கடந்த மூன்று நிதியாண்டுகளில், அதாவது 2020-21 முதல் 2022-23-ம் ஆண்டு வரை முன்னேற விரும்பும் மாவட்டங்களில் பெருநிறுவனங்கள் சமூக பொறுப்பு நிதி செலவினம் அதிகரித்துள்ளதாக பெருநிறுவனங்கள் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2020-21-ம் நிதியாண்டில் ரூ.651.43 கோடியும், 2021-22 -ம் நிதியாண்டில் ரூ.1046.43 கோடியும், 2022-23-ம் நிதியாண்டில் ரூ.1402.89 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்தின் இணை அமைச்சருமான திரு. ஹர்ஷ் மல்ஹோத்ரா இதனைத் தெரிவித்தார்.
Read More »