Wednesday, December 24 2025 | 08:42:38 PM
Breaking News

Tag Archives: everyone

அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அனைவருக்கும் பிரதமர்வாழ்த்து தெரிவித்துள்ளார்

அயோத்தியில் குழந்தை ராமர் சிலை புனிதப்படுத்தப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவு தினமான இன்று நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “பல நூற்றாண்டு கால தியாகம், தவம் மற்றும் போராட்டத்திற்குப் பிறகு கட்டப்பட்ட இந்தக் கோவில், நமது கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் சிறந்த பாரம்பரியம்” என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது; “அயோத்தியில் குழந்தை ராமர் சிலை …

Read More »

தியானத்தை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுமாறு அனைவருக்கும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்

உலக தியான தினமான இன்று, தியானத்தை தங்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். தியானம் என்பது ஒருவருடைய வாழ்க்கையிலும், நமது சமூகம் மற்றும்  பூமியிலும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழியாகும் என்று பிரதமர் திரு மோடி குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது; “இன்று, உலக தியான தினத்தில், தியானத்தை தங்கள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக ஆக்கி, அதன் மாற்றும் திறனை அனுபவிக்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். தியானம் என்பது ஒருவரின் வாழ்க்கையிலும், நமது சமூகம் மற்றும் பூமிக் கிரகத்திற்கும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழியாகும். தொழில்நுட்ப யுகத்தில், செயலிகள் மற்றும் வழிகாட்டும் காணொலிகள்  தியானத்தை நமது அன்றாட நடவடிக்கைகளில்  இணைக்க உதவும் மதிப்புமிக்க கருவிகளாக இருக்கும்’’.

Read More »