தமிழ்நாட்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை ஏற்று, நாளை (18.08.2025) முதல் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் 38 ரயில்கள், கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று (17 ஆகஸ்ட் 2025) செய்தியாளர்களிடையே பேசிய அவர், விரைவு ரயில்கள், அதிவிரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் கூடுதல் நிலையங்களில் நின்று செல்ல …
Read More »இந்தியாவின் எதிர்காலத்தை நிர்மாணிக்கும் இளைஞர் சக்தி: மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் பேச்சு
நாடு முழுவதும் 47 இடங்களில் நடைபெற்ற ரோஜ்கர் மேளா எனப்படும் வேலைவாய்ப்பு திருவிழாவில் 51 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வழியாக வழங்கினார். சென்னை இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் உள்ள அம்பேத்கர் அரங்கத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில் (ரோஜ்கர் மேளா) மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கலந்துகொண்டு மத்திய அரசின் …
Read More »இஎஸ்ஐ மருத்துவமனையில் பிஎம்ஜேஏஒய் அட்டைதாரர்களுக்கும் சிகிச்சை வசதி: மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கிவைத்தார்
நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை கிடைப்பதை மத்திய அரசு உறுதிசெய்துள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னை கே கே நகரில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (இஎஸ்ஐசிஎச்) இன்று (07 ஜூலை 2025) நடைபெற்ற பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கான மருத்துவ சேவைகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் …
Read More »தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு சுங்கச் சாவடி செலவைக் குறைக்கும் சிறப்புத் திட்டம் : டாக்டர் எல் முருகன்
மக்கள் பயனடையும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைப் பட்டியலில் மற்றுமொரு மைல்கல் திட்டம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் திரு எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் ‘ஃபாஸ்டேக்’ கட்டணமாக ஆண்டுக்கு ரூ.3000-க்கு பாஸ் வழங்கும் சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ள மத்திய சாலைப் போக்குவரத்து துறை …
Read More »வியட்நாமின் தூதுக்குழு மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகனுடன் சந்திப்பு – இருநாடுகளுக்கிடையே ஊடகம், பொழுதுபோக்கு துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகனை, வியட்நாம் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினரும், வியட்நாம் கம்யூனிஸ்ட்டின் தகவல், கல்வி, மக்கள் தொடர்புக்கான மத்திய ஆணையத்தின் தலைவருமான திரு நுயென் ட்ராங் நிகியா தலைமையிலான வியட்நாம் அரசின் உயர் அதிகாரிகள் குழு புதுதில்லியில் இன்று (05.06.2025) சந்தித்தது. இந்த சந்திப்பின் போது, ஊடகம், பொழுதுபோக்கு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியாவும் வியட்நாமும் ஒப்புக்கொண்டன. இந்த கூட்டத்தில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன், அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜுவும் கலந்து கொண்டனர். இந்தியாவும் வியட்நாமும் பாரம்பரியமாக நெருங்கிய இருதரப்பு உறவுகளை நீண்டகாலமாகப் பகிர்ந்து கொள்கின்றன. 2022-ம் ஆண்டில், இரு நாடுகளும் தூதரக உறவுகளை நிறுவிய 50-வது ஆண்டு …
Read More »மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர் 3-வது காசி தமிழ்ச் சங்கமத்தைத் தொடங்கி வைத்தனர்
மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் காசித் தமிழ்ச் சங்கத்தின் மூன்றாவது பதிப்பை உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று தொடங்கி வைத்தனர். 3-வது காசி தமிழ்ச் சங்கம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவுக்கு மத்தியில் நடைபெறும் இந்த நிகழ்வு …
Read More »உலகளாவிய திருக்குறள் மாநாடு தில்லியில் விரைவில் நடத்தப்படும்: மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்
உலகளாவிய திருக்குறள் மாநாடு புதுதில்லியில் விரைவில் நடத்தப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் கூறியுள்ளார். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ‘வாழ்நாள் முழுவதும் ஹிப்னாஸிஸ்: ஊக்குவிப்பு, தடுப்பு மற்றும் தலையீடு’ (Hypnosis across Lifespan: Promotion, Prevention, and Intervention) என்ற சர்வதேச மாநாட்டை இன்று (24 ஜனவரி 2025) தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர், திருக்குறளின் கருத்துகள் நிலையானது என்றும், …
Read More »ஜாரக்கண்ட் மாநிலத்தில் மத்திய அரசுத் திட்டங்கள் – மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆய்வு செய்தார்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வுப் பயணம் மேற்கொண்ட மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை, தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், இந்தியாவின் முன்மாதிரி மாவட்டமாக கட்டமைக்கப்பட்டு வரும் பலமு மாவட்டத்தில் இன்று மத்திய அரசுத் திட்டங்களை ஆய்வு செய்தார். இன்று (25.12.2024) அங்கு, மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அவருக்குத் திரு எல். முருகன் மரியாதை செலுத்தினார். பின்னர், பலமு மாவட்டத்தில் …
Read More »
Matribhumi Samachar Tamil