Sunday, December 07 2025 | 01:49:25 PM
Breaking News

Tag Archives: former Prime Minister

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதைப் பாக்கியமாக கருதுகிறேன்: பிரதமர்

பிரதமர் திரு நரேந்திர மோடி பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் இன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், “பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வது தனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுவதாக தெரிவித்துள்ளார். திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது தெய்வீக இணைப்பின் தருணமாக அமைந்துள்ளது. இதில் பங்கேற்ற கோடிக்கணக்கான மக்களைப் போலவே,எனது மனதில் பக்தி பரவசம் நிறைந்துள்ளது. …

Read More »

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் விடுத்துள்ள இரங்கல் செய்தியின் தமிழாக்கம்

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஜியின் மறைவு எங்கள் இதயங்களை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. அவரது மறைவு ஒரு தேசமாக எமக்கு மிகப்பெரிய இழப்பாகும். பிரிவினையின் போது இவ்வளவு இழந்து, வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்த பிறகு பாரதத்திற்கு வருவது சாதாரண சாதனை அல்ல. கஷ்டங்கள் மற்றும் சவால்களைத் தாண்டி பெரிய உயரங்களை எவ்வாறு அடைவது என்பதற்கு எதிர்கால சந்ததியினருக்கு அவரது வாழ்க்கை ஒரு பாடமாக அமைகிறது. கனிவான …

Read More »

முன்னாள் பிரதமர் மறைந்த திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி புதுதில்லியில் உள்ள அவரது நினைவிடமான ஸ்மிருதி ஸ்தல் ‘சதைவ் அடல்’-லில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அஞ்சலி செலுத்தினார்

முன்னாள் பிரதமர் மறைந்த திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி புதுதில்லியில் உள்ள அவரது நினைவிடமான ஸ்மிருதி ஸ்தல் ‘சதைவ் அடல்‘-ல் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா அஞ்சலி செலுத்தினார் இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “நல்ல நிர்வாகம், பொது நலனுக்கான அடல் பிஹாரி வாஜ்பாயின் அர்ப்பணிப்பு எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து வழிகாட்டும். அடல் பிஹாரி வாஜ்பாய் …

Read More »

முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளையொட்டி, மத்தியப் பிரதேசத்தில் கென்-பேட்வா நதிகள் இணைப்புக்கான தேசிய திட்டத்திற்கு பிரதமர் டிசம்பர் 25 அன்று அடிக்கல் நாட்டுகிறார்

முன்னாள் பிரதமர் திரு.அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 25 அன்று மத்தியப் பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார். மதியம் 12:30 மணியளவில், கஜுராஹோவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கியும் வைக்கிறார். தேசிய தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், நாட்டின் முதலாவது நதிகள் இணைப்புத் திட்டமான கென்-பெட்வா நதிகளை இணைக்கும் தேசியத் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் …

Read More »

முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பிறந்த நாளையொட்டி பிரதமர் அவரை நினைவுகூர்ந்துள்ளார்

முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பிறந்த நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவரை நினைவுகூர்ந்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: “ஏழைகள் மற்றும் விவசாயிகளின் உண்மையான நலன் விரும்பியான முன்னாள் பிரதமர் பாரத ரத்னா சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்குத்  தாழ்மையுடன் மரியாதை செலுத்துகிறேன். தேசத்திற்கான அவரது அர்ப்பணிப்பும் சேவையும் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.”

Read More »