2024 டிசம்பர் 11 முதல் 14 வரை நேபாள ராணுவத் தளபதி சுப்ரபால் ஜனசேவஸ்ரீ ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல் இந்தியாவுக்கு வருகை தந்தது, நேபாள ராணுவத்திற்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இரு தரப்பிலும் மூத்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையிலான முக்கிய ஈடுபாடுகளைக் கண்ட இந்தப் பயணம், பாதுகாப்பு நலன்களின் பகுதிகளில் மேம்பட்ட இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு, பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. தமது பயணத்தின் போது, ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல், இந்திய ராணுவத்தின் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியுடன் தொடர்ச்சியான பயனுள்ள விவாதங்களில் ஈடுபட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், இரு நாட்டு ராணுவங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது, ஆழப்படுத்துவது குறித்து இந்த பேச்சுவார்த்தை கவனம் செலுத்தியது. இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜீத் தோவல் உள்ளிட்ட பலருடன் அவர் பேச்சு நடத்தினார். ஜெனரல் அசோக் ராஜ் சிக்டலின் வருகை இந்திய மற்றும் நேபாள ராணுவங்களுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மேம்படுத்துவதில் ஒரு மகத்தான வெற்றியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலே கோடிட்டுக் காட்டப்பட்ட பல்வேறு முன்முயற்சிகள், இரு ராணுவங்களுக்கும் இடையே ஆழமான வேரூன்றிய பிணைப்பை வலுப்படுத்துவதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.
Read More »விண்வெளி, கடல் மற்றும் இமயமலை வளங்கள், இந்தியாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமாக பங்களிக்கும் – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
2047-ம் ஆண்டிற்கான வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு, உலகளாவிய உத்திகள் அளவுகோல்களை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம் என மத்திய அறிவியல் – தொழில் நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். தில்லி பாரத் மண்டபத்தில் முன்னணி ஊடக நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த “இந்திய பொருளாதார மாநாட்டில்” அவர் பங்கேற்றுப் பேசினார். பிரதமர் திரு நரேந்திர மோடி பதவியேற்பதற்கு முன்பு இந்தியாவின் விண்வெளி, கடல், …
Read More »இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் சமநிலையான, லட்சியமான, விரிவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கமாகக் கொண்டுள்ளன: பியூஷ் கோயல்
ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, செக் குடியரசு, எஸ்டோனியா, இத்தாலி, அயர்லாந்து, லாட்வியா, லிதுவேனியா, மால்டா, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவாக் குடியரசு, ஸ்பெயின், ஸ்வீடன் ஆகிய ஐரோப்பிய ஆணைய தூதுக்குழுவினருடன் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கலந்துரையாடினார். இந்தக் கூட்டத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு. ஜிதின் பிரசாதா, வர்த்தகத் துறை செயலாளர், டிபிஐஐடி செயலாளர் மற்றும் ஏனைய மூத்த அதிகாரிகள் …
Read More »விண்வெளித் துறையில் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற முயற்சி
இந்தியாவின் விண்வெளி தொலைநோக்குத் திட்டம் 2047-ல் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளை அடைய மத்திய அரசு குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகள் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், சர்வதேச கூட்டாண்மைகள், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் விண்வெளி ஆய்வு பணிகளை முன்னெடுத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. விண்வெளி நடவடிக்கைகளில் இந்திய தனியார் துறையின் பங்களிப்பை அனுமதிக்க மத்திய அரசு 2020-ம் ஆண்டில் விண்வெளித் துறை சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. 2035-க்குள் பாரதிய விண்வெளி நிலையத்தை நிறுவவும், 2040-க்குள் நிலவில் இந்தியரை தரையிறக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட விண்வெளி தொலைநோக்கு 2047-ஐ மத்திய …
Read More »இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் ஏழு தூண்கள் -மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்
மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ், மக்களவையில் செயற்கை நுண்ணறிவு ஆளுமை மற்றும் வளர்ச்சி குறித்த கேள்விக்கு நாடாளுமன்றத்தில் இன்று பதிலளித்தார். செயற்கை நுண்ணறிவு பரவலாக்கப்பட வேண்டும் என்பதை உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவு குறித்த மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வை குறித்து அவர் விரிவாக விளக்கினார். நன்கு வரையறுக்கப்பட்ட ஏழு தூண்களின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் மாற்றத்தக்க தாக்கத்தை மத்திய …
Read More »
Matribhumi Samachar Tamil