“கைத்தறி மாநாடு -மந்தன்” என்பது கைத்தறி துறையின் பல்வேறு பங்குதாரர்களுடன் ஒரு கலந்துரையாடும் நிகழ்வாகும். கைத்தறி நெசவாளர்கள்/உற்பத்தியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், வாங்குபவர்கள், வடிவமைப்பாளர்கள், கல்வியாளர்கள், தொடக்க நிறுவனர்கள், கைத்தறி தொழில்முனைவோர், கைத்தறி கூட்டுறவு நிறுவனங்கள், மின்னணு வர்த்தக நிறுவனங்கள், பிரதமரின் பண்ணாயிலிருந்து வெளிநாடு வரையிலான தொலைநோக்கை செயல்படுத்துவதற்கான ஒரு தளமாகும். மாநாட்டில் 21 குழு உறுப்பினர்கள், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வரும் 120 கைத்தறி பயனாளிகள், நெசவாளர் சேவை மையங்கள், சுமார் 25 மாநில அரசுகள் என கிட்டத்தட்ட 250 பங்குதாரர்கள் கலந்துகொள்வார்கள். ஜவுளி அமைச்சகத்தின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகள் (கைத்தறி, பட்டு & ஜவுளி) மற்றும் அதிகாரிகள். கைத்தறித் துறையின் வளர்ச்சிக்கான சிறந்த நடைமுறைகள், புதுமைகள் மற்றும் உத்திகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், பல்வேறு பங்குதாரர்கள் ஒன்றிணைவதற்கும் ஒரு தளமாகச் செயல்படுவதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் ஒட்டுமொத்த கைத்தறி தொழிலை மேம்படுத்துவதற்கும் அரசின் தொடர்ச்சியான முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது. வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ன் வளர்ச்சி இயந்திரமாக செயல்படும் அபரிமிதமான ஆற்றலுடன் கைத்தறி துறையை ஒரு முக்கிய துறையாக மேம்படுத்தவும் இது உதவும். தொடக்க விழாவிற்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
Read More »மத்திய ஜவுளித் துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், மேற்கு வங்க மாநிலம் ஃபுலியாவில் இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகத்தைத் திறந்து வைத்தார்
ஃபுலியா இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகத்தின் புதிய நிரந்தர வளாகத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் திறந்து வைத்தார். இந்நிறுவனத்தின் புதிய வளாகம் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 5.38 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்த வளாகத்தில் ரூ. 75.95 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தில் ஸ்மார்ட் வகுப்புகள், டிஜிட்டல் நூலகம், நவீன சோதனைக் கூடங்கள் அடங்கிய நவீன உள்கட்டமைப்பு உள்ளது. புதிய வளாகம் ஒரு முன்மாதிரியான …
Read More »மேற்கு வங்க மாநிலம் நாடியாவின் ஃபுலியாவில் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய வளாகத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் 04.01.2025 அன்று திறந்து வைக்கிறார்
மேற்கு வங்க மாநிலம் நாடியாவின் ஃபுலியாவில் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய வளாகத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் 04.01.2025 அன்று திறந்து வைக்கிறார். கைத்தறியின் தனித்துவமான அடையாளத்தைப் பாதுகாக்கவும், கைத்தறித் தொழிலுக்குத் தேவைப்படும் தொழில்நுட்ப மனிதவளத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், மத்திய அரசு “இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம்” என்ற பெயரில் 06 தொழில்நுட்ப நிறுவனங்களை கைத்தறி தொழில் அதிகம் உள்ள சேலம், வாரணாசி, …
Read More »
Matribhumi Samachar Tamil