குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 16, 2025) புதுதில்லியில் தேசிய பழங்குடியினர் திருவிழாவான ‘ஆதி மஹோத்சவ’ விழாவைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், பழங்குடியின பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்த ஆதி மகோத்சவம் ஒரு முக்கிய நிகழ்வு என்று கூறினார். இதுபோன்ற விழாக்கள் பழங்குடி சமூகத்தின் தொழில்முனைவோர், கைவினைஞர்கள், கலைஞர்களுக்கு சந்தையுடன் இணைவதற்கான சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார். பழங்குடியின சமுதாயத்தின் கைவினைப் …
Read More »ஹரியானாவின் 15வது சட்டமன்ற உறுப்பினர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை மக்களவைத் தலைவர் தொடங்கி வைக்கிறார்
சண்டிகரில் உள்ள மாநில சட்டமன்ற வளாகத்தில், ஹரியானாவின் 15-வது சட்டமன்றத்திற்குப் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா நாளை (2025 பிப்ரவரி 14) தொடங்கி வைக்கிறார். ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி; ஹரியானா சட்டப் பேரவைத் தலைவர் திரு ஹர்விந்தர் கல்யாண்; சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு பூபிந்தர் சிங் ஹூடா; மாநில அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற …
Read More »தமிழ்நாடு ஆளுநர் 16 வது பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் கீழ் செயல்படும் மை பாரத் (என்ஒய்கேஎஸ்) உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து 16 வது பழங்குடியின இளைஞர் பரிமாற்ற முகாமை சென்னையில் நடத்துகின்றன. இந்த முகாமினை இன்று (08/02/2015) ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். இன்று தொடங்கி வரும் பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் …
Read More »கார்வார் கடற்படை தளத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை முப்படை தலைமைத் தளபதி தொடங்கி வைத்தார்
முப்படைகளின் தலைமைத் தளபதியும் ராணுவ விவகாரங்கள் துறை செயலாளருமான ஜெனரல் அனில் சவுகான், இந்திய கடற்படையின் மூத்த மாலுமிகளுக்கான குடியிருப்புகளையும், கார்வாரில் உள்ள கடற்படைத் தளத்தில் டிரங்க் வசதிகளின் ஒரு அங்கமாக பிரதான விநியோக துணை நிலையத்தையும் 2025 பிப்ரவரி 04-ம் தேதி தொடங்கி வைத்தார். கடற்படை துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் உள்ளிட்ட துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். ராணுவ அதிகாரிகளுக்கான 240 குடியிருப்பு அலகுகளைக் …
Read More »ஸ்பெக்ட்ரம் குறித்த பயிலரங்கத்தை டிராய் தலைவர் தொடங்கி வைத்தார்
தெற்காசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கவுன்சிலின் அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) குறித்த பயிலரங்கை டிராய் தலைவர் திரு அனில் குமார் லஹோட்டி இன்று தொடங்கி வைத்தார். இந்த மூன்று நாள் பயிலரங்கில் தெற்காசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கவுன்சிலில் இடம் பெற்றுள்ள உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், பணிக்குழு உறுப்பினர்கள், தொழில்துறை வல்லுநர்கள், பல அரசுத் துறை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ஆசியா பசிபிக் தொலைத் தொடர்பு சமுதாயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயிலரங்கை …
Read More »சுரங்க அமைச்சகம் டிஎம்எப் கண்காட்சியை கோனார்க் சூரிய கோவிலில் திறந்துள்ளது
சுரங்க அமைச்சகம், ஒடிசா அரசாங்கத்துடன் இணைந்து, மாவட்ட கனிம அறக்கட்டளை டிஎம்எப் கண்காட்சியை கோனார்க்கில் உள்ள சூரிய கோவிலில் அமைத்துள்ளது. 2025 ஜனவரி 18 முதல் 21 வரை நடைபெறும் இந்தக் கண்காட்சி, நிலையான வளர்ச்சியின் மூலம் சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. சுரங்க அமைச்சகம், நால்கோ மற்றும் ஓஎம்சி அதிகாரிகள் முன்னிலையில், சுரங்க அமைச்சகத்தின் இணைச் செயலர் திருமதி ஃபரிதா எம்.நாயக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். “நிலையான வளர்ச்சியின் மூலம் சமூகங்களை மேம்படுத்துதல்” என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த கண்காட்சியில், டிஎம்எப்-ஆதரவு சுயஉதவி குழுக்கள் , இந்திய புவியியல் ஆய்வு , இந்துஸ்தான் காப்பர் நிறுவனம் , நால்கோ ஆகியவற்றின் பணிகளை வெளிப்படுத்தும் 18 துடிப்பான அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இந்த அரங்குகள் , உள்ளூர் கைவினைப்பொருட்கள், புதுமையான வாழ்வாதாரத் திட்டங்கள் மற்றும் சமூகம் சார்ந்த முன்முயற்சிகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்துகின்றன, சமூகங்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதிலும், நிலையான நடைமுறைகள் மூலம் தன்னம்பிக்கையை வளர்ப்பதிலும் டிஎம்எப் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதில் அமைச்சகத்தின் வலுவான உறுதிப்பாட்டை திருமதி நாயக் எடுத்துரைத்தார். டிஎம்எப்-ன் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை இயக்குவதில் தீவிரமாக பங்கேற்ற ஒடிசா அரசு, பெருநிறுவன பங்குதாரர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் பங்களிப்புகளை அவர் பாராட்டினார். வரலாற்று மகத்துவம் கொண்ட சூரியன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி, நவீன நிலையான வளர்ச்சியைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், இப்பகுதியின் வளமான கலாச்சார பாரம்பரியத்துடன் இணைக்கிறது. இக்கண்காட்சி உள்ளூர் சமூகங்கள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் பங்கேற்பை ஈர்த்துள்ளது, சுய உதவிக் குழுக்களுக்கு அவர்களின் வெற்றிக் கதைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் எதிர்கால ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் ஒரு மாறும் தளத்தை வழங்குகிறது. நிலையான நடைமுறைகளைச் செயல்படுத்துதல், முழுமையான சமூக வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் நீண்டகால நேர்மறையான மாற்றத்தை உறுதி செய்தல் ஆகியவற்றின் மூலம் சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்துவதற்கு சுரங்க அமைச்சகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை இந்தக் கண்காட்சி முன்னெடுக்கிறது.
Read More »ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பால், கால்நடைகள் தொடர்பான முக்கிய முன்முயற்சிகள்: குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு காணொலி மூலம் தொடங்கி வைத்தார்
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நேற்று (2025 ஜனவரி 13 -திங்கட்கிழமை) ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பால், கால்நடை துறையில் தொடர்ச்சியான பயனுள்ள முக்கிய முன்முயற்சிகளை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறையால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்கள் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், கால்நடை உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், பிராந்தியத்தில் முக்கியமான ஊட்டச்சத்து சவால்களை எதிர்கொள்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன. …
Read More »தில்லியில் புதிதாக கட்டப்பட்ட பணிபுரியும் பெண்கள் விடுதியைத் திறந்து வைத்தார் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா
புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்.டி.எம்.சி) உருவாக்கிய புதிதாக கட்டப்பட்ட பணிபுரியும் பெண்கள் விடுதித் தொகுதியான சுஷ்மா பவனை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார். புதுதில்லி மோதி பாக்கில் அதிநவீன கால்நடை மருத்துவமனையையும் காசொலி மூலம் அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தில்லி துணைநிலை ஆளுநர் திரு. வி.கே. சக்சேனா, புதுதில்லி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. பன்சூரி ஸ்வராஜ் உட்பட பலர் கலந்து …
Read More »கேஎல்இ புற்றுநோய் மருத்துவமனையை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்
கர்நாடக மாநிலம் பெலகாவியில் கேஎல்இ புற்றுநோய் மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜனவரி 3, 2025) திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் , உலகளாவிய ஆய்வின்படி, உலகில் இறப்புக்கு புற்றுநோய் ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்று கூறினார். 2022-ம் ஆண்டில், உலகளவில் 20 மில்லியன் புதிய புற்றுநோயாளிகள் இருந்ததாகவும் 9.7 மில்லியன் இறப்புகள் புற்றுநோயால் ஏற்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 100 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. ஐ.சி.எம்.ஆர் நடத்திய ஆய்வின்படி, 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025-ம் ஆண்டில் …
Read More »குவாலியரில் அதிநவீன ஜிஎஸ்ஐ புவி அறிவியல் அருங்காட்சியகத்தை குடியரசு துணைத்தலைவர் திறந்து வைக்கிறார்
ஜிஎஸ்ஐ புவி அறிவியல் அருங்காட்சியகத்தை குடியரசுத் துணைதலைவர் திரு ஜக்தீப் தன்கர் திறந்து வைக்கிறார். டிசம்பர் 15-ம் தேதி மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மத்தியப்பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல், மத்திய தொலைத்தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே, மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தலைவர் திரு நரேந்திர சிங் தோமர், இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் …
Read More »
Matribhumi Samachar Tamil