மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று (17.08.2025) தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்துக்கு (ஐஐடி) சென்றார். அங்கு அவர் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்ட மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினார். உயர்கல்வித் துறை செயலாளர் டாக்டர் வினீத் ஜோஷி, தில்லி ஐஐடி இயக்குநர் பேராசிரியர் திரு ரங்கன் பானர்ஜி ஆகியோரும் மூத்த அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர், இந்த ஆண்டு சுதந்திர …
Read More »தேசிய கல்விக் கொள்கை 2020-ன் 5 ஆண்டுகள் நிறைவையொட்டி, அகில இந்திய கல்வி மாநாடு 2025-ஐ புதுதில்லியில் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்
தேசிய கல்விக் கொள்கை 2020-ன் 5 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில், மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று புது தில்லியில் அகில இந்திய கல்வி மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்தார். கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், அரசு பிரதிநிதிகள் ஆகியோர் தேசிய கல்வி கொள்கை 2020-ன் கீழ் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கான தளமாக இம்மாநாடு நடத்தப்பட்டது. கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் …
Read More »தேசிய கல்விக் கொள்கை 2020 இன் 5வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாளை பாரத் மண்டபத்தில் அகில இந்திய கல்வி மாநாடு 2025 ஐ கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைக்கிறார்
கல்வி அமைச்சகம் ஜூலை 29, 2025 அன்று பாரத் மண்டபம் வளாகத்தில் தேசிய கல்விக் கொள்கை (என்இபி) 2020 இன் 5வது ஆண்டு நிறைவை ஒட்டி அகில இந்திய கல்வி மாநாடு, 2025 ஐ ஏற்பாடு செய்கிறது. நாள் முழுவதும் நடைபெறும் விவாதங்களை கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைப்பார். தேசிய கல்விக் கொள்கை (என்இபி) 2020 இன் ஐந்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்த மாநாடு, …
Read More »உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேளாண் தொழில்நுட்ப புத்தாக்க மையத்தை மத்திய அமைச்சர்கள் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் திரு ஜெயந்த் சவுத்ரி திறந்து வைத்தனர்
இந்திய வேளாண் சூழலில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு) கல்வித்துறை இணையமைச்சருமான திரு ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் இன்று மீரட்டில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘வேளாண் தொழில்நுட்ப புத்தாக்க மையத்தைத்’ திறந்து வைத்தனர். உத்தரப்பிரதேச அரசின் வேளாண் அமைச்சர் திரு சூர்யா …
Read More »பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், உலகளாவிய சிறந்த கல்வி இந்தியாவில் குறைந்த செலவில் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது: மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்
புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் கல்வியை சர்வதேசமயமாக்குவதன் இலக்குகளை அடைவதில் கல்வி அமைச்சகம் ஒரு பெரிய நடவடிக்கையாக மும்பையில் ‘சர்வதேச கல்வி நகரத்தை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், புதிய கல்விக் கொள்கை 2020 இந்தியாவை ஒரு உலகளாவிய கல்வி மையமாக, குறைந்த செலவில் உயர்தரக் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார். இந்த முயற்சியின் மூலம், இந்தியாவை உலகளாவிய அறிவு மையமாக நிலைநிறுத்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதே எங்கள் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார். சிறந்த சர்வதேச பல்கலைக்கழகங்கள், இங்கு தங்களது வளாகங்களை நிறுவ இந்தியா ஊக்குவித்து வருகிறது என அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் இந்திய உயர்கல்வி நிறுவனங்களை உலகளவில் விரிவுபடுத்த இது அதிகாரம் அளிக்கிறது என அவர் குறிப்பிட்டார். இந்த முயற்சி, கருத்துக்கள், திறமை, நம்பிக்கை ஆகியவற்றின் வளர்ந்து வரும் இருவழி இயக்கத்தை பிரதிபலிக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார். இந்தியா உலகளாவிய கல்வி சுற்றுச்சூழல் அமைப்பில் பங்கேற்பது மட்டுமல்லாமல் இந்தியா அதை வடிவமைக்கிறது என அவர் கூறினார். வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மும்பை/நவி மும்பையில் தங்கள் இருப்பை நிலைநிறுத்துவது இதுவே முதல் முறை, மேலும் சில பல்கலைக்கழகங்கள் UGC (S) இன் கீழ் நவி மும்பையில் வரவிருக்கும் கல்வி நகரத்தில் வளாகங்களை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி ஆகிய நாடுகளின் 5 பல்கலைக்கழகங்கள் மும்பையில் வளாகங்களை நிறுவுவதற்கான கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்தியாவில் இந்தப் பல்கலைக்கழக வளாகங்களை நிறுவுவது மாணவர்களுக்கு நன்மை பயக்கும். உயர்கல்வித் துறையின் செயலாளர் மற்றும் யுஜிசி-யின் தலைவர் டாக்டர் வினீத் ஜோஷி, தமது உரையில், கல்வியின் சர்வதேசமயமாக்கலை உறுதி செய்வதிலும், இந்தியாவின் பரந்த, ஆற்றல்மிக்க திறமையை வெளிப்படுத்துவதிலும் கல்வி அமைச்சகம் மற்றும் யுஜிசி-யின் பங்கை எடுத்துரைத்தார். மத்திய கல்வி அமைச்சகம், மத்திய வெளியுறவு அமைச்சகம், மகாராஷ்டிரா அரசு, பல்கலைக்கழக மானிய குழு ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளும், தூதரகங்களின் பிரமுகர்களும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் வெளிநாட்டு பல்கலைக்கழக வளாகங்களை அனுமதிக்கும் இந்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் வரவேற்றனர்.
Read More »மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர் 3-வது காசி தமிழ்ச் சங்கமத்தைத் தொடங்கி வைத்தனர்
மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் காசித் தமிழ்ச் சங்கத்தின் மூன்றாவது பதிப்பை உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று தொடங்கி வைத்தனர். 3-வது காசி தமிழ்ச் சங்கம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவுக்கு மத்தியில் நடைபெறும் இந்த நிகழ்வு …
Read More »புதுதில்லி உலக புத்தக கண்காட்சியில் 41 புத்தகங்களை திரு தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்
புது தில்லி உலக புத்தகக் கண்காட்சி 2025-ல் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமரின் யுவா 2.0 திட்டத்தின் கீழ் 41 புதிய புத்தகங்களை மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். திரிபுரா ஆளுநர் திரு இந்திரசேன ரெட்டி நல்லு, இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் உரையாற்றிய திரு தர்மேந்திர பிரதான், புத்தகங்கள் வெளியிடப்பட்ட 41 இளம் எழுத்தாளர்களை வாழ்த்தினார். அவர்களின் திறனில் நம்பிக்கையை …
Read More »காசி தமிழ்ச் சங்கமம் 3-ம் கட்ட பதிவிற்கான இணையதள சேவையை மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்
மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், காசி தமிழ் சங்கமத்தின் 3-வது கட்டப் பதிவிற்கான இணையதளத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர் இந்த 3-வது கட்ட காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி 2025 பிப்ரவரி 15-ம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தொடங்கும் என்று அறிவித்தார். 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வு 2025 பிப்ரவரி 24- ம் தேதி முடிவடையும். சென்னை தொழில்நுட்பக் கல்வி …
Read More »தரமான கல்வியை வழங்கும் வகையில் உயர்கல்வி நிறுவனம் மேம்படுத்தப்பட்டு வருகிறது- திரு தர்மேந்திர பிரதான்
நாட்டில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக எளிதான அணுகுமுறை, சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உயர்கல்வி நிறுவனங்களின் முன்னேற்றம் குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார். 1.கல்வி நிலையங்கள் அதிகரிப்பு உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 2014-15-ல் 51534 ஆக இருந்தது 2022-23-ல் 58643-ஆக அதிகரித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை 760-ல் இருந்து 1213-ஆக அதிகரித்துள்ளது. கல்லூரிகள் எண்ணிக்கை 38498-ல் இருந்து 46624 ஆக அதிகரித்துள்ளது. அதாவது உயர்கல்வி நிறுவனங்கள்13.8%, பல்கலைக்கழகங்கள் 59.6% மற்றும் கல்லூரிகள் 21.1% அதிகரித்து உள்ளன. 2.மாணவர் சேர்க்கை அதிகரிப்பு 2014-15-ம் ஆண்டில் 3.42 கோடியாக இருந்த மொத்த சேர்க்கை 2022-23-ம் ஆண்டில் 4.46 கோடியாக 30.5% அதிகரித்துள்ளது.
Read More »இந்தியாவில் பள்ளிக் கல்வியின் தரம், முன்னேறி வருகிறது – திரு தர்மேந்திர பிரதான்
கடந்த பத்தாண்டுகளில், இந்த அரசின் தலைமையின் கீழ் இந்தியாவின் பள்ளிக் கல்வி முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியையும் மாற்றத்தையும் கண்டுள்ளது. பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் முதல் பெண் சக்திக்கு அதிகாரமளித்தல்,இந்திய மொழிகளை ஊக்குவித்தல் என்பதுவரை, ஒவ்வொரு முயற்சியும் தரம், சமத்துவம் மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டால் மேற்கொள்ளப்படுகிறது என்று திரு தர்மேந்திர பிரதான் புதுதில்லியில் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். நமது பள்ளிகள் கற்றல் மையங்களாக மட்டுமின்றி, நாட்டில் உள்ள …
Read More »
Matribhumi Samachar Tamil