இந்தியாவின் இளையோர் சக்திக்கு அதிகாரம் அளித்து போதைப்பொருள் இல்லாத சமூகத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு மாற்றத்தக்க முயற்சியான ‘வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான போதைப்பொருள் இல்லாத இளையோர்’ என்ற கருப்பொருளில் ‘இளையோர் ஆன்மீக உச்சிமாநாடு’ நடைபெற உள்ளதாக மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா இன்று புது தில்லியில் அறிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், ” வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கான அமிர்தகாலப் பாதையில் இளைஞர்கள் வழிநடத்துபவர்களாக …
Read More »அஸ்மிதா பளுதூக்குதல் லீக்கை துவக்கி வைத்தார், மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா
உத்தரப்பிரதேச மாநிலம் மோடிநகரில் இன்று 2025 ஆம் ஆண்டுக்கான அஸ்மிதா லீக் சீசனை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். 2025 ஆம் ஆண்டுக்கான அஸ்மிதா சீசன், எட்டு வெவ்வேறு எடைப் பிரிவுகளில் 42 பெண்கள் பங்கேற்ற பளுதூக்குதல் லீக்குடன் தொடங்கியது. நடப்பு நிதியாண்டான 2025-26-இல், 15 விளையாட்டுப் பிரிவுகளில் 852 லீக்குகள் திட்டமிடப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ள லீக்குகளில் 70,000க்கும் …
Read More »டாக்டர் மன்சுக் மாண்டவியா ‘நகர்ப்புறம் குறித்த கலந்துரையாடல் 2025-ஐ தொடங்கி வைத்து சைக்கிள் ஓட்டுதல் குறித்த சிறப்புப் புத்தகங்களை வெளியிட்டார்
மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று புதுதில்லியில் நகர்ப்புறம் குறித்த கலந்துரையாடல் 2025 மாநாட்டைத் தொடங்கி வைத்தார். நிலையான நகர்ப்புற எதிர்காலத்தை உருவாக்க இளையோர்கள், நிபுணர்கள் மற்றும் தலைவர்களை ஒன்றிணைப்பதை மூன்று நாள் மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. அப்போது பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, சைக்கிள் ஓட்டுதல் என்பது உடற்பயிற்சியின் சிறந்த வடிவம் என்றும் அது நம்மை ஆரோக்கியமாக்குவது …
Read More »மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் 250க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டுநர்கள் உடல் பருமனுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றனர்
மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இந்தியாவில் உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பை முன்னோக்கி எடுத்து, ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பேரணியை மேற்கொண்டு வருகிறார். மேஜர் தயான்சந்த் ஸ்டேடியத்தில் நடந்த இந்த வார ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள் நிகழ்வில் அமைச்சருடன் எண்ணற்ற மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் பங்கேற்றனர். பாரிஸ் பாராலிம்பிக்ஸ் பதக்கம் வென்ற ரூபினா பிரான்சிஸ் மற்றும் தில்லி பாரதி கல்லூரி மற்றும் சோனியா விஹார் வாட்டர் ஸ்போர்ட்ஸ் கிளப்பைச் சேர்ந்த பல இளைஞர்களும் கலந்து கொண்டனர். “உடல் பருமன் என்பது இளைஞர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை மற்றும் பெரிய சவாலாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம் எட்டு பேரில் ஒருவர் பருமனானவர் என்று கூறுகிறது. எனவே, இந்த நாட்களில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு மிகவும் முக்கியமானது. டேராடூனில் நடைபெற்ற 38வது தேசிய விளையாட்டுப் போட்டியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இதைப் பற்றி குறிப்பிட்டார். நாம் எண்ணெய் நுகர்வைக் குறைக்க வேண்டும் மற்றும் நமது உணவு மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். உடல் பருமனுக்கு எதிரான இந்த போராட்டத்தில் சைக்கிள் ஓட்டுதல் தொடர்ந்து நன்மை பயக்கும். ஃபிட் இந்தியா மூலம், இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றிபெற முடியும்,” என்று இந்த நிகழ்வில் டாக்டர் மாண்டவியா குறிப்பிட்டார். ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள் நிகழ்வு உடல் பருமனுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை நோக்கி நகர்வதில் ஒரு சிறந்த படியாகும் என்பதை ரூபினா பிரான்சிஸ் வெளிப்படுத்தினார். ரைடர்ஸ் குழுவின் ஒரு அங்கமாக இருந்த நீரிழிவு மற்றும் உடல் பருமன் நிபுணர் டாக்டர் திரிபுவன் குலாட்டி, பல உடல்நல அபாயங்கள் உடல் பருமன் பிரச்சனைகளை பட்டியலிட்டார். மூத்த குழந்தை மருத்துவரும், இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) உறுப்பினருமான டாக்டர் பியூஷ் ஜெயின், உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதில் சைக்கிள் ஓட்டுவது ஒரு நேர்மறையான நடவடிக்கை என்று குறிப்பிட்டார். டாக்டர் மாண்டவியா கடந்த ஆண்டு டிசம்பர் 17 அன்று இதே இடத்தில் இந்த தனித்துவமான சைக்கிள் ஓட்டுதலைத் தொடங்கினார், அதன்பிறகு ஒவ்வொரு வாரமும் இந்தியா முழுவதும் பல சைக்கிள் ஓட்டுதல்கள் நடத்தப்பட்டன. நாடு முழுவதும் 3 லட்சத்துக்கும் அதிகமான ரைடர்ஸ் பங்கேற்புடன் 3500க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
Read More »டாக்டர் மன்சுக் மாண்டவியா புதுதில்லியில் மாநிலங்களின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களின் தேசிய மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார்
மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, 2025 ஜனவரி 29-30 தேதிகளில் புதுதில்லியில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களின் இரண்டு நாள் தேசிய மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார். தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரண்ட்லஜேயும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார். …
Read More »மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா போர்பந்தரில் சைக்கிள் பேரணி மேற்கொண்டார்
மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர், டாக்டர் மன்சுக் மாண்டவியா, இன்று குஜராத்தின் போர்பந்தரில் உள்ள உப்லேடா தொகுதியில், சைக்கிள் ஓட்டுதல் நிகழ்விற்கான ஆர்வத்தை மேலும் அதிகரிக்க, ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ முன்முயற்சியை வழிநடத்தினார். 150-க்கும் மேற்பட்டோர் டாக்டர் மாண்டவியாவுடன் முனிசிபல் ஆர்ட்ஸ் & காமர்ஸ் கல்லூரியில் இருந்து உப்லேட்டாவில் உள்ள தாலுகா பள்ளி கிரிக்கெட் மைதானம் வரை 5 …
Read More »டாக்டர் மன்சுக் மாண்டவியா ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ முன்முயற்சியைத் தொடங்கி வைத்தார்
இந்த வார தொடக்கத்தில் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ முன்முயற்சியை இன்று காலை இங்குள்ள மேஜர் தியான் சந்த் நேஷனல் ஸ்டேடியத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் , இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் ஸ்டேடியத்தைச் சேர்ந்த இளம் உடற்பயிற்சியாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். சைக்கிள் ஓட்டுதலின் பரவலான தாக்கத்தைப் பற்றி டாக்டர் மன்சுக் மாண்டவியா , “ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள் முன்முயற்சியானது இந்தியாவில் 1100+ இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. இந்த வார தொடக்கத்தில் தொடங்கப்பட்ட சைக்கிள் ஓட்டுதல் பற்றிய விழிப்புணர்வை அதிவேகமாக பரப்பியுள்ளது’’ என்றார். “சைக்கிள் ஓட்டுவது இன்றைய தேவை. வளர்ந்த பாரதத்தின் பார்வைக்கு ஆரோக்கியமான தனிநபர் தேவை, அவர் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குகிறார், இறுதியில் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குகிறார். சைக்கிள் ஓட்டுதலின் நன்மைகள், 2019-ல் மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஃபிட் இந்தியா இயக்கத்தின் செய்தியை நிலைநிறுத்துகிறது,” என்று விளையாட்டுத் துறை அமைச்சர் மேலும் கூறினார். தேசிய தலைநகரில் நடந்த நிகழ்வில் சிஆர்பிஎப் மற்றும் ஐடிபிபி-யைச் சேர்ந்த ஏராளமான சைக்கிள் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர், மேலும் அவர்கள் உடற்பயிற்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இரண்டையும் ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு மற்றும் மை பாரத் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் பிராந்திய மையங்கள், தேசிய சிறப்பு மையங்கள் மற்றும் கேலோ இந்தியா மையங்கள் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
Read More »
Matribhumi Samachar Tamil