதல், இருக்கை ஏற்பாடுகள், நிகழ்வுகளின் வழித்தட வரைபடங்கள் தொடர்பான தகவல்களை வழங்க இந்த வலைத்தளம் உதவும். …
Read More »
Matribhumi Samachar Tamil