நெதர்லாந்து பிரதமர் திரு டிக் ஸ்கூஃப், பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். இந்தியா, நெதர்லாந்து இடையேயான நம்பிக்கை, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மீதான நம்பிக்கை ஆகியவற்றை இரு தலைவர்களும் சுட்டிக் காட்டினார்கள். தண்ணீர், வேளாண்மை, சுகாதாரம் ஆகிய துறைகளில் தற்போதுள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். வர்த்தகம், பாதுகாப்பு, புதுமை, பசுமை ஹைட்ரஜன் மற்றும் குறைக்கடத்திகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு கூட்டாண்மையை அதிகரிக்கவும், உத்திசார்ந்த பரிமாணத்தை வழங்கவும் இருவரும் ஒப்புக்கொண்டனர். கல்வி, கலாச்சாரத் துறைகளில் மக்களுக்கு இடையேயான நெருக்கமான உறவுகள், பரிமாற்றங்களை உருவாக்க வேண்டும் என்று இருவரும் வலியுறுத்தினர். பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதுடன், அமைதி, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த பணியாற்ற உறுதிபூண்டனர். இரு தலைவர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டனர்.
Read More »