Monday, December 23 2024 | 06:21:40 PM
Breaking News

Tag Archives: Emir

குவைத் அமீரை பிரதமர் சந்தித்தார்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குவைத் அமிர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவைச் சந்தித்தார். இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும். பயான் அரண்மனையை வந்தடைந்த பிரதமருக்கு , குவைத்  பிரதமர் அஹ்மத் அல்-அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபா சம்பிரதாய முறையில் வரவேற்பு அளித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான வரலாற்று மற்றும் நட்புறவுகளை நினைவுகூர்ந்த தலைவர்கள், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் தங்கள் முழு அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினர். இந்தச் சூழலில், இருதரப்பு உறவை ‘ உத்திபூர்வ  கூட்டாண்மை’யாக உயர்த்த அவர்கள் ஒப்புக்கொண்டனர். குவைத்தில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான பலம் வாய்ந்த இந்திய சமூகத்தின் நல்வாழ்வை உறுதி செய்ததற்காக அமீருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். குவைத்தின் வளர்ச்சியில் பெரிய மற்றும் துடிப்பான இந்திய சமூகத்தின் பங்களிப்பிற்கு  அமீர் பாராட்டு தெரிவித்தார்.  குவைத் தனது தொலைநோக்குப் பார்வை 2035-ஐ நிறைவேற்றும் புதிய முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், இந்த மாத தொடக்கத்தில் ஜிசிசி உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக அமீருக்கு வாழ்த்து தெரிவித்தார். அரேபிய வளைகுடாக் கோப்பையின் தொடக்க விழாவில் நேற்று ‘கெளரவ விருந்தினராக’தம்மை அழைத்ததற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். குவைத் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் மதிப்புமிக்க பங்குதார நாடாக  இந்தியாவின் பங்கிற்குப் பாராட்டுத் தெரிவித்ததோடு, பிரதமரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக அமீர் கூறினார். குவைத் தொலைநோக்குப் பார்வை 2035-ஐ நனவாக்குவதில் இந்தியாவின் பெரும் பங்கு மற்றும் பங்களிப்பை எதிர்நோக்கியுள்ளதாக அமீர் கூறினார்.  இந்தியாவுக்கு வருமாறு அமீருக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்

Read More »