இந்தியாவின் வளமான மொழிப் பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது என மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி கூறியுள்ளார். இன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், தேச ஒற்றுமையில் மொழிகளின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். மொழிகள் வெறும் தகவல்தொடர்புக்கான கருவிகள் மட்டுமல்ல என்றும் அவை அறிவு, கலாச்சாரம், பாரம்பரியங்கள் ஆகியவற்றின் விலைமதிப்பற்ற களஞ்சியங்கள் என்றும் அவர் கூறினார். 1835-ம் ஆண்டில், மெக்காலேயின் கொள்கைகள் செவ்வியல் …
Read More »ஆயுர்வேத பொருட்களின் சந்தை வளர்ச்சிக்கு அரசு ஆதரவளிக்கிறது
ஆயுர்வேத பொருட்களின் சந்தை வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு வகைகளில் ஆதரவளிக்கிறது. ஆயுஷ் அமைச்சகம் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக ஆயுஷ் பொருட்களுக்கான சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது. மத்திய அரசின் திட்டத்தை பல்வேறு அம்சங்களின் கீழ் செயல்படுத்தி வருகிறது. ஆயுஷ் பிரச்சாரத்திற்காக சர்வதேச கண்காட்சிகள், வர்த்தக கண்காட்சிகள், சாலை கண்காட்சிகள் போன்றவற்றில் பங்கேற்பதற்காக ஆயுஷ் மருந்து உற்பத்தியாளர்கள், தொழில்முனைவோர், ஆயுஷ் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. சர்வதேச ஆயுஷ் சந்தை மேம்பாடு மற்றும் ஆயுஷ் மேம்பாடு தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்தல். மேலும், ஆயுஷ் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கு ஆயுஷ் அமைச்சகமானது ஆயுஷ் தயாரிப்புகளுக்கு சான்றிதழ்களை வழங்க ஊக்குவித்தல். மூலிகைப் பொருட்களை உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல்களின்படி மருந்து தயாரிப்புகளுக்கு பயன்படுத்துவதற்கு சான்றிதழ் வழங்குதல். ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி தயாரிப்புகளுக்கு சர்வதேச தரக்கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப இணங்குவதற்கான மூன்றாம் தரப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் ஆயுஷ் பிரீமியம் வழங்குதல். இந்திய தர கவுன்சிலால் செயல்படுத்தப்பட்ட தர சான்றிதழ் திட்டம். இவ்வாறான பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
Read More »உயிரி எரிபொருட்களை ஊக்குவிப்பதற்கான அரசின் முன்முயற்சிகள்
2014-ம் ஆண்டு முதல், பெட்ரோலில் எத்தனால் கலப்பதை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எத்தனால் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் உற்பத்தியை அதிகரித்தல், நிர்வகிக்கப்பட்ட விலை வழிமுறை, எத்தனால் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 5 சதவீதமாக குறைத்தது, எத்தனால் ஆலைகளுடன் நீண்டகால கொள்முதல் ஒப்பந்தங்கள், பயோடீசல் விற்பனைக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது, பயோடீசல் கொள்முதலுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைத்தல், டீசலில் பயோடீசலை 5 சதவீதம் கலப்பதை கட்டாயமாக்குவது தொடர்பாக உயிரி எரிபொருள் குறித்த தேசிய கொள்கையில் திருத்தம் போன்ற பல நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. அழுத்தப்பட்ட உயிரி …
Read More »உள்நாட்டு நீர்வழிப் பாதைகளை ஊக்குவிக்க ‘ஜல்வாஹக்’ திட்டத்தை அரசு தொடங்கி வைத்தது
தேசிய நீர்வழிகள் 1 (கங்கை நதி), தேசிய நீர்வழிகள் 2 (பிரம்மபுத்திரா நதி), தேசிய நீர்வழிகள் 16 (பராக் நதி) வழியாக நீண்ட தூர சரக்குகளின் போக்குவரத்தை ஊக்குவிக்கும் சரக்கு மேம்பாட்டுக்கான ‘ஜல்வஹக்’ என்ற முக்கிய கொள்கையை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் இன்று வெளியிட்டார். மத்திய அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால், எம்வி ஏஏஐ, எம்வி ஹோமி பாபா மற்றும் எம்வி திரிசூல் ஆகிய சரக்குக் கப்பல்களையும் அஜய் மற்றும் திகு ஆகிய இரண்டு தளவாடப் படகுகளையும் புதுதில்லி அரசு படகுத்துறையிலிருந்து இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். கொல்கத்தா – பாட்னா – வாரணாசி – பாட்னா – கொல்கத்தா இடையே ஒரு வழியாகவும், கொல்கத்தா மற்றும் குவஹாத்தியில் உள்ள பாண்டு இடையேயும் இந்தோ-வங்கதேச நெறிமுறை பாதை (ஐபிபிஆர்) வழியாகவும் குறிப்பிட்ட நாள் திட்டமிடப்பட்ட பாய்மரப் படகோட்ட சேவை இயக்கப்படும். நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு சோனோவால், பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், நமது வளமான உள்நாட்டு நீர்வழிப் பாதைகளின் மிகப்பெரிய திறனை உணர அரசு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. சிக்கனமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, திறமையான போக்குவரத்து முறை என்ற அனுகூலத்தைக் கொண்டு, ரயில்வே மற்றும் சாலைப் போக்குவரத்தில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, நீர்வழிகள் வழியாக சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்க நாங்கள் விரும்புகிறோம். ஜல்வாஹக் திட்டம் ஆகியவற்றில் நீண்ட தூர சரக்குகளை ஊக்குவிப்பதுடன், நேர்மறையான பொருளாதார மதிப்பு முன்மொழிவுடன் நீர்வழிகள் வழியாக சரக்குகளின் இயக்கத்தை ஆராய வர்த்தக நலன்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. மேலும், கொல்கத்தாவிலிருந்து தொடங்கும் வழக்கமான அட்டவணைப்படுத்தப்பட்ட சரக்கு சேவை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரக்குகளை கொண்டு சென்று வழங்குவதை உறுதி செய்யும். இது ஒரு திறமையான, சிக்கனமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு பொறுப்பான போக்குவரத்து முறையில் சரக்குகளை வழக்கமான இயக்கத்திற்கு தேசிய நீர்வழிகள் தயாராக உள்ளது என்ற நம்பிக்கையை நமது பயனர்களிடையே உருவாக்கும். இந்த ஊக்கத் திட்டத்துடன் நமது கப்பல் ஆபரேட்டர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலமும், குறைந்த செலவில் பாதுகாப்பான மற்றும் சரியான நேரத்தில் சரக்குகளை வழங்குவதன் மூலம் நமது வணிக நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலமும், இந்தியா வளர்ச்சியடைந்த பாரதமாக மாறுவதை நோக்கி பயணிக்கும்போது போக்குவரத்து வழியாக மாற்றத்திற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் பார்வைக்கு இது அர்த்தம் சேர்க்கிறது என்று கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், வளமான நீர்வழிகள் 2014 முதல் புத்துயிர் பெற்று வருகின்றன. நீர்வழிகளை புனரமைப்பதில் தொடர்ச்சியான முதலீட்டுடன், இந்தத் திட்டங்கள் 2027 ஆம் ஆண்டுக்குள் ரூ .95.4 கோடி முதலீட்டில் எயல்படுத்தப்படும். 2014 வரை நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட நீல பொருளாதாரத்தின் மதிப்பை திறக்கவும் இது ஒரு தீவிர முயற்சியாகும். புத்துயிர் பெற்ற தேசிய நீர்வழிகள் அதன் செயல்திறனை கணிசமாக நகர்த்தியுள்ளன, ஏனெனில் 2013-14 ஆம் ஆண்டில் 18.07 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த சரக்குகளின் மொத்த அளவு 2023-24 ஆம் ஆண்டில் 132.89 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது, இது 700% க்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் நீர்வழிகள் மூலம் 200 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கொண்டு செல்ல இலக்கு நிர்ணயித்துள்ளோம். 2047-ம் ஆண்டில், சரக்கு போக்குவரத்துக்கு சாத்தியமான மாற்றாக உள்நாட்டு நீர்வழிகளின் வளர்ச்சியில் நம்பிக்கையுடன், 500 மில்லியன் மெட்ரிக் டன் இலக்கை நிர்ணயித்துள்ளோம் என்று அமைச்சர் தெரிவித்தார். மத்திய இணையமைச்சர் திரு சாந்தனு தாக்கூர், “நீர்வழிப் போக்குவரத்தை, குறிப்பாக வங்காளத்தைப் பொறுத்தவரை, இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம். பிரதமர் திரு. நரேந்திர மோடி யின் எழுச்சியூட்டும் தலைமையின் கீழ், நீர்வழிப் போக்குவரத்தில் புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம், நீர்வழித் துறை, குறிப்பாக கிழக்கு இந்தியாவில், சரக்கு போக்குவரத்து இயக்கத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பத்தை ஏற்படுத்தும். சிக்கனமான, பயனுள்ள, திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறை சரக்கு மற்றும் பயணிகள் இயக்கத்தில் ஒரு புதிய காட்சியை உறுதியளிக்கிறது என்று தெரிவித்தார்.
Read More »உள்நாட்டு நீர்வழிப் பாதைகளை புதுப்பிக்க ரூ.6,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது மோடி அரசு: திரு சர்பானந்த சோனாவால்
மத்திய துறைமுகங்கள், கப்பல்போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், 2014 முதல் உள்நாட்டு நீர்வழிப் பாதைகளுக்கு புத்துயிரூட்டுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எடுத்துரைத்தார். சரக்குப் போக்குவரத்துக்கு ஒரு சாத்தியமான மாற்றாக உள்நாட்டு நீர்வழிப்பாதைகளை புதுப்பிப்பதற்கும், நீர்வழிப்பாதைகளின் வளமான வலைப்பின்னலைப் பயன்படுத்தி பயணிகள் இணைப்பை மேம்படுத்துவதற்கும் மோடி அரசு கடந்த தசாப்தத்தில் ரூ .6,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது என்று சோனாவால் குறிப்பிட்டார். 1986-ம் ஆண்டு இந்திய நீர்வழிப்பாதைகள் …
Read More »புராதனத் தலங்களை பாதுகாப்பதில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பு
பாரம்பரிய தலங்களைப் பாதுகாப்பதற்கும், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை ஒட்டுமொத்தமாக மேம்படுத்துவதற்கும் அரசு மற்றும் தனியார் துறை இணைந்து கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்டுவதன் மூலம், 1890-ம் ஆண்டு அறக்கட்டளை சட்டத்தின் கீழ் தேசிய கலாச்சார நிதியம் 1996-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிதியத்தின் அனைத்து செயல் திட்டங்களும் திட்ட அமலாக்க குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேசிய கலாச்சார நிதியத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகள் நினைவுச்சின்னங்களின் பாதுகாப்பு அல்லது அங்குள்ள வசதிகளை மேம்படுத்துவதற்காக …
Read More »