Saturday, December 06 2025 | 12:46:22 AM
Breaking News

Tag Archives: IIT Madras

நாட்டிலேயே எடை குறைந்த சக்கர நாற்காலியை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி மெட்ராஸ்), ‘ஒய்டி ஒன்’ என்ற சக்கர நாற்காலியை உருவாக்கி அதை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவிலேயே மிகவும் எடை குறைந்த சக்கர நாற்காலி இது என ஐஐடி கூறியுள்ளது. இந்த ஒற்றை குழாய் திட அமைப்பு (‘மோனோ-டியூப் ரிஜிட் ஃபிரேம்’) சக்கர நாற்காலி உள்நாட்டிலேயே துல்லியமாகக் கட்டமைக்கப்பட்டதாகும். சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்ட ‘ஒய்டி ஒன்’, பயனாளிகளின் உடல் அமைப்புக்கும், அவர்களின் தினசரி செயல்பாட்டுத் தேவைகளுக்கும் ஏற்ப …

Read More »

மென்பொருள் சார்ந்த வாகனங்களுக்கான திறனை மேம்படுத்த ஐஐடி மெட்ராஸ்-ன் நவீன தானியங்கி உபகரண ஆராய்ச்சிக்கான சீர்மிகு மையம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) நிறுவிய நவீன தானியங்கி உபகரண ஆராய்ச்சிக்கான சீர்மிகு மையமும் அக்செஞ்சர் நிறுவனமும் சிறப்புத் திறன்மிகு திட்டங்களை வழங்க இணைந்து செயல்படுகின்றன. அக்செஞ்சரின் மென்பொருள் சார்ந்த வாகன அகாடமியான லேர்ன்வான்டேஜ் மூலம் இந்த திறன்மிகு திட்டங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த முயற்சி, மென்பொருள்-சார்ந்த வாகனங்களை உருவாக்குவதற்கான திறமையை வளர்க்க விரும்பும் ஆட்டோமோடிவ் ஒரிஜினல் உபகரண உற்பத்தியாளர்கள்  மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ளது. திறமையான நிபுணர்களுக்கான வளர்ந்துவரும் தேவையை பூர்த்தி செய்வதையும், மேம்பட்ட ஓட்டுநர் உதவி …

Read More »

சென்னை ஐஐடி சான்சிபார், ரசாயன செயல்முறைப் பொறியியலில் புதிய இளநிலைப் பட்டப்படிப்பைத் தொடங்கியுள்ளது

  சென்னை ஐஐடி 2025-26ம் கல்வியாண்டில் ரசாயன செயல்முறைப் பொறியியலில்  புதிய இளங்கலை அறிவியல் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சான்சிபார் வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த நான்காண்டு முழுநேர இளநிலைப் பட்டப்படிப்பில் இந்தியர்கள் உள்பட அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ரசாயனப் பொறியியல் அடிப்படையில் செயல்முறை ஆய்வகப் பணிகள், தொழில்துறை சார்ந்த திட்டங்கள், பல்வேறு துறைகளுக்கு இடையே கற்றலை ஊக்குவிக்கும் விருப்பப் பாடங்கள் என விரிவான பாடத்திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. உயர்ந்த கல்வித் தரத்துடன், உலகளாவிய முக்கியத்துவத்தை உறுதிசெய்யும் வகையில் சென்னை ஐஐடி, ஐஐடிஎம் சான்சிபார், நிறுவனங்களைச் …

Read More »

சென்னை ஐஐடி, ‘விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கை’யின் கீழ் ஐந்து தேசியத் தடகள வீரர்-வீராங்கனைகளைச் சேர்த்துள்ளது

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), ‘விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கை’ பிரிவின் கீழ் தேசிய அளவில் சாதனை படைத்த ஐந்து தடகள வீரர்-வீராங்கனைகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு இளங்கலைப் பட்டப்படிப்பு பாடத்திட்டத்திலும் தலா இரண்டு இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்படுகின்றன. இதில் ஒரு இடம் மாணவிகளுக்கு மட்டும் ஒதுக்கப்படும். நாட்டிலேயே முதன்முறையாக  விளையாட்டு வீரர்களுக்கான மாணவர் சேர்க்கையை தனது இளங்கலைப் …

Read More »

ஐஐடி மெட்ராஸ், சிஎம்சி வேலூர் ஆகியவை இணைந்து கை மறுவாழ்வுக்காக குறைந்த விலையில் உள்நாட்டுத் தயாரிப்பு ரோபோவை உருவாக்கியுள்ளன

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர்  (சிஎம்சி வேலூர்) ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கை மறுவாழ்வுக்காக குறைந்த விலையில், கையில் எடுத்துச் செல்லக்கூடிய பிளக்-அண்ட்-ட்ரெய்ன் ரோபோவை உருவாக்கியுள்ளனர். ‘PLUTO’ (plug-and-train robot) என்றழைக்கப்படும் இந்த சாதனத் தொழில்நுட்பத்துக்கு தொழில்நுட்ப பரிமாற்ற அலுவலகம் (TTO ICSR) மூலம் உரிமம்  வழங்கப்பட்டது. த்ரைவ் ரிஹாப் சொல்யூஷன்ஸ் மூலம் வணிகப்படுத்தப்பட்ட இத்தொழில்நுட்பம் தற்போதைய மறுவாழ்வுச் சந்தையில் குறிப்பிட்ட …

Read More »

ஐஐடி மெட்ராஸ், 3-வது ஆண்டு ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்வுக்குத் தயாராகி வருகிறது

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் ‘காசி தமிழ் சங்கமம்’ 3-வது ஆண்டு நிகழ்வை பிப்ரவரி 15-ந் தேதி முதல் பிப்ரவரி 24-ந் தேதி வரை நடத்த தயாராகி வருகிறது. பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்களிடையே தொடர்புகளை எளிதாக்குவதன் மூலம், பண்டைய இந்தியாவின் இரண்டு முக்கிய கற்றல் மற்றும் கலாச்சார மையங்கக்கும் இடையிலான கலாச்சார தொடர்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம். …

Read More »

சென்னை ஐஐடி ‘சாரங் 2025’ கலாச்சார விழா: ஜனவரி 9 முதல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி மெட்ராஸ்), இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவில் மாணவர்களால் நடத்தப்படும் வருடாந்திர கலாச்சார விழாவின் 51-வது ஆண்டு சாரங் கொண்டாட்டத்தை 2025 ஜனவரி 9 முதல் 13-ம் தேதி வரை நடத்த தயாராகி வருகிறது. இதில் 80,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘சாரங் 2025’ தென்னிந்தியாவின் கலாச்சார சிறப்புகளை மையப்படுத்தும் கொண்டாட்டமாக இருக்கும்.    பல்வேறு நிகழ்வுகளை கொண்டாதாக அமையும் இந்த விழாவில் ஒவ்வொரு நிகழ்வும் பன்முகத் தன்மைக்கு சான்றாக விளங்குவதுடன் ஒவ்வொரு பார்வையாளருக்கும் உற்சாகத்தை அள்ளித் தரும். …

Read More »

சென்னை ஐஐடி, ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆராய்ச்சிக் கூடத்தை தொடங்கியுள்ளது

  சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், இந்திய ஆராய்ச்சி மற்றும் தொழில்துறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆராய்ச்சிக் கூடத்தைத் தொடங்கியுள்ளது. மேம்பட்ட வசதிகளுடன் கூடிய இந்த ஆராய்ச்சிக் கூடம், சென்னை ஐஐடி மற்றும் நாட்டின் ஆராய்ச்சி– தொழில்நுட்பத் திறன்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. சென்னை ஐஐடி -ல் இருந்து 36 கி.மீ. தொலைவில், தையூரில் அமைக்கப்பட்டுள்ள ‘டிஸ்கவரி’ செயற்கைக்கோள் வளாகத்தில் இந்த அதிநவீன ஆராய்ச்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியத் துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள், கடல்சார் பொறியியல் போன்றவற்றில் உள்ள சவாலான பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் சிறப்பு வசதிகள் …

Read More »

ஐஐடி மெட்ராஸ் மத்திய வேளாண் அமைச்சகத்தின் விஸ்தார் (VISTAAR) திட்டத்தில் இணைந்து செயல்படவிருக்கிறது

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), இந்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துடன் இணைந்து, டிஜிட்டல்மயமாக்கல் மூலம் வேளாண் விரிவாக்க முறையின் செயல்திறனையும் வலிமையையும் மேம்படுத்தும் விஸ்தார் திட்டத்தில் இணைந்து செயல்பட உள்ளது. விவசாய விரிவாக்க முறையை மேலும் வலுப்படுத்துவதற்கான முன்னோடித் திட்டம்தான் விஸ்தார். புதிய தயாரிப்புகளையும் சேவைகளையும் சந்தைக்குக் கொண்டு வருவதற்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில், புதிய கண்டுபிடிப்புகளையும் திறன்களையும் ஸ்டார்ட்-அப்கள் வழங்குகின்றன. விவசாயத் துறையில் உள்ள சூழல் காரணமாக, விநியோகம்- தேவை ஆகிய …

Read More »

சென்னை ஐஐடி-ன் சாஸ்த்ரா வருடாந்திர தொழில்நுட்பத் திருவிழா 2025 ஜனவரி 3-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடைபெறுகிறது

(சென்னை ஐஐடி), நாட்டிலேயே மிகப் பெரிய அளவில் மாணவர்களால் நடத்தப்படும் சாஸ்த்ரா திருவிழாவின் 26-வது ஆண்டு நிகழ்வை 2025-ம் ஆண்டு ஜனவரி 3-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் நடத்த உள்ளது. முற்றிலும் மாணவர்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் இந்த மாபெரும் நிகழ்வில் சென்னை ஐஐடி-ன் 750-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். ஐஎஸ்ஓ 9001:2015 சான்றளிக்கப்பட்ட இந்த விழாவில் 130 அரங்குகள் இடம்பெறுகின்றன. தொடர்ச்சியாக 80 நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், ஐந்து நாட்களில் 70,000 பேர் வரை இந்நிகழ்ச்சியை பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிகள், மாநாடுகள், விரிவுரைகள், கண்காட்சிகள், பயிலரங்கங்கள் வாயிலாக இந்த அறிவியல்- தொழில்நுட்ப நிகழ்வை சாஸ்த்ரா கொண்டாடவிருக்கிறது. இக்கல்வி நிறுவன வளாகத்தில் இன்று (30 டிசம்பர் 2024) சாஸ்த்ரா 2025 நிகழ்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “சாஸ்த்ரா போன்ற மாபெரும் நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம், மாணவர்களிடையே நிர்வாகத் திறன், அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு, பொது நோக்கத்திற்காக பெரிய குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் திறன் போன்ற உயர் பண்புகளை வளர்க்கச் செய்கிறது. சென்னை ஐஐடியை சேர்ந்த மாணவர்கள் இதுபோன்ற தேசிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் தங்களது திறன்களை வெளிக்கொண்டு வர உதவுகிறது. பல்வேறு அரசு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பெரு நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோர் மட்டுமின்றி, தலைசிறந்த முக்கிய பிரமுகர்களையும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்படும் என்று அவர் கூறினார். சாஸ்த்ரா 2025-ன் விழாவின் பங்கேற்பாளர்களில் ஒருவரான தேசிய கடல்சார் தொழில்நுட்ப பல்கலைக் கழக இயக்குநர் டாக்டர் பாலாஜி ராமகிருஷ்ணன் கூறும்போது, “சென்னை ஐஐடி-ன் சாஸ்த்ரா 2025 நிகழ்ச்சியில் பங்கேற்பதில் தேசிய கடல்சார் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பெருமிதம் கொள்கிறது. தொழில்நுட்பம், கடல்சார் அறிவியல் போன்றவற்றில் அன்றாட சவால்களுக்குத் தீர்வுகாண இளைஞர்களை ஊக்குவிப்பதிலும், கண்டுபிடிப்புகளை ஆதரிப்பதிலும் இந்த இரு கல்வி நிறுவனங்களின் இலக்கும் ஒரே மாதிரியாக உள்ளது என்று கூறினார். செயற்கை நுண்ணறிவு, ரோபாடிக்ஸ், நீடித்த கடல்சார் தொழில்நுட்பங்கள் போன்ற அதிநவீன துறைகளில் கூட்டு ஆராய்ச்சி, திறன் மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், கல்வி, தேசிய கடல்சார் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் நிபுணத்துவம் ஆகியவற்றுக்கு இடையேயான அறிவு பரிமாற்றத்திற்கான தனித்துவமிக்க தளத்தை இந்த நிகழ்ச்சி வழங்குகிறது” எனத் தெரிவித்தார்.

Read More »