Monday, December 08 2025 | 04:43:15 AM
Breaking News

Tag Archives: India

இந்தியாவில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான வாய்ப்புகளை சுய உதவிக் குழுக்கள் பிரதிபலிக்கின்றன: டாக்டர் ஜிதேந்திர சிங்

“பெண்கள் தலைமையிலான வளர்ச்சி”யின் முக்கியத்துவத்துக்கு  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருவதாக மொராகுடி கிராமத்தில் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 3,000 பெண்கள் திரண்டிருந்த கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை புவி அறிவியல் , பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளி, பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார். இந்தியாவில் பெண்கள் …

Read More »

உலகளாவிய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 3.9 சதவீதமாக உள்ளது

2023-ம் ஆண்டில், உலகின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் இந்தியா 6 வது பெரிய நாடாக உள்ளது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட ஜவுளி மற்றும் ஆயத்த ஆடையின் பங்கு 2023-24 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவில் 8.21% ஆக உள்ளது. உலக ஜவுளி மற்றும் ஆடை வர்த்தகத்தில் நமது நாட்டின் பங்கு 3.9 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் முக்கிய ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி இலக்கு நாடுகளாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. மொத்த ஜவுளி மற்றும் …

Read More »

பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டில் இந்தியா தனது நான்காவது ஈராண்டு புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பித்தது

பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டில்(UNFCCC) இந்தியா தனது 4வது ஈராண்டு புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை  30 டிசம்பர் 2024 அன்று சமர்ப்பித்தது. இந்த 4 ஆவது அறிக்கையில் மூன்றாவது தேசிய தொடர்பியல்  புதுப்பிக்கப்பட்டதுடன் 2020 -ம் ஆண்டிற்கான தேசிய பசுமைக்குடில் வாயு இலக்குகளில் அண்மைத் தகவல்கள் சேர்க்கப்பட்டும் உள்ளன. இந்தியாவின் தேசிய சூழ்நிலைகள், தணிவிப்பு நடவடிக்கைகள், தடைகள், இடைவெளிகள், தொடர்புடைய நிதி, தொழில்நுட்பம் மற்றும் திறன் வளர்ப்புக்கான தேவைகள் பற்றிய தகவல்களையும் இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சர் திரு பூபேந்தர் …

Read More »

இந்தியாவின் பொழுதுபோக்கு, படைப்பாற்றல் தொழில்துறையில் இளைஞர்கள் பங்கேற்கப் பிரதமர் அழைப்பு: உலக அரங்கில் இந்தியாவின் படைப்பாற்றல் சக்தியை வெளிப்படுத்த வேவ்ஸ்-சில் இணைய அழைப்பு

பிரதமர் திரு நரேந்திர மோடி, ‘மனதின் குரல்’ 117-வது நிகழ்ச்சியில் , இந்தியாவின் படைப்பாற்றல், பொழுதுபோக்குத் துறையில் ஒரு முக்கிய மைல்கல் குறித்து உற்சாகமான செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர், 2025 பிப்ரவரி 5 முதல் 9 வரை, முதல் முறையாக உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை (WAVES) இந்தியா நடத்தும் என்று கூறினார். வேவஸ் உச்சி மாநாடு: இந்தியாவின் படைப்பாற்றல் திறமைக்கான உலகளாவிய மேடை வேவ்ஸ் …

Read More »

இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒப்பந்தமும் வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகி வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன

இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தமும் வர்த்தக ஒப்பந்தமும் (இந்தியா-ஆஸ்திரேலியா ECTA) இரண்டு ஆண்டு குறிப்பிடத்தக்க வெற்றியை நிறைவு செய்துள்ளது, பரஸ்பர வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, இரு பொருளாதாரங்களின் பரஸ்பர திறனையும் இது வெளிப்படுத்துகிறது. இந்தியா-ஆஸ்திரேலிய இசிடிஏ வர்த்தக உறவுகளை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. இரு நாடுகளிலும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், வணிகங்கள், வேலைவாய்ப்புகளுக்கு புதிய வாய்ப்புகளை இந்த ஒப்பந்தம் உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் அவர்களின் பொருளாதார ஒத்துழைப்பின் அடித்தளத்தை இது வலுப்படுத்துகிறது.  …

Read More »

இந்தியா-நேபாள கூட்டு ராணுவப் பயிற்சிக்காக இந்திய ராணுவக் குழு நேபாளம் புறப்பட்டது

சூர்ய கிரண் என்ற கூட்டு ராணுவப் பயிற்சியின் 18-வது பதிப்பில் பங்கேற்பதற்காக 334 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவக் குழு இன்று நேபாளத்திற்குப் புறப்பட்டது. இந்த பயிற்சி நேபாளத்தின் சல்ஜண்டியில் 2024 டிசம்பர் 31 முதல் 2025 ஜனவரி 13 வரை நடத்தப்படும். இது இரு நாடுகளிலும் மாறி மாறி நடத்தப்படும் வருடாந்திரப் பயிற்சி நிகழ்வாகும். இந்திய இராணுவப் பிரிவை 11-வது கோர்கா ரைபிள்ஸைச் சேர்ந்த ஒரு படைப் பிரிவு வழிநடத்துகிறது. நேபாள …

Read More »

மலேரியா ஒழிப்பில் இந்தியாவின் முன்னேற்றம் -மலேரியா இல்லாத நிலையை நோக்கிய பயணத்தில் இந்தியா முன்னேறி வருகிறது

மலேரியா இல்லாத எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் பயணம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தின் கதையாகும். 1947-ல் சுதந்திரத்தின் போது, மலேரியா மிகவும் முக்கியமான பொது சுகாதார சவால்களில் ஒன்றாக இருந்தது. ஆண்டுதோறும் 7.5 கோடி பேர் பாதுக்காப்பட்டு 800,000 இறப்புகள் பதிவானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பல ஆண்டு, இடைவிடாத முயற்சிகள் இந்த எண்ணிக்கையை 97% க்கும் அதிகமாக வெகுவாகக் குறைத்துள்ளன. பாதிப்பு வெறும் 20 லட்சமாகவும், மலேரியா இறப்புகள் 2203-ம் ஆண்டில் வெறும் 83 ஆகவும் குறைந்துள்ளன. இந்த வரலாற்று சாதனை, மலேரியாவை ஒழிப்பதிலும், மக்களுக்கு …

Read More »

புத்தொழில்களின் தேசம் இந்தியா – உலகளாவிய தொழில்முனைவின் எதிர்கால மையம்

உலகளவில் மிகவும் துடிப்பான புத்தொழில் சூழல் அமைப்புகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. 3-வது பெரிய புத்தொழில் மையமாக இந்தியா தனது இடத்தைப் பெற்றுள்ளது. 100+ க்கும் மேற்பட்ட யூனிகார்ன்களுடன், இந்திய புத்தொழில் சூழல், புதுமை, தொழில்முனைவின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது. இந்தியாவில் 73,000 க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்களில் குறைந்தது ஒரு பெண் இயக்குநர் உள்ளார். அவை ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சியின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது அரசால் ஆதரிக்கப்படும் 1,57,066 புத்தொழில் நிறுவனங்களில் கிட்டத்தட்ட பாதியாகும். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் தொழில்முனைவோர் உணர்வு ஒரு முன்னுதாரண மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, தில்லி போன்ற நகரங்கள் …

Read More »

உலகின் உணவு உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும்: திரு சிவராஜ் சிங் சவுகான்

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறையின் பங்களிப்பு 18 சதவீதமாக உள்ளது. குறிப்பாக கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில், நாட்டின் வேளாண் துறை பிற நாடுகளைக் காட்டிலும் வலுவானதாக இருந்தது  என்பதை உலக நாடுகள்  அறிந்து கொண்டுள்ளன. இந்தத் துறையை வலுப்படுத்த மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவை உலகின் உணவு உற்பத்தி மையமாக உருவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு  வருவதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் …

Read More »

குவைத் பிரதமரை, பிரதமர் சந்தித்தார்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குவைத் நாட்டின் பிரதமர் ஷேக் அகமது அல்-அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களும் அரசியல், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு,  சுகாதாரம், கல்வி, தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட துறைகளில் உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான செயல் திட்டம்  குறித்து விவாதித்தனர். இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர்கள் வலியுறுத்தினர். எரிசக்தி, பாதுகாப்பு, மருத்துவ சாதனங்கள், மருந்து, உணவுப் பூங்காக்கள் உள்ளிட்ட துறைகளில் புதிய வாய்ப்புகளை ஆராய குவைத் முதலீட்டு ஆணையம் மற்றும் பிற பங்குதாரர்கள் அடங்கிய குழுவை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார். பாரம்பரிய மருத்துவம் மற்றும் விவசாய ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர். கூட்டுறவுக்கான கூட்டு ஆணையத்தில் (ஜேசிசி) சமீபத்தில் கையெழுத்திட்டதை அவர்கள் வரவேற்றனர், இதன் கீழ் சுகாதாரம், மனிதவளம் மற்றும் ஹைட்ரோகார்பன்கள்,  தொடர்பான ஏற்கனவே உள்ள கூட்டுப் பணிக்குழுக்களுடன்,  கூடுதலாக வர்த்தகம், முதலீடு, கல்வி, தொழில்நுட்பம், விவசாயம், பாதுகாப்பு, கலாச்சாரம் ஆகிய துறைகளில் புதிய கூட்டுப் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தைக்குப் பிறகு தலைவர்கள் முன்னிலையில், இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு பரிமாற்றம் செய்யப்பட்டன. பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கலாச்சார பரிமாற்ற திட்டம், விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்கான நிர்வாகத் திட்டம் மற்றும் குவைத் சர்வதேச சோலார் கூட்டணியில் இணைவதற்கான கட்டமைப்பு ஒப்பந்தம் ஆகியவை இதில் அடங்கும். இந்தியா வருமாறு குவைத் பிரதமருக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

Read More »