Thursday, January 01 2026 | 10:29:44 PM
Breaking News

Tag Archives: Haryana

காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களின் அரசுப் பிரதிநிதிகளுடன் மத்திய காற்றுத் தர மேலாண்மை ஆணையம் ஆய்வு மேற்கொண்டது

தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியாக, மத்திய காற்று தர மேலாண்மை ஆணையத்தின் தலைவர் திரு ராஜேஷ் வர்மா தலைமையில், ஆணையத்தின் உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள் முன்னிலையில், ஹரியானா, பஞ்சாப் மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் 2025 ஜூலை 03 அன்று சண்டிகரில் நடைபெற்றது. இந்த இரண்டு மாநிலங்களிலும், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஹரியானா மாநில அரசு பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது, ​​அங்கீகரிக்கப்பட்ட செயல் திட்டத்தின்படி, 2025-ம் ஆண்டில் பயிர்க்கழிவுகள் எரிப்பை தடுப்பது, செங்கல் சூளைகளில் பரிந்துரைக்கப்பட்ட பொருள்களை மட்டும் பயன்படுத்துதல், அனல் மின் நிலையங்கள் பரிந்துரைக்கப்பட்ட உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமாக செயல்படுதல் போன்ற முக்கியமான அம்சங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  பஞ்சாப் மாநில அரசுப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திலும் இதே அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு, ஆணையத்தால் வெளியிடப்பட்ட சட்டப்பூர்வ வழிகாட்டுதல்களை கடுமையாக அமல்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ஆணையம் மீண்டும் வலியுறுத்தியது. இரு மாநில அரசுகளும் இதுவரை மேற்கொண்ட முயற்சிகளை ஆணையம் பாராட்டியது. குறிப்பாக குளிர்காலம் நெருங்கி வருவதால், இப்பகுதியில் காற்றின் தரத்தில் ஏற்படும் சூழல்கள் குறித்த மாற்றங்களையும் அது தொடர்பான துல்லியமான புள்ளி விவரங்களையும் அறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் மத்திய காற்றுத் தர மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டது.

Read More »

சேவை பெறும் உரிமை ஆணையத்தின் தானியங்கி மேல்முறையீட்டு முறை ஹரியானா மக்களுக்கு சேவை வழங்கலில் புதிய முன்னுதாரணத்தை அமைத்துள்ளது: பொது மக்கள் குறைதீர்ப்புத் துறை செயலாளர்

ஹரியானா மாநில அரசுப் பணியாளர் உரிமை ஆணையத்தின் தலைமை ஆணையர் அழைப்பின் பேரில், நிர்வாக சீர்திருத்தங்கள், பொது மக்கள் குறை தீர்ப்புத் துறையின் செயலாளர் திரு வி.சீனிவாஸ் தலைமையிலான மத்திய அரசின் தூதுக்குழு அந்த ஆணையத்தை பார்வையிட்டது. இந்த குழு தடையற்ற சேவை வழங்கல் செயல்முறைகளை ஆய்வு செய்தது.  அத்துடன் காணொலி மூலம் மக்கள் கலந்துரையாடல் அமர்வில் கலந்து கொண்டது. ஹரியானாவில் சேவை பெறும் உரிமை ஆணையம், மாநிலத்தில் வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை மாற்றியுள்ளது. அறிவிக்கப்பட்ட 422 சேவைகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் வழங்கப்பட்டு வருகின்றன. …

Read More »