Saturday, January 24 2026 | 05:06:51 PM
Breaking News

Tag Archives: Flag Day Fund

கொடிநாள் நிதிக்கு தாராளமாக பங்களிப்பு வழங்க வேண்டும் – பொது மக்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

ஆயுதப்படைகளின் தியாகங்களையும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 07 அன்று நாடு முழுவதும்  ஆயுதப்படைகள் கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது. நாட்டைப் பாதுகாக்கும் துணிச்சலான வீரர்களுக்கு இந்த நாளில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும், ஆயுதப்படைகளின் கொடிநாள் நிதிக்கு தாராளமாக பங்களிப்பு வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “ஆயுதப்படை கொடி நாளன்று, நமது ஆயுதப்படைகளின் வீரத்துக்கும் தியாகங்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். அவர்களின் துணிச்சல் நமது நாட்டைப் பாதுகாக்கிறது. அவர்களின் தன்னலமற்ற சேவை நாம் ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாத கடனாகும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு தாராளமாக பங்களிக்குமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆதரவு அவர்களின் அர்ப்பணிப்பை மதிப்பதாக அமையும் என்பதுடன் நம்மைப் பாதுகாப்பவர்களை பலப்படுத்தும்.” என்று திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஆயுதப் படைகளின் முக்கிய பங்கை சுட்டிக்காட்டியுள்ளார். மனிதாபிமான நடவடிக்கைகளிலும் அவர்களின் அசாதாரண அர்ப்பணிப்பை திரு சஞ்சய் சேத் எடுத்துரைத்துள்ளார். முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான், பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், பாதுகாப்பு ஆராய்ச்சி – மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி காமத், முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை செயலாளர் திருமதி சுக்ரிதி லிக்கி ஆகியோரும் ஆயுதப்படை வீரர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். கொடிநாள் நிதிக்கான பங்களிப்புகளுக்கு, வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 80ஜி (5)(vi)-ன் கீழ் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. பங்களிப்புகளை பின்வரும் வங்கிக் கணக்குகளில் காசோலை/வரைவோலை/நெஃப்ட்/ஆர்டிஜிஎஸ் மூலம் செலுத்தலாம்: 1) பஞ்சாப் நேஷனல் வங்கி, சேவா பவன், ஆர்.கே. புரம் புது தில்லி-110066. கணக்கு எண் – 3083000100179875 ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண் – PUNB0308300 2) பாரத ஸ்டேட் வங்கி ஆர்.கே. புரம் புது தில்லி-110066. கணக்கு எண் – 34420400623 ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண் – SBIN0001076 3) ஐசிஐசிஐ வங்கி ஐடிஏ ஹவுஸ், செக்டர்-4,ஆர்கே புரம் புது தில்லி-110022. கணக்கு எண் – 182401001380 ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண் – ICIC0001824 affdf@icici என்ற யுபிஐ ஐடி மூலமாகவும் மக்கள் கொடிநாள் நிதிக்கு பங்களிப்புகளை வழங்கலாம்.

Read More »