இந்தியா-கத்தார் கூட்டு வர்த்தக மன்றக் கூட்டம் நாளை (18.02.2025) புதுதில்லியில் நடைபெறுகிறது. இந்தியாவும் கத்தாரும் தங்கள் பொருளாதார, வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன. மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகத்தின் தொழில் – உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறையும் (DPIIT) இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்தியா – கர்த்தார் இடையே முதலீட்டு வாய்ப்புகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை …
Read More »இந்தியப் பிரதமரின் அமெரிக்கப் பயணத்தையொட்டி வெளியிடப்பட்ட இந்தியா – அமெரிக்கா கூட்டு அறிக்கை
அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடியை, வாஷிங்டனில் நேற்று அதிபர் டொனால்ட் ஜே.டிரம்ப் வரவேற்றார். சுதந்திரமான, சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், பன்முகத்துவத்தை மதிக்கும் இறையாண்மை மற்றும் உலகின் பெரிய ஜனநாயக நாடுகளின் தலைவர்களான, அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி ஆகியோர் இந்தியா-அமெரிக்காவின் உறுதியான உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தினர். இரு நாட்டு மக்களிடையேயான நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் வலுவான ஈடுபாடுகளையும் அவர்கள் உறுதிபடுத்தினர். இரு நாடுகளிடையே “21-ம் நூற்றாண்டிற்கான ராணுவ கூட்டாண்மைக்கான வாய்ப்புகள், விரைவான வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவித்தல்” குறித்து அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி புதிய முயற்சியைத் தொடங்கினர். ஒத்துழைப்பில் மாற்றத்தை …
Read More »பாரம்பரிய மருந்துகள் தர உறுதிப்பாட்டிற்கு இந்தியா – இந்தோனேசியா இடையேயான ஒத்துழைப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது- மத்திய ஆயுஷ் இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ்
பாரம்பரிய மருந்துகள் தர உறுதிப்பாட்டு பிரிவில் ஆயுஷ் அமைச்சகத்தின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தக ஆணையம் மற்றும் இந்தோனேசிய உணவு மற்றும் மருந்து ஆணையம் ஆகியவற்றுக்கு இடையே 2025 ஜனவரி 25-ம் தேதி புதுதில்லியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தோனேசியாவின் அதிபர் திரு. பிரபோவோ சுபியாண்டோ முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்த …
Read More »பிரதமர் திரு. நரேந்திர மோடியின் பிரான்ஸ் பயணம் குறித்த இந்தியா – பிரான்ஸ் கூட்டு அறிக்கை
பிரெஞ்சுக் குடியரசின் அதிபர் திரு. இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, பிப்ரவரி 10 முதல் 12 வரை பிரான்சுக்கு பயணம் மேற்கொண்டார். பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய நாட்களில், பிரான்ஸ் மற்றும் இந்தியா இணைந்து செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சிமாநாட்டிற்குத் தலைமை தாங்கின. இதில், பிளெட்ச்லி பார்க் (நவம்பர் 2023) மற்றும் சியோல் (மே 2024) உச்சிமாநாடுகளின் போது எட்டப்பட்ட முக்கியமான முடிவுகளை செயல்படுத்துவதற்காக, அரசு மற்றும் அரசாங்கத் தலைவர்கள், சர்வதேச …
Read More »மார்சேயில் இந்திய துணைத் தூதரகத்தை பிரான்ஸ் அதிபரும் இந்திய பிரதமரும் இணைந்து திறந்து வைத்தனர்
பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மெக்ரோன் ஆகியோர் இணைந்து மார்சேயில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை இன்று திறந்து வைத்தனர. இந்தத் துணை தூதரகம் திறந்து வைக்கப்பட்டது இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவின் முக்கிய அடையாளமாக அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இந்த நிகழ்ச்சியில் இருநாட்டுத் தலைவர்களையும் அங்கிருந்த வம்சாவளியினர் அன்புடன் வரவேற்றனர். 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் திரு நரேந்திர மோடி …
Read More »உலக ஒலி-ஒளி பொழுதுபோக்கு உச்சிமாநாட்டில் பட உருவாக்க சவால் போட்டியில் 20 நாடுகள் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து 3,300-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன
வேவ்ஸ் என்றழைக்கப்படும் உலக ஒலி-ஒளி பொழுதுபோக்கு உச்சிமாநாட்டில் நடைபெறும் பட உருவாக்க (ரீல் மேக்கிங்) சவால் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா மற்றும் 20 நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்து 3,379 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்தப் போட்டிக்கான வரவேற்பை இது எடுத்துக்காட்டுகின்றன. இந்த உச்சிமாநாட்டின் முக்கிய முயற்சியாக தொடங்கப்பட்டுள்ள இந்தப் போட்டி, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கிற்கான உலகின் மையமாக உருவெடுத்துவரும் இந்தியாவின் செல்வாக்கை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் நாட்டில் விரைவாக வளர்ந்து வரும் டிஜிட்டல் படைப்பாளர் பொருளாதாரத்தையும் …
Read More »அல்ஜீரியா ராணுவ தலைமை தளபதி ஜெனரல் சைத் சானெக்ரிஹா இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார்
அல்ஜீரியாவின் தேசியப் பாதுகாப்பு அமைச்சரின் பிரதிநிதியும், மக்கள் தேசிய இராணுவத் தலைமைத் தளபதியுமான ஜெனரல் சைத் சானெக்ரிஹா 2025 பிப்ரவரி 06 முதல் 12 வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். பெங்களூரில் நடைபெறும் ஏரோ இந்தியா 2025-ன் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்குடன் அவர் உரையாடவுள்ளார். சர்வதேச நாடுகளுடன் ஒருங்கிணைந்து பாதுகாப்பு தொடர்பான நெகிழ்திறன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என்ற தலைப்பில் நடைபெறும் பாதுகாப்பு …
Read More »பூடான் ராணுவத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் பட்டூ ஷெரிங், இந்தியாவிற்கு வருகை
பூடான் ராணுவத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் பட்டூ ஷெரிங் இன்று (01.02.2025) இந்தியாவிற்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதில் ஒரு முக்கியமான அம்சமாக அவரது இந்தப் பயணம் அமைந்துள்ளது. வரும் 6-ம் தேதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் அவர், இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்திய தரப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். கயா செல்லும் அவர் அங்கு அதிகாரிகள் பயிற்சி அகாடமி, பௌத்த கலாச்சார இடங்களைப் பார்வையிடுகிறார். பிப்ரவரி 2 முதல் 5 வரை, ஜெனரல் ஷெரிங் புது தில்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். தேசிய பாதுகாப்பு …
Read More »இந்தியா-ஓமன் கூட்டுக்குழுக் கூட்டம் நடைபெற்றது; வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், உணவு பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் தலைவர்கள் கவனம் செலுத்தினர்
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர் திரு பியூஷ் கோயல் 2025 ஜனவரி 27 முதல் 28 வரை தமது ஓமன் நாட்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டார். இந்த பயணத்தின் போது இந்தியா-ஓமன் கூட்டுக் குழு கூட்டத்தின் 11-வது அமர்வுக்கு, ஓமன் வர்த்தகம், தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திரு கைஸ் பின் முகமது அல் யூசுப்புடன் இணைந்து திரு கோயல் தலைமை தாங்கினார். வர்த்தகம், முதலீடு, …
Read More »கடல்சார் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்தோனேசிய கடற்படை குழுவுக்கு இந்தியா வரவேற்பு
குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இந்தியா வந்துள்ள இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன், அந்நாட்டு கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் முகமது அலியுடன் கூடிய உயர்நிலைக்குழுவும் வந்துள்ளது. தனது இந்தப் பயணத்தின் போது, இந்தோனேசிய கடற்படைத் தளபதி அட்மிரல் முகமது அலி, இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதியை சந்தித்து இருநாடுகளுக்கிடையேயான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இருநாடுகளைச் சேர்ந்த கடற்படைகளின் …
Read More »
Matribhumi Samachar Tamil