Sunday, December 07 2025 | 12:51:28 PM
Breaking News

Tag Archives: farmers

வேளாண் விஞ்ஞானிகள் விவசாயிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களை வழிநடத்த வேண்டும் – திரு சிவராஜ் சிங் சௌகான்

மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், மகாராஷ்டிராவின் புனே அருகே நாராயண்கோன் பகுதியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் (KVK) விவசாயிகளுடன் இன்று (03.06.2025) கலந்துரையாடினார். முன்னதாக, மத்திய அமைச்சர் நாராயண்கோன் வேளாண் விளைபொருள் சந்தைக் குழு, தக்காளி சந்தை, உள்ளூர் பண்ணை வயல்கள், குளிர்பதன கிடங்கு ஆகியவற்றை வேளாண் விஞ்ஞானிகளுடன் இணைந்து அவர் பார்வையிட்டார். அங்கு அவர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் திரு சௌகான், வேளாண் விஞ்ஞானிகள் வயல்களுக்குச் சென்று விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கத்தின் நோக்கங்களை எடுத்துரைத்த அவர், விவசாயத் துறையில் வளர்ச்சியும், விவசாயிகளின் செழிப்பும் இல்லாமல் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க முடியாது என்று கூறினார். …

Read More »

விவசாயிகளின் நலனை மேம்படுத்த மத்திய அரசு உறுதியுடன் உள்ளது: பிரதமர்

2025-ம் ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவுகளின் அடிப்படையில், விவசாயிகளின் நலனை மேம்படுத்த மத்திய அரசு முனைப்புடன் உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ்  தளப் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது: “விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதில்  மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாய சகோதர, சகோதரிகள் அனைவரையும் நினைத்து நாடு பெருமிதம் கொள்கிறது. 2025-ம் ஆண்டின் முதலாவது …

Read More »

மாநிலங்களவை உறுப்பினர் திரு சரத் பவார் விவசாயிகள் குழுவினருடன் பிரதமரைச் சந்தித்தார்

மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு சரத் பவார், விவசாயிகள் குழுவினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது: “மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு சரத் பவார், விவசாயிகள் குழுவினருடன் இன்று பிரதமர் நரேந்திர மோடியை @narendramodi சந்தித்தார் @PawarSpeaks”

Read More »